Advertisement

இசையை வசமாக்கிய எம்எஸ்வி

பயோகிராபி

msv-profile

Advertisement

  • இயற்பெயர் - மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன்
  • சினிமா பெயர் - எம் எஸ் விஸ்வநாதன்
  • பிறப்பு - 24-ஜுன்-1928
  • இறப்பு - 14-ஜுலை-2015
  • பிறந்த இடம் - பாலக்காடு - கேரளா
  • சினிமா அனுபவம் - 1940 - 2015
  • துணைவி - ஜானகி (இறப்பு - 2012)
  • பெற்றோர் - சுப்ரமணியன் - நாராயணி
  • புனைப்பெயர் - மெல்லிசை மன்னர்

விருதுகள்

1968 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான "தமிழக அரசு சினிமா விருது"

லக்ஷ்மி கல்யாணம் திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

1974 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான "கேரள அரசு சினிமா விருது"

சந்திரகாந்தம் மற்றும் "ஜீவிக்கான் மறன்னுபோயா ஸ்திரீ" ஆகிய படங்களுக்காக கிடைக்கப் பெற்றார்.

1978 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பாளருக்கான ஆந்திர மாநில அரசின் "நந்தி விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2002 ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசு சினிமா கௌரவ விருதான "கண்ணதாசன் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2006 ஆம் ஆண்டு சத்யபாமா யுனிவர்சிடி "டாக்டர் பட்டம்" வழங்கியது.

Advertisement

ஃபிலிம் ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசால் "கலைமாமணி விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு சிறந்த இசை அமைப்பிற்காக "கோல்டன் ரெமி விருது" "விஷ்வ துளசி" திரைபடத்திற்காக வழங்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் யுனிவர்சிடியால் "கௌரவ டாக்டர் பட்டம"; வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதுபோல் இன்னும் பல சிறப்பான விருதுகளைப் பெற்றுள்ளார்.

Advertisement

போட்டோ

எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் போட்டோ தொகுப்புகள்

Advertisement

சுவாரஸ்யங்கள்

எம் எஸ் விஸ்வநாதன் பற்றிய சுவாரஸ்யங்கள்

Left Quote ஆரம்ப காலங்களில் ராமமூர்த்தி விஸ்வநாதன் என்று பணிபுரிந்து கொண்டிருந்த இந்த இரட்டையர்களின் பெயர் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று மாறியது கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் "பணம்" திரைப்படத்திலிருந்துதான். Right Quote

Left Quote பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மாடர்ன் தியேட்டர்ஸ்" நிறுவனத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்த முதல் திரைப்படம் கேஆர்.ராமசாமி, சாவித்திரி ஜோடியாக நடித்த "சுகம் எங்கே" என்ற படமாகும். Right Quote

Advertisement

பின்னணிப் பாடகர் டிஎம் சௌந்தர்ராஜன், விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இந்த இரட்டையரின் இசையில் பின்னணி பாடிய முதல் படம் "குலேபகாவலி" பாடல் "அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்".

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய முதல் பாடல் "குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்கு சொந்தம், குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்கு சொந்தம்" என ஆரம்பமாகும் "பாசவலை" திரைப்பட பாடலாகும்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இந்த இரட்டையர்களுக்கு "மெல்லிசை மன்னர்கள்" என்ற பட்டத்தை வழங்கியவர் கவிஞர் கண்ணதாசன்.

முழுக்க முழுக்க பாரம்பரிய இசையான கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு, கிளாஸிக்கலாக இருந்த திரையிசையை லைட் கிளாஸிக்கலாகவும், வெஸ்டர்னைஸாகவும் பாடலின் ராக லட்சணங்கள் மாறாமல் ஜனரஞ்சகமாக அனைவரும் விரும்பி கேட்கும் வகையில் மெல்லிசையாக தந்து வெற்றிகண்டவர் எம் எஸ் விஸ்வநாதன்.

