அனைத்து பாடல்களையும் பாட சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான் : பயந்து போய் ஜகா வாங்கிய ரன்பீர் கபூர்
ஜூன் 04, 2026
Advertisement
கடந்த 2011-ல் பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் "ராக்ஸ்டார்". இசையை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தை இயக்குனர் இம்தியாஸ் அலி இயக்கியிருந்தார். படம் வெளியாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆன நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தின் மூலம் ரன்பீர் கபூரைப் பாடகராக மாற்ற நடந்த முயற்சி குறித்து ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார் இம்தியாஸ் அலி.
அதாவது, “இந்த படம் ஒரு பின்னணி பாடகரை மையமாகக் கொண்டது என்பதால், படத்தின் பாடல்களை அவரே பாடினால் இன்னும் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என நினைத்த ஏ.ஆர்.ரஹ்மான், என்னிடம் ரன்பீர் கபூர் எப்படி நன்றாகப் பாடுவாரா ? அவரையே இந்த படத்தின் பாடல்களைப் பாட வைக்கலாமா?" என்று கேட்டார். நான் முதலிலேயே "வேண்டாம்" என்று ஏ.ஆர். ரஹ்மானிடம் கூறிவிட்டேன். இருந்தாலும் ரன்பீர் கபூரிடம் கேட்டுப் பார்க்கலாமே என்று கேட்டபோது, அவரும் பயந்து போய் "தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் என்று கூறிவிட்டார். அதுமட்டுமல்ல, இந்த படத்தில் மொத்தம் 14 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அதுவும் ரன்பீர் கபூரின் பயத்திற்கு ஒரு காரணம்” என்று கூறியுள்ளார்..
ஆனால், இப்படி ஏ.ஆர். ரஹ்மான் கூறிய யோசனையால், தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் நட்சத்திரங்களையே பாட வைக்கலாம் என்கிற புதிய முயற்சியையும் எடுத்துச் செயல்படுத்தி வருகிறார் இயக்குனர் இம்தியாஸ் அலி.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!