
கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா ராய்
மே 25, 2026
Advertisement
79வது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. அதன் நிறைவு விழாவில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் ஒருமுறை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கேன்ஸின் ராணி என்று பரவலாக போற்றப்படும் ஐஸ்வர்யா ராய், நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் பிரமிக்க வைக்கும் உயர் ரக ஆடை அலங்காரத்துடன் தோன்றியுள்ளார். இந்தப் பிரமாண்டமான இறுதி நிகழ்ச்சிக்காக சீன ஆடை வடிவமைப்பாளர் செனி சான் வடிவமைத்த டேக் சீடோ பாணியிலான ஒரு பிரமாண்டமான ஆடையை அணிந்திருந்தார் ஐஸ்வர்யா ராய். அலங்கரிக்கப்பட்ட லேப்பல்கள் மற்றும் எடுப்பான பேடட் தோள் பட்டைகள் ஆகியவற்றை கொண்ட அந்த அடுக்கு உயரக ஆடை கம்பீரமான உடை அலங்காரத்தையும் உயர் ரக நேர்த்தியையும் கச்சிதமாக வெளிப்படுத்தியது. ஐஸ்வர்யா ராயின் இந்த பிரமிக்க வைக்கும் தோற்றம் கேன்ஸ் 2026 ல் சிவப்பு கம்பள நிகழ்வுகளில் அதிகம் பேசப்பட்ட தோற்றங்களில் ஒன்றாக மாறி உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!