சிறுவனாக இருந்தபோது நடிகனாக வேண்டும் என்ற ஆசையோடு இருந்த எம் எஸ் விஸ்வநாதனுக்கு ஜுபிடர் பிக்சர்ஸின் "கண்ணகி" திரைப்படத்தில் பால கோவலனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்தார். பால கண்ணகியாக பிரபல பின்னணிப் பாடகி டி வி ரத்தினம் நடித்திருந்தார். ரஷ் பார்க்கும் பொழுது கண்ணகிக்கு தம்பி போல் எம் எஸ் விஸ்வநாதன் இருந்ததால் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

பின்னர் அதே "ஜுபிடர் பிக்சர்ஸ்" அலுவலகத்தில் ஆபீஸ் பையனாக பணிபுரியத் தொடங்கினார் எம் எஸ் விஸ்வநாதன்.

"ஜுபிடர் பிக்சர்ஸ்" நிறுவனத்தின் நிரந்தர இசை அமைப்பாளராக இருந்து வந்த எஸ்எம் சுப்பையா நாயுடுவிடம் ஆர்மோனிஸ்டாகவும், இசை உதவியாளராகவும் பணிபுரிந்திருக்கின்றார் எம் எஸ் விஸ்வநாதன். இசை அமைப்பாளர் சி ஆர் சுப்பராமனிடமும் இசை உதவியாளராக பணிபுரிந்திருக்கின்றார்.

எம்ஜிஆருக்கு எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்த முதல் படம் "ஜெனோவா". இத்திரைப்படத்திற்கு ஞானமணி, டிஏ கல்யாணம் மற்றும் எம்எஸ் விஸ்வநாதன் என மூன்று இசை அமைப்பாளர்கள் இசை அமைத்திருந்தனர்.

நான் "பட்டத்து ராணி பார்க்கும் பார்வையில்" எகிப்திய இசையை கேட்டேன். "தென்றல் வந்து வீசாதோ" பாடலில் தென்பாண்டி மண்டலத்தின் மண்வாசனையை கண்டேன். "அபூர்வ ராகத்தில்" நளினமான கர்நாடக சங்கீதத்தை அனுபவித்தேன். "முத்தமிடும் நேரம் எப்போ"வில் மெக்ஸிகன் இசையை கேட்டேன். உலகத்தில் உள்ள அனைத்து இசையும் அறிந்தவர் எம் எஸ் விஸ்வநாதன் என்று கண்ணதாசன் பெருமையாக கூறியிருந்தார்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் சேர்ந்து இசை அமைத்த கடைசி திரைப்படம் எம் ஜி ஆர் நடிப்பில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த "ஆயிரத்தில் ஒருவன்".

எம்எஸ் விஸ்வநாதன் இசை அமைப்பில் வெளிவந்த "தீர்க்க சுமங்கலி" திரைப்படத்தில் வரும் "மல்லிகை என் மன்னன் மயங்கும்" என்ற பாடலின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்.

எம்எஸ்வி.,யை சந்திப்பதற்கு முன் எனக்கு சோற்றுக்கே வழியில்லை. அவரை சந்தித்த பின் எனக்கு சாப்பிட நேரமில்லை என்று பெருமைபட நினைவு கூர்ந்தவர் மறைந்த வாலிப கவிஞர் வாலி அவர்கள்.

ஒரு பாடலுக்கு அதிகமான வயலின் இசைக் கருவிகளை பயன்படுத்திய முதல் இசை அமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன். படம்: "புதிய பறவை". பாடல்: "எங்கே நிம்மதி".

ஒரு பாடகரோடு இணைந்து வயலின் இசைக்கருவி பேசுவது போல பல பாடல்கள் எம் எஸ் விஸ்வநாதன் கைவண்ணத்தில் வந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றிரண்டு மட்டும் நேயர்களின் நினைவுகளுக்காக. பாடல்: "வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா". படம்: "பட்டினப்பிரவேசம்". பாடல்: "எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்". படம்: "முத்தான முத்தல்லவோ". பாடல்: "மெல்லப் போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப் போ". படம்: "காவல்காரன்".

இந்திய ராகங்களில் மேற்கத்திய இசைக்கருவிகளைக் கொண்டு முதன் முதலில் பாடல்கள் மெட்டமைக்கப்பட்டதும் இவராலே.

