
20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர்
மே 18, 2026
Advertisement
சென்னை அடையாறு ஆற்றில் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பார் கே.ராஜன் உடல் இன்று சென்னை தண்டையார்பேட்டை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை காசிமேடு மயானத்தில் இறுதி சடங்கு நடக்கிறது. இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அவர் மரணம் குறித்து பல்வேறு தகவல் பரவி வரும் நிலையில், கே.ராஜனின் மகன், மகள் அளித்த பேட்டியில், ""அப்பா கே.ராஜன் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் விதவை தாயால் வளர்க்கப்பட்டவர். தன்னையே செதுக்கிக் கொண்டவர்.. சினிமா எனும் சமுத்திரத்தில் தைரியமாக கால் எடுத்துவைத்தவர்.
திருட்டு விசிடி ஒழிக்க தைரியமாக இருந்து வழக்கை சந்தித்தவர். ஹேராம் படத்துக்கு தைரியமாக போராடியவர், ஆனால் கமல் கடைசி வரை நன்றி சொல்லவில்லை. திரையுலகினர் கடைசியாக அவரை வந்து பார்த்து நன்றி சொல்ல வேண்டும். அவரை பற்றி யாரும் தவறாக பேச வேண்டாம். அவர் கடனாளி அல்ல. அவர்தான் கடன் கொடுத்தார். அவர் கொடுத்த பணத்தில் 20 கோடி வரை இன்னும் வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் யூடியூப்பில் பேச பணம் வாங்குவார். அதை கூட படிக்கும் மாணவர்களுக்கு கொடுத்தார்.
கடன் வராததால் இரண்டு வருடமாக மன உளைச்சலில் இருந்தார். கடன் கொடுத்தவர்கள் போன் கூட எடுக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்திற்கு பணம் கொடுத்திருந்தார். வாங்கியவர்கள் பணத்தை திருப்பி தரவில்லை. மாரடைப்பு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இப்போதுதான் பேஸ்மேக்கர் வைத்துவிட்டு வந்தார். இனியாவது மனம் திருந்தி பணம் தருவார்களா என்று பார்க்கலாம். பணம் வாங்கியவர்கள் பற்றி அப்பா எங்களிடம் சொல்லியுள்ளார். தயாரிப்பாளர் சங்க, விநியோகஸ்தர் சங்கத்திடம் கடன் பற்றி கூறியிருக்கிறோம். மனம் திருந்தி அவர்கள் பணம் திருப்பி தர வேண்டும். ராஜனுக்கு செய்யும் மிகப் பெரிய மரியாதை அது."" என்றார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!