தி இந்தியா ஸ்டோரி படப்பிடிப்பு துவங்கியது : சொல்லப்படாத கதை என்கிறார் காஜல்
ஜன 27, 2025
Advertisement
நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னனி கதாநாயகியாக வலம் வந்தவர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். சேத்தன் டிகே இயக்கும் "தி இந்தியா ஸ்டோரி" எனும் படத்தில் காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தை பூஜையுடன் அறிவித்தனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை புனேவில் தொடங்கியுள்ளனர் என காஜல் அகர்வால் அவரது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் சொல்லப்படாத கதை, தாக்கத்தை ஏற்படுத்த போகிற கதை. ஆக., 15 தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், தியேட்டரில் படம் வெளியாகிறது என தெரிவித்துள்ளார் காஜல்.
விவசாயம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து ஊழலை மையமாக வைத்து இப்படம் உருவாகுகிறது என தவகல் வெளியாகி உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!