இப்போதும் இலக்கியம் சார்ந்த தமிழ் திரையிசைப் பாடல்களை நாம் தொகுக்க நேர்ந்தால், ஒவ்வொருவரின் நினிவுகளிலும் சட்டென வருவது "கர்ணன்" படப் பாடல்கள் என்றால் அது மிகையன்று. இப்படத்தின் அத்தனைப் பாடல்களையும் வெறும் 72 மணி நேரத்தில் கம்போஸ் செய்யப்பட்டது என்றால் இந்த விந்தை மனிதரை இன்றும் நாம் வியப்போடு உற்று நோக்கத் தோன்றும்.

எம்எஸ் விஸ்வநாதன் பயன்படுத்தாத இசைக் கருவிகளும் இல்லை, இசை வார்ப்புகளும் இல்லை எனும் அளவிற்கு இசையை ஒரு தவமாக நினைத்து இசைப் பணியாற்றியவர். கர்நாடக இசை, மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசை, வட்டார வழக்கு என அத்தனை பரிமாணங்களிலும் தனக்கான முத்திரையை தனித்தன்மையுடன் பதித்து மிகப் பெரிய வெற்றி கண்டவர்.

"தெய்வத்தாய்" திரைப்படத்தில் வரும் "ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்" என்ற பாடலில் ஆப்பிரிக்கன் இசைக்கருவியான பாங்கோஸ்" எனும் இசைக்கருவியைக் கொண்டே பாடலை ஆரம்பித்திருக்கும் அழகே அலாதியான ஒன்று. அதேபோல் "புதிய பறவை" திரைப்படத்தில் வரும் "பார்த்த ஞாபகம் இல்லையோ", "பணத்தோட்டம்" திரைப்படத்தில் வரும் "பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா" என்று பல பாடல்களை உதாரணமாக சொல்லிக் கொண்டே போகலாம்.

எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைப்பில் "கிடார்" பயன்பாடு என்று எடுத்துக் கொண்டால் பல நூறு பாடல்களை சொல்ல முடியும். ஊதாரணமாக "பச்சை விளக்கு" திரைப்படத்தில் வரும் "தூது செல்ல ஒரு தோழி இல்லை என துயர் கொண்டாயோ தலைவி" என்ற பாடலில் பாடல் முழுதும் கார்ட்ஸோடு கிடார் இசை பயணமாவது அலாதியான ஒன்று. "நெஞ்சில் ஓர் ஆலயம்" திரைப்படத்தில் வரும் "எங்கிருந்தாலும் வாழ்க" என்ற ஒரு சோகப் பாடலில் மாண்டலினோடு கிடாரை பயன்படுத்தி பரவசப்படுத்தியிருப்பார் மெல்லிசை மன்னர். "தெய்வத்தாய்" திரைபப்டத்தில் வரும் "வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ", "காத்திருந்த கண்கள்" திரைப்படத்தில் வரும் "காற்று வந்தால் தலை சாயும் நாணல்", "என் கடமை" திரைப்படத்தில் வரும் "மீனே மீனே மீனம்மா", "நினைத்தாலே இனிக்கும்" திரைப்படத்தில் வரும் "காத்திருந்தேன் காத்திருந்தேன்" என்று இதன் நீட்சி தொடர்ந்து கொண்டே செல்லும்.

"எங்கிருந்தோ வந்தாள்" திரைப்படத்தில் வரும் "சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே" என்ற பாடலில், சிரிப்புக்குக் கூட ஸ்வரம்; சேர்த்து, பாமாலையாக்கி வெற்றி கண்டவர் மெல்லிசை மன்னர்.

திரையிசையில் கவுண்ட்டர் பாய்ண்ட்" என்று ஒரு உத்தி உண்டு. அதாவது ஒரு பாடலின் வரி முடிவதற்குள் அதே வரி மீண்டும் அதன் மேல் தொடர்வதை "கவுண்ட்டர் பாய்ண்ட்" என்பர். இந்த உத்தியை முதன் முதலில் பயன்படுத்தியவரும் மெல்லிசை மன்னரே. "ராஜபார்ட் ரங்கதுரை" திரைப்படத்தில் வரும் "மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்" என்ற பாடலில் பயன்படுத்தியிருப்பார்.

1965 ஆம் ஆண்டு பிரிந்த இந்த இரட்டையர் மீண்டும் 1995 ஆம் ஆண்டு நடிகர் சத்யராஜ் நடித்து வெளிவந்த "எங்கிருந்தோ வந்தான்" திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தியாக இசை அமைத்தனர்.

