
சான் டியாகோ காமிக் கான் விழாவில் ராமாயணா படத்தின் டிரைலர் திரையிடப்படுகிறது!
சுமார் 4,800 பேர் அமரக்கூடிய, காமிக்-கான் விழாவின் இரண்டாவது மிகப்பெரிய அரங்கமான பால்ரூம் 20-ல் இந்த அறிமுக நிகழ்வு நடைபெறுகிறது. சமீபத்தில் இப்படத்தின் 4 நிமிடங்கள் 15 வினாடிகள் கொண்ட டிரைலருக்கு தணிக்கை வாரியம் யு சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ராமாயணா படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் திரைக்கு வரவுள்ளது.
சர்வதேச ஹாலிவுட் படங்களுக்கு இணையான பிரம்மாண்ட விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்துடன், இந்தியச் சினிமா வரலாற்றிலேயே மிக அதிக பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், கே.ஜி.எப் புகழ் யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் ஹனுமனாகவும் நடிக்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!