ரவீணா டான்டன் தாயார் வீட்டில் 25 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு
ஜூன் 02, 2026
Advertisement
பாலிவுட் நடிகை ரவீணா டான்டன் தமிழில் சாது, ஆளவந்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மும்பையில் ஜூஹூ பகுதியில் வசித்து வந்த இவரது தாயார் வீணா டாண்டன் பயன்படுத்தி வந்த தங்க, வைர நகைகள் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் என கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டதாக தற்போது ஒரு பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ரவீணாவின் சகோதரர் ராஜீவ் டாண்டன் மும்பை ஜூஹூ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த வீட்டில் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக பராமரிப்பாளராக வேலை செய்து வந்த ராசி சுப்ரியா என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே ரவீணா குடும்பத்தின் நம்பிக்கையை பெற்றிருந்த அவர் வீட்டின் தனிப்பட்ட பகுதிகளுக்கும் சென்று வரும் வாய்ப்பை பெற்று இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேசமயம் ரவீணா டான்டன் இந்த சம்பவம் குறித்து இன்னும் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!