ஆகன்ஷா புரியை திருமணம் செய்யும் பாடகர்: சுயம்வரம் மூலம் தேர்வு செய்தார்
ஜூலை 27, 2022
Advertisement
தமிழில் கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், விஷாலுடன் ஆக்ஷன் உட்பட சில படங்களில் நடித்துள்ளவர் ஆகன்ஷா புரி. இந்தி சின்னத்திரை நடிகையான இவர் "விநாயகர்" என்ற தமிழ் தொடரில், பார்வதி தேவியாக நடித்திருந்தார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.
தமிழில் ஆர்யா சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தியது போன்று பிரபல இந்தி பாடகர் மிகா சிங் மணமகளைத் தேர்வு செய்யும் சுயம்வரம் நிகழ்ச்சி ஒன்றை தனியார் சேனலில் நடத்தினார். இதில் 12 இளம் பெண்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஆகன்ஷா புரியை மணமகளாக தேர்வு செய்தார் மிகா சிங்.
சுயம்வர நிகழ்ச்சியிலேயே மாலை மாற்றிக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். பாடகர் மிகா சிங், பிரபல பாடகர் தாலர் மெகந்தியின் சகோதரர். மிகா சிங்கும், ஆகன்ஷா பூரியும் காதலித்து வருவதாக ஏற்கெனவே தகல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!