மறைந்த ஷெனாய் இசைக் கலைஞர் பிஸ்மில்லா கான், எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைப்பில் பணியாற்றியிருக்கின்றார். "பாலும் பழமும்" திரைப்படத்தில் வரும் "ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்" என்ற பாடலில் ஒலிக்கும் ஷெனாய் இசை பிஸ்மில்லாகானின் ஷெனாய் இசை.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வந்த "அபூர்வ சகோதரர்கள்" திரைப்படத்தில் அப்பு கதாபாத்திரம் பாடுவதுபோல் வரும் ஒரு துள்ளல் பாடலுக்கு இசைஞானி இளையராஜாவிடம் நடிகர் கமல்ஹாசன் "அன்பே வா" திரைப்படத்தில் வரும் "நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைதான்" என்ற பாடல் சாயலில் பாடல் வேண்டும் என கேட்க, அந்த பாடலின் சாயலில் இளையராஜா அமைத்த பாடல்தான் "புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா" என்ற பாடல். இவ்வாறு பல இசை அமைப்பாளர்களுக்கு முன்னோடியாக விளங்கியவர் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன். இவரது பாதிப்பு இல்லாத தமிழ் திரையிசை அமைப்பாளர்களே இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.

வட்டார வழக்கை பயன்படுத்தி இவரது இசை அமைப்பில் பல பாடல்கள் வந்திருக்கின்றன. அவைகளில் இன்றும் அனைத்து தரப்பு ரசிகப் பெருமக்களாலும் பெரிதும் விரும்பப்படுவது "அனுபவி ராஜா அனுபவி" என்ற படத்தில் வரும் "முத்துக் குளிக்க வாரீயளா" என்ற பாடல் என்றால் அது மிகையன்று.

"பெரிய இடத்துப் பெண்" திரைப்படத்தில் வரும் "அன்று வந்ததும் அதே நிலா" என்ற பாடலில் வரும் சச்சச்சா பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இன்றளவும் பல இசை நிகழ்ச்சிகளில் விரும்பிப்பாடக் கேட்கிறோம். லத்தின் அமெரிக்க இசை சாயலில் அமைக்கப்பட்ட இப்பாடல் வெளியான ஆண்டு 1963. இன்றும்; நாம் இப்பாடலை கேட்டு மகிழ்கின்றோம் என்றால், மெல்லிசை மன்னரின் இசை காலங்கள் கடந்து காவியமாக நிலைத்திருப்பதையே காட்டுகிறது.

வரலாறு

MSV History

Advertisement

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள எலப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்த "மெல்லிசை மன்னர்" .

 

எம் எஸ் விஸ்வநாதன் தனது மூன்றரை வயதிலேயே தந்தையை இழந்தார். தாய்வழி தாத்தா கிருஷ்ணன் நாயர் அவர்களின் பராமரிப்பில் வளர்ந்த இவருக்கு, கண்ணனூரில் நீலகண்ட பாகவதர் என்பவரிடம் இசை பயிலும் வாய்ப்பு கிடைத்தது. பணம் கொடுத்து இசை பள்ளியில் சேர வசதி இல்லாத எம் எஸ் விஸ்வநாதனை ஆரம்பத்தில் அப்பள்ளியில் எடுபிடி வேலைக்கு அமர்த்திக் கொண்டார் நீலகண்ட பாகவதர். பின்னர் எம் எஸ் விஸ்வநாதனின் இசை ஆர்வத்தையும், புத்தி கூர்மையையும் அறிந்து கொண்ட நீலகண்ட பாகவதர், பணம் வாங்காமலேயே இவருக்கு இசையை பயிற்றுவித்தார். இவரே எம் எஸ் விஸ்வநாதனின் முதல் இசை குரு.

