
காந்தாரா அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு
இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் சி.ஜி.மலையாளி, ""ரன்வீர் சிங் நேரடியாக வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். வழக்கறிஞர் குழு மூலம் மன்னிப்பு கேட் பதை ஏற்க கூடாது"" என்றார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிமன்றம் “கர்நாடக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை. சாமுண்டி மலைக்கு வந்து தெய்வத்தை வணங்கி, மன்னிப்பு கேட்கட்டும். அதன்பிறகு வழக்கை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கலாம்" என்றது. இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த மாதம் 10ம் தேதி நடக்கும் என்று அறிவித்தது.
இந்த வழக்கில் அறியாமல் செய்த பிழைக்காக மன்னிப்பு கேட்ட பிறகும், எழுத்துபூர்வமான மன்னிப்புக்கு தயாரானபோதும் கர்நாடக உயர்நீதிமன்றம் கடுமையாக நடந்து கொள்வதால் உச்சநீதி மன்றத்தை நாட ரன்வீர் சிங் தரப்பு முயன்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!