
கங்கனாவின் குயின் 2 படத்தை எதிர்த்து வழக்கு
அப்படத்தை பாண்டம் பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது அந்நிறுவனம் "குயின் 2" படத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளது. இப்படத்தை விகாஷ் பால் இயக்க கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து, அடுத்த கட்ட வேலைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் தங்களிடம் உரிமம் பெறாமல் இரண்டாம் பாகத்தைத் தயாரித்து வருவதாக பாண்டம் பிலிம்ஸ் நிறுவனம் 250 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியான பாகங்களைத் தயாரிக்கும் உரிமம், குயின் படத்தின் அறிவுசார் சொத்துரிமையில் 50 சதவீதப் பங்கு ஆகியவை தங்களுக்கு இருக்கிறது. இரண்டாம் பாகம் தயாரிக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.
இப்படத்திற்கு ஜியோ ஸ்டார் நிறுவனம் பின்னணியில் இருப்பதாக அவர்கள் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இரண்டாம் பாகத்தின் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகை என யாரும் இதுவரையில் எதுவும் சொல்லவில்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!