டாப் 10ல் இடம் பிடிக்கத் தவறிய ராமாயணா டிரைலர்
ஜூலை 31, 20261
இந்திய சினிமாவில் இந்த வருடத்தில் வெளியாக உள்ள படங்களில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் "ராமாயணா". நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, ரவி துபே, சன்னி தியோல், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம்.
இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரத்தில் அந்த டிரைலர் வெளியான அனைத்து யு டியுப் சேனல்களிலும் சேர்த்து 48.9 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது.
ராமாயணக் கதையாக, பிரபாஸ் நடித்து வெளிவந்த "ஆதிபுருஷ்" படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் பெற்ற 74 மில்லியன் பார்வைகளையும் இந்த "ராமாயணா" டிரைலர் நெருங்கவில்லை.
மேலும், இந்திய சினிமாவில் 24 மணி நேரத்தில் சாதனை படைத்த டாப் 10 டிரைலர்களின் பட்டியலிலும் இடம் பெற முடியவில்லை.
பிரபாஸ் நடித்த "சலார்" டிரைலர் 113 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்திலும், யஷ் நடித்த "கேஜிஎப் 2" டிரைலர் 106 ல்லியன் பார்வைகளுடன் இரண்டாம் இடத்திலும், அல்லு அர்ஜூன் நடித்த "புஷ்பா 2" டிரைலர் 104 மில்லியன் பார்வைகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
டிரைலர் அதிகப் பார்வைகளைப் பெற்று சாதனை படைக்கவில்லை என்றாலும், அதன் உருவாக்கம், நட்சத்திரத் தேர்வு ஆகியவை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த வருட தீபாவளிக்கு "ராமாயணா" படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்நான் பார்த்தேன்.. காஸ்ட்லி பொம்மை படம் மாதிரி இருக்கு. ராமாயணம் க்கு ஏற்ற மிடுக்கு இல்லை.. இதுக்கு எதுக்கு 4000 கோடி செலவு என்று தெரியவில்லை.. ஷங்கர் கிட்ட கொடுத்தா 400 கோடி ராஜ mouli kitta koduthaa 500 கோடி போதும் அத விட நம்ப ஊரு மணி கிட்ட கொடுத்தால் மைலாப்பூர்லயே படத்தை 100 கோடி ல எடுத்து வெற்றி படமா கொடுத்து விடுவார்..