 

நான்காண்டு கால கர்நாடக இசை பயிற்சிக்குப் பின், சிறுவனான எம் எஸ் விஸ்வநாதனை, கண்ணனூரில் மூன்று மணிநேரம் இசைக் கச்சேரியும் செய்ய வைத்து அழகு பார்த்தார் நீலகண்ட பாகவதர். ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வளர்ந்து வந்த "கண்ணகி" திரைப்படத்தில் பால கோவலனாக நடிக்கும் வாய்ப்பு எம் எஸ் விஸ்வநாதனுக்கு கிடைக்க, பால கண்ணகியாக பிரபல பின்னணிப் பாடகி டி வி ரத்தினம் நடிக்க உருவானது. பின்னர் ரஷ் பார்த்ததில் கண்ணகிக்கு இவர் தம்பி போல் இருப்பதாக எண்ணி
படத்திலிருந்து எம் எஸ் விஸ்வநாதனை நீக்கி விட்டனர். இதனால் நடிக்க வேண்டும் என்றிருந்த இவரது ஆசையும் அப்போது நிறைவேறாமல் போனது. அதன்பின் ஜுபிடர் பிக்சர்ஸில் ஆபீஸ் பையனாக பணிபுரியத் தொடங்கினார்.

அப்போது தயாரிப்பில் இருந்த "கண்ணகி", "குபேர குசேலா", "மஹாமாயா" ஆகிய படங்களுக்கு எஸ் வி வெங்கட்ராம அய்யர், வரதராஜுலு நாயுடு போன்ற இசைஅமைப்பாளர்கள் பணிபுரிவதை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு எம் எஸ் விஸ்வநாதனுக்கு கிடைத்தது. இதற்குப் பிறகு ஜுபிடர் பிக்சர்ஸின் நிரந்தர இசை அமைப்பாளரான எஸ் எம் சுப்பையா நாயுடுவிடம் ஆர்மோனிஸ்டாகவும் உதவியாளராகவும் பணி அமர்த்தப்பட்டார் எம் எஸ் விஸ்வநாதன்.

 

கோவையில் இயங்கி வந்த ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னைக்கு மாற்றலானதும், அப்போது தயாரிப்பில் இருந்த "வேலைக்காரி", விஜயகுமாரி ஆகிய படங்களுக்கு இசை அமைத்து வந்த சி ஆர் சுப்பராமனிடம் ஆர்மோனிஸ்டாக இணைந்தார் எம் எஸ் விஸ்வநாதன். டி ஜி லிங்கப்பா, எஸ் தக்ஷிணாமூர்த்தி, மாண்டலின் ராஜு போன்ற இசை அறிஞர்கள் இருந்த இந்த குழுவில்தான,; இந்த இரட்டையர்களில் ஒருவரான டி கே ராமமூர்த்தியும் பணிபுரிந்து வந்தார். "தேவதாஸ்" திரைப்படம் நிறைவடையும் தருவாயில் அதன் இசை அமைப்பாளரான சி ஆர் சுப்பராமன் தனது 28ஆவது வயதில் மரணத்தை தழுவ, அப்படத்தின் ஒரு சில பாடல்கள் மற்றும் பின்னணி இசை சேர்ப்பு பணிகளை முடித்துக் கொடுக்கும் பொறுப்பு விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இந்த இரட்டையர்களின் கைக்கு வர, அதனை சிறப்பாக செய்து முடித்து படமும் மிகப் பெரிய வெற்றி கண்டது. ஹிந்தி திரையிசையின் ஆதிக்கம் அதிகம் இருந்த ஐம்பதுகளின் கடைசியில், விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இந்த இரட்டையர்களின் வருகை ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இயக்குநர் பீம்சிங்கின் 'பா' வரிசைப்படங்களான "பாசமலர்", "பாலும் பழமும்", "பாவமன்னிப்பு", படித்தால் மட்டும் போதுமா என்றும், மறுபுறம் இயக்குநர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் "நெஞ்சில் ஓர் ஆலயம்", நெஞ்சம் மறப்பதில்லை, "காதலிக்க நேரமில்லை" என்றும், எம் ஜி ஆருக்காக "பெரிய இடத்துப் பெண்", படகோட்டி, "தெய்வத்தாய்", "ஆயிரத்தில் ஒருவன்" என்றும், அன்றும் இன்றும் என்றும் அனைவராலும் ரசிக்கக் கூடிய காலத்தால் அழியா காவியப் பாடல்களை தந்து மெல்லிசை மன்னர்களாக விஸ்வரூபம் எடுத்தனர்.


