ஹிந்தியில் ஒரே படத்தில் இணைந்த ஜான்வி கபூர், ஸ்ரீலீலா
ஆக 08, 2026
Advertisement
ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர், தற்போது பான்-இந்தியா நடிகையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். அதேபோல், தெலுங்கு சினிமாவில் பிரபலமான ஸ்ரீலீலா தற்போது தமிழ், ஹிந்தி படங்களிலும் நடித்து பான் இந்தியா நடிகையாக வேகமாக வளர்ந்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டில் வெளியாகியுள்ள செய்தின்படி, உமேஷ் பிஸ்ட் என்பவர் இயக்கும் ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் படத்தில் ஜான்வி கபூர், ஸ்ரீலீலா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை ஏக்தா கபூர் மற்றும் குனீத் மோங்கா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
பெண்களை மையமாகக் கொண்ட இந்தப்படம், ஒரே ஆண் மீது ஈர்ப்பு கொள்ளும் இரண்டு பெண்களைப் பற்றிய கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அந்த ஆணின் கவனத்தைப் பெற இந்த இரு பெண்களும் ஒருவருக்கொருவர் போட்டியிடும் கதாபாத்திரங்களில் ஜான்வி மற்றும் ஸ்ரீலீலா நடிக்கவுள்ளனராம்.
இந்த படம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் பட்சத்தில், திரையுலகின் இரு வேறு தலைமுறைகளைச் சேர்ந்த நடிகைகளின் சுவாரஸ்யமான கூட்டணியாக இது அமையும். சமீபத்திய படங்களைப் பொறுத்தவரை, ஜான்வி கபூர் கடைசியாக ராம் சரணின் பெத்தி படத்தில் நடித்திருந்தார். ஸ்ரீலீலா தற்போது தனுஷின் ஓம் படத்தில் நடித்து வருகிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!