
விஜய் சேதுபதி எனக்கு பிடித்த நடிகர் - ஷாருக்கான்
ஜூன் 21, 2023
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம், "ஜவான்". இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் வருகின்ற செப் 7ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு ஷாருக்கான் சமீபத்தில் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் , “ஜவான் படத்தில் நடிப்பது பெரிய சவாலாக இருந்தது . இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி மிகவும் கூலாக இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் அவரும் ஒருவர். ஜவான் படத்தில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்” என பகிர்ந்துள்ளார் .
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!