முழுக்க கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த திரையிசையை, இசைஞானம் உள்ளவர்கள் மட்டுமே ரசிக்கும்படி இருந்த திரையிசையை, படித்தவன் முதல் பாமரன் வரை அனைவரும் ரசிக்கும்படியும,; அதன் ராக லட்சணங்கள் மாறாமலும், திரையிசையை மெல்லிசையாக்கி தந்த மேதை எம் எஸ் விஸ்வநாதன் என்றால் அது மிகை அல்ல. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 700 படங்களுக்கும் மேல் இசை அமைத்திருக்கின்றார் மெல்லிசை மன்னர்.

டூயட்

எம் எஸ் விஸ்வநாதனின் இசைக் கோர்வையில் மலர்ந்த சில முத்தான ஜோடிப்பாடல்கள்

S.No. பாடல் படம் பாடகர்கள் எழுத்தாளர்
1 கண்மூடும் வேலையிலும் கலை என்ன மகாதேவி டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா கண்ணதாசன்
2 விண்ணோடும் முகிலோடும் புதையல் சி எஸ் ஜெயராமன் - பி சுசிலா ஆத்மநாதன்
3 கனிய கனிய மழலை பேசும் கண்மனி மன்னாதி மன்னன் டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா கண்ணதாசன்
4 நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் பாலும் பழமும் டி எம் சௌந்தர்ராஜன - பி சுசிலா கண்ணதாசன்
5 மலர்ந்தும் மலராத பாதி மலர் போல பாசமலர் டி எம் சௌந்தர்ராஜன் -பி சுசிலா கண்ணதாசன்
6 வாழ நினைத்தால் வாழலாம் பலே பாண்டியா டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா கண்ணதாசன்
7 வளர்ந்த கலை மறந்துவிட்டாள் காத்திருந்த கண்கள் பி பி ஸ்ரீனிவாஸ் -பி சுசிலா கண்ணதாசன்
8 பூஜைக்கு வந்த மலரே வா பாதகாணிக்கை பி பி ஸ்ரீனிவாஸ் - எஸ் ஜானகி கண்ணதாசன்
9 பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை படித்தால் மட்டும் போதுமா டி எம் சௌந்தர்ராஜன் - பி பி ஸ்ரீனிவாஸ் கண்ணதாசன்
10 கொடி அசைந்ததும் காற்று வந்ததா பார்த்தால் பசி தீரும் டி எம் சௌந்தர்ராஜன் -பி சுசிலா கண்ணதாசன்
11 பால்வண்ணம் பருவம் கண்டு பாசம் பி பி ஸ்ரீனிவாஸ் -பி சுசிலா கண்ணதாசன்
12 இந்த மன்றத்தில் ஓடி வரும் போலீஸ்காரன் மகள் பி பி ஸ்ரீனிவாஸ் -எஸ் ஜானகி கண்ணதாசன்
13 ரோஜா மலரே ராஜகுமாரி வீரத்திருமகன் பி பி ஸ்ரீனிவாஸ் - பி சுசிலா கண்ணதாசன்
14 பனியில்லாத மார்கழியா ஆனந்த ஜோதி டி எம் சௌந்தர்ராஜன - பி சுசிலா கண்ணதாசன்
15 அழகுக்கும் மலருக்கும் ஜாதி இல்லை நெஞ்சம் மறப்பதில்லை பி பி ஸ்ரீனிவாஸ் - எஸ் ஜானகி கண்ணதாசன்
16 மதுரா நகரில் தமிழ் சங்கம் பார் மகளே பார் பி பி ஸ்ரீனிவாஸ் - பி சுசிலா கண்ணதாசன்
17 பேசுவது கிளியா பணத்தோட்டம் டி எம் சௌந்தர்ராஜன - பி சுசிலா கண்ணதாசன்
18 அன்று வந்ததும் அதே நிலா பெரிய இடத்துப் பெண் டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா கண்ணதாசன்
19 அமைதியான நதியினிலே ஓடம் ஆண்டவன் கட்டளை டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா கண்ணதாசன்
20 இந்த புன்னகை என்ன விலை தெய்வத்தாய் டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா வாலி
21 யாரது யாரது தங்கமா என் கடமை டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா கண்ணதாசன்
22 தங்கரதம் வந்தது வீதியிலே கலைக்கோயில் எம் பாலமுரளிகிருஷ்ணா - பி சுசிலா கண்ணதாசன்
23 இரவும் நிலவும் வளரட்டுமே கர்ணன் டி எம் சௌந்தர்ராஜன - பி சுசிலா கண்ணதாசன்
24 நாளாம் நாளாம் திருநாளாம் காதலிக்க நேரமில்லை பி பி ஸ்ரீனிவாஸ் - பி சுசிலா கண்ணதாசன்
25 அனுபவம் புதுமை காதலிக்க நேரமில்லை பி பி ஸ்ரீனிவாஸ் - பி சுசிலா கண்ணதாசன்
Advertisement
