
மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல்
இது குறித்து அவர் கூறும்போது, “என்னுடைய மகள் ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு நபர் அவரை அடிக்கடி உற்சாகப்படுத்துவது போல் பேசி அறிமுகமானார். ஒரு சில நாட்கள் கழித்து திடீரென என் மகளின் நிர்வாண படத்தை அனுப்பும்படி கூறினார். உடனடியாக என் மகள் சுதாரித்துக் கொண்டு மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு இந்த தகவலை தன் அம்மாவிடம் சென்று கூறினார்.
ஏழாவது முதல் பத்தாவது வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை வகுப்பறையில் ஆசிரியர்களும் வீட்டில் பெற்றோரும் ஏற்படுத்த வேண்டும். அப்படி என்றால் தான் பெரும்பாலான பெண் குழந்தைகள் இந்த சைபர் கிரைம் தாக்குதல் ஆகாமல் தப்பிப்பார்கள்” என்று பேசினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!