வெளிநாடுகளில் முன்கூட்டியே திரையிடப்படும் ராமாயணா
ஆக 08, 2026
Advertisement
ஹிந்தியில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராமாயணா. நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இப்படத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, இந்தியத் திரையரங்குகளில் ராமாயணா படத்தின் முதல் பாகம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 8ம் தேதி அன்று வெளியாகும் என்று கூறியுள்ளார்.
ஆனால், ராமாயணா படத்தை சர்வதேச அளவில் வெளியிடும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படம் நவம்பர் 6 அன்றே வெளிநாட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம், வெளிநாடுகளில் இப்படம் வெளியான இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் இந்தியாவில் வெளியாகவுள்ளது தெளிவாகிறது.
இந்த தாமதமான வெளியீட்டால் இணையத்தில் படம் கசியக் கூடும் என்று படக்குழுவினர் கவலை தெரிவிப்பதுடன், உலகம் முழுவதும் ஒரே நாளில் படத்தை வெளியிட வேண்டும் என தயாரிப்பாளருக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதையடுத்து இதுகுறித்த ஆலோசனையில் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா ஈடுபட்டிருப்பதாக கூறுகிறார்கள். அதனால் ராமாயணா படம் வெளிநாடுகளில் வெளியாகும் அதே நவம்பர் 6ஆம் தேதியே இந்தியாவிலேயும் வெளியாகுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும், உலகளவில் இப்படத்தை சுமார் 50,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!