பாட்ஷாவுக்கு இன்று 28 வயது
ஜன 12, 2022
Advertisement
தமிழ் சினிமாவில் ஒரு படத்தை எத்தனை முறை பார்த்தாலும் போரடிக்காத ஒரு படமாக இருக்கும் படங்களில் "பாட்ஷா" படத்திற்கும் தனி இடமுண்டு. சத்யா மூவீஸ் தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், தேவா இசையமைப்பில், ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்த இப்படம் ஜனவரி 12ம் தேதி 1995ம் ஆண்டு வெளிவந்தது.
அதற்கு முன்பு வெளிவந்த ரஜினி படங்களைக் காட்டிலும் இந்தப் படம் பெற்ற வெற்றி பெரிய வெற்றியாக அமைந்தது. அமிதாப்பச்சன் நடித்து ஹிந்தியில் வெளிவந்த "ஹம்" படத்தின் ரீமேக்தான் இப்படம் என்றாலும் ஒரு நேரடி தமிழ்ப் படத்தைப் பார்த்த உணர்வுதான் இப்படத்தைப் பார்க்கும் போது பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.
ஒரு ஆக்ஷன் படத்தில் இந்த அளவிற்கு சென்டிமென்ட் காட்சிகளையும் வைக்க முடியுமா என அப்பா, அம்மா, தம்பி, தங்கைகள், நண்பன் என சென்டிமென்ட்டுகளுக்கும் குறைவில்லாத படம். காதலும், காமெடியும் கூட படத்தில் சரி விகிதத்தில் கலக்கப்பட்டிருக்கும்.
எம்எஸ்வி, இளையராஜா என இருவரும் ரஜினி படங்களுக்கு இசையமைத்து வரலாறு படைத்தவர்கள். அவர்களுக்கு ஈடாக "பாட்ஷா" படத்தில் பின்னணி இசை, பாடல்கள் என தேவாவும் தன் திறமையை வெளிப்படுத்தினார் என்பது மிகையல்ல.
இந்தக் காலத்திலும் வெளிவரும் பல ஹீரோயிசப் படங்களுக்கு இருக்கும் ஒரே ரெபரென்ஸ் "பாட்ஷா" தான் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ரஜினியின் அசத்தல் ஆக்ஷன் படங்களில் எது நம்பர் 1 என்று கேட்டால், இந்தக் கால குழந்தைகள் கூட "பாட்ஷா" என்றுதான் சொல்லுவார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!