பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி
மே 08, 2026
Advertisement
கன்னடத்தில் நடிகர் துருவ சார்ஜா நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான படம் ‛கேடி : தி டெவில்". பிரேம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ஒரு பாடலுக்கு பாலிவுட் நடிகையான நோரா பதேகி இணைந்து நடனமாடியுள்ளார். கடந்த மாதம் இந்தப் பாடலின் ஹிந்தி வெர்ஷன் வெளியான போது, அதன் வரிகளில் மிகுந்த ஆபாசம் இருப்பதாக மிகப்பெரிய அளவில் குற்றச்சாட்டு எழுந்தது..
இதனைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்து இந்தப் பாடலில் நடித்திருந்த சஞ்சய் தத் மற்றும் நோரா பதேகி ஆகியோருக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியிருந்தது. கடந்த வாரம் சஞ்சய் தத் மகளிர் ஆணையம் முன்பாக ஆஜராகி, இந்தப் பாடல் படமாக்கப்பட்டபோது வேறு மொழியில் இருந்ததால் எனக்கு அந்த வரிகளின் அர்த்தம் தெரியாது என்றும், இருந்தாலும் அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்காக மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். மேலும் இதற்குப் பிராயச்சித்தமாக பழங்குடியின குழந்தைகள் 50 பேருக்கு கல்வி நிதி அளிப்பதாகவும் உறுதியளித்தார்.
தற்போது நடிகை நோரா பதேகியும் மகளிர் ஆணையத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஒரு கலைஞராகப் பொறுப்புடன் நடந்து கொள்வதாகவும் உறுதியளித்தார். மேலும் அவர் சஞ்சய் தத்தைப் போலவே அனாதை பெண் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கப் போவதாக அறிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!