அபிஷேக் பச்சனின் வரலாற்று படத்தில் கெஸ்ட் ரோலில் சல்மான்கான்
ஏப் 20, 2026
Advertisement
பாலிவுட்டில் பிரபல நடிகரும், தயாரிப்பாளரும், நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக் தற்போது வீர சிவாஜியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி உருவாகியுள்ள ராஜா சிவாஜி என்கிற படத்தை இயக்கியுள்ளார். மராத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதன் மூலம் அபிஷேக் பச்சன் முதன்முறையாக மராத்தியில் அடி எடுத்து வைத்துள்ளார். இதில் சாம்ராஜ் சாஹாஜி போஸ்லே என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அபிஷேக் பச்சன். சிவாஜி மகாராஜா கதாபாத்திரத்தில் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ளார்.
கதாநாயகிகளாக வித்யாபாலன் மற்றும் ஜெனிலியா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சல்மான்கான் நடித்துள்ளார் என்கிற தகவலை ரித்தேஷ் தேஷ்முக் வெளியிட்டுள்ளார். மராத்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ரித்தேஷ் தேஷ்முக் அந்த நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடின் போது சல்மான் கான் இந்த படத்தில் நடிக்கிறார் என்கிற சஸ்பென்ஸை உடைத்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!