சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கியாரா அத்வானி
மார் 28, 2026
Advertisement
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கியாரா அத்வானி. 2014ல் வெளிவந்த "பக்லி" படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். "எம்எஸ் தோனி" படம் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். “கபீர் சிங், குட் நியூஸ், பூல் புலையா, ஷெர்ஷா” உள்ளிட்ட படங்களிலும் அதிகம் பேசப்பட்டவர். தெலுங்கில், "பரத் அனி நேனு, வினய விதேய ராமா, கேம் சேஞ்ஜர்" ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் கியாரா அத்வானியின் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகப் பரவி வருகின்றன. ஒரு நிகழ்ச்சியில் அவரும் மற்றொரு ஹிந்தி நடிகையான அனன்யா பான்டேவும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்ட ஒரு வீடியோ வெளிவந்தது. அந்த வீடியோ இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களில் திடீரென வைரலாகப் பரவியது.
அந்த வீடியோவைத் தொடர்ந்து அடுத்தடுத்து கியாராவின் பழைய வீடியோக்களையும் தேடிப் பிடித்து சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஒவ்வொன்றும் அவரது அசத்தலான கிளாமர் ஆடையுடன் கூடிய வீடியோக்களாக இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எது, எப்போது, எப்படி வைரலாகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அது தற்போது கியாராவின் வீடியோ மூலம் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!