26 என்னப் பார்வை உந்தன் பார்வை காதலிக்க நேரமில்லை கே ஜே ஏசுதாஸ் - பி சுசிலா கண்ணதாசன்
27 தூது செல்ல ஒரு தோழி இல்லை என பச்சை விளக்கு பி சுசிலா, எல் ஆர் ஈஸ்வரி கண்ணதாசன்
28 பாட்டுக்கு பாட்டெடுத்து படகோட்டி டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா வாலி
29 பறக்கும் பந்து பறக்கும் பணக்கார குடும்பம் டி எம் சௌந்தர்ராஜன - பி சுசிலா கண்ணதாசன்
30 போக போக தெரியும் சர்வர் சுந்தரம் பி பி ஸ்ரீனிவாஸ் - பி சுசிலா கண்ணதாசன்
31 அவளுக்கென்ன அழகிய முகம் சர்வர் சுந்தரம் டி எம் சௌந்தர்ராஜன் - எல் ஆர் ஈஸ்வரி வாலி்
32 குமரிப் பெண்ணின் உள்ளத்திலே எங்க வீட்டு பிள்ளை டி எம் சௌந்தர்ராஜன - பி சுசிலா வாலி
33 மலருக்கு தென்றல் பகையானால் எங்க வீட்டு பிள்ளை பி சுசிலா - எல் ஆர் ஈஸ்வரி ஆலங்குடி சோமு
34 நாணமோ இன்னும் நாணுமோ ஆயிரத்தில் ஒருவன் டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா கண்ணதாசன்
35 பொன்னெழில் பூத்தது புது வானில் கலங்கரை விளக்கம் டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா பஞ்சு அருணாச்சலம்
36 அன்புள்ள மான் விழியே குழந்தையும் தெய்வமும் டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா வாலி
37 நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு குழந்தையும் தெய்வமும் பி சுசிலா - எம் எஸ் விஸ்வநாதன் வாலி
38 பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் பணம் படைத்தவன் டி எம் சௌந்தர்ராஜன் - எல் ஆர் ஈஸ்வரி கண்ணதாசன்
39 ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் பழனி டி எம் சௌந்தர்ராஜன் -சீர்காழி எஸ் கோவிந்தராஜன் - பி பி ஸ்ரீனிவாஸ் கண்ணதாசன்
40 ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் அன்பே வா டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா வாலி
41 நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் அன்பே வா டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா வாலி
42 சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ சந்திரோதயம் டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா வாலி
43 எங்கிருந்தோ ஆசைகள் சந்திரோதயம் டி எம் சௌந்தர்ராஜன - பி சுசிலா வாலி
44 காத்திருந்த கண்களே மோட்டார் சுந்தரம் பிள்ளை பி பி ஸ்ரீனிவாஸ் - பி சுசிலா வாலி
45 உன்னை பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும் நான் ஆணையிட்டால் டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா வாலி
46 உலகம் எங்கும் ஒரே மொழி நாடோடி டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா கண்ணதாசன்
47 நாடு அதை நாடு் நாடோடி டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா வாலி்
48 கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா பறக்கும் பாவை டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா கண்ணதாசன்
49 மன்னிக்க வேண்டுகிறேன் இரு மலர்கள் டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா வாலி
50 மெல்லப் போ மெல்லப் போ காவல்காரன் டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா வாலி
51 முத்துக்களோ கண்கள் நெஞ்சிருக்கும்வரை டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா கண்ணதாசன்
52 பூமாலையில் ஓர் மல்லிகை ஊட்டி வரை உறவு டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா கண்ணதாசன்
