200 கோடி வசூலைக் கடந்த பூத் பங்களா
மே 04, 2026
Advertisement
பிரியதர்ஷன் இயக்கத்தில், அக்ஷய்குமார், பரேஷ் ராவல், தபு மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ஹிந்திப் படம் "பூத் பங்களா". தொடர்ந்து தோல்விகளால் தடுமாறி வந்த அக்ஷய்குமாருக்கு இந்தப் படம் மீண்டும் வெற்றியைக் கொடுத்து அவரை மீட்டெடுத்துள்ளது.
இரண்டு வாரங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் தற்போது 200 கோடி வசூலையும் கடந்துள்ளது. அக்ஷய்குமார் நடித்து வெளிவந்த படங்களில் 200 கோடியைக் கடந்த 12வது படமாகவும், 100 கோடியைக் கடந்த 20வது படமாகவும் இப்படம் அமைந்துள்ளது.
2026ல் வெளிவந்த ஹிந்திப் படங்களில் அதிக வசூலைக் குவித்த 3வது படமாக இருக்கிறது. 1800கோடிகளைக் கடந்துள்ள "துரந்தர் 2" முதலிடத்திலும், 450 கோடிகளைக் கடந்த "பார்டர் 2" படம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்தப் படத்தின் வெற்றியால் அக்ஷய் வைத்து படமெடுத்து வரும் தயாரிப்பு நிறுவனங்கள் மகிழ்ச்சியில் உள்ளன.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!