
மனைவி கியாரா அத்வானி படத்துடனான மோதலை தவிர்த்த சித்தார்த் மல்ஹோத்ரா
தற்போதைய புதிய தகவலின்படி, இப்படம் செப்டம்பர் 25ம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதியை அறிவிப்பதற்காக படக்குழுவினர் ஒரு மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதோடு, படத்தின் க்ளைமாக்ஸ் உள்ளிட்ட சில முக்கியமான காட்சிகளை மேலும் வலுப்படுத்துவதற்காக, படப்பிடிப்பை சில நாட்கள் நீட்டிக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தை தள்ளி வைத்ததி ன் மூலம், ஆகஸ்ட் 26 அன்று வெளியாகவிருக்கும் தனது மனைவி கியாரா அத்வானியின் புதிய படமான டாக்ஸிக் உடனான மோதலையும் சித்தார்த் மல்ஹோத்ரா தவிர்த்துள்ளார். தி வான் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க , ஸ்வேதா திவாரி, சுனில் குரோவர், மணீஷ் பால் மற்றும் அனூப் சோனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தீபக் குமார் மிஷ்ரா இப்படத்தை இயக்குகிறார். ஏக்தா கபூர் மற்றும் ஷோபா கபூர் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!