53 அங்கே மாலை மயக்கம் யாருக்காக ஊட்டி வரை உறவு டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா கண்ணதாசன்
54 குயிலாக நான் இருந்தென்ன செல்வமகள் டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா வாலி
55 நல்ல இடம் நீ வந்த இடம் கலாட்டா கல்யாணம் டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா வாலி
56 ஆடலுடன் பாடலைக் கேட்டு குடியிருந்த கோயில் டி எம் சௌந்தர்ராஜன - பி சுசிலா ஆலங்குடி சோமு
57 ருக்குமணியே பற பற பற ஒளி விளக்கு டி எம் சௌந்தர்ராஜன் - எல் ஆர் ஈஸ்வரி வாலி்
58 சின்னவளை முகம் சிவந்தவளை புதிய பூமி டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா கண்ணதாசன்
59 என் கேள்விக்கென்ன பதில் உயர்ந்த மனிதன் டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா வாலி்
60 வெள்ளிக் கிண்ணம்தான் உயர்ந்த மனிதன் டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா வாலி
61 நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நம் நாடு டி எம் சௌந்தர்ராஜன் - எல் ஆர் ஈஸ்வரி வாலி
62 இயற்கை என்னும் இளைய கன்னி சாந்தி நிலையம் எஸ் பி பாலசுப்ரமணியம் - பி சுசிலா கண்ணதாசன்
63 ஒரு நாளிலே உறவானதே சிவந்த மண் டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா கண்ணதாசன்
64 ஒரு ராஜா ராணியிடம் சிவந்த மண் டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா கண்ணதாசன்
65 தங்க பதக்கத்தின் மேலே் எங்கள் தங்கம் டி எம் சௌந்தர்ராஜன - பி சுசிலா வாலி
66 மங்கையரில் மகராணி அவளுக்கென்று ஓர் மனம் எஸ் பி பாலசுப்ரமணியம் - பி சுசிலா கண்ணதாசன்
67 நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என குமரிக் கோட்டம் டி எம் சௌந்தர்ராஜன், எல் ஆர் ஈஸ்வரி வாலி
68 கண்ணன் எந்தன் காதலன் ஒரு தாய் மக்கள் டி எம் சௌந்தர்ராஜன - பி சுசிலா வாலி
69 பொட்டு வைத்த முகமோ சுமதி என் சுந்தரி எஸ் பி பாலசுப்ரமணியம் - பி வசந்தா கண்ணதாசன்
70 மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி உத்தரவின்றி உள்ளே வா எஸ் பி பாலசுப்ரமணியம் - பி சுசிலா கண்ணதாசன்
71 காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ உத்தரவின்றி உள்ளே வா பி சுசிலா, எம் எல் ஸ்ரீகாந்த் கண்ணதாசன்
72 பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே தர்மம் எங்கே டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா கண்ணதாசன்
73 யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கௌரவம் எஸ் பி பாலசுப்ரமணியம் - பி சுசிலா கண்ணதாசன்
74 மதன மாளிகையில் ராஜபார்ட் ரங்கதுரை டி எம் சௌந்தர்ராஜன், பி சுசிலா கண்ணதாசன்
75 சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் சொல்லத்தான் நினைக்கிறேன் எம் எஸ் விஸ்வநாதன் - எஸ் ஜானகி வாலி
76 தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே உலகம் சுற்றும் வாலிபன் கே ஜே ஏசுதாஸ், பி சுசிலா வாலி
77 பச்சைக் கிளி முத்துச்சரம் முல்லைக் கொடி யாரோ உலகம் சுற்றும் வாலிபன் டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா வாலி
78 பன்சாயி காதல் பறவைகள் உலகம் சுற்றும் வாலிபன் டி எம் சௌந்தர்ராஜன் - எல் ஆர் ஈஸ்வரி வாலி
79 பொன்னான மனம் எங்கு போகின்றதோ திருமாங்கல்யம் எஸ் பி பாலசுப்ரமணியம - பி சுசிலா கண்ணதாசன்
80 விழியே கதை எழுது உரிமைக்குரல் கே ஜே ஏசுதாஸ் -பி சுசிலா கண்ணதாசன்
81 அன்பு நடமாடும் கலைக்கூடமே அவன்தான் மனிதன் டி