
4 நாட்களில் 761 கோடி வசூலித்த துரந்தர் 2
இந்தியாவில் மட்டும் 550 கோடியும், வெளிநாடுகளில் 211 கோடியும் வசூலித்துள்ளது என தெரிவித்துள்ளனர். மிக விரைவில் இந்தப் படம் 1000 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்திய மொழிகளில் திட்டமிட்டபடி அதேநாளில் வெளியாகி இருந்தால் வசூல் இன்னும் கூடுதலாக அமைந்திருக்கும்.
நேரடி ஹிந்திப் படங்களில் முதல் வார இறுதியில் அதிக வசூலைக் குவித்துள்ள படம் என்ற சாதனையை இந்தப் படம் பிடித்துள்ளது. இந்திய அளவில் "புஷ்பா 2" படம் சுமார் 790 கோடி வசூலில் முதலிடத்தில் உள்ளது.
2025ல் வெளிவந்த "துரந்தர்" முதல் பாகம் 1400 கோடி வசூலைக் கடந்தது. அந்த சாதனையை இரண்டாம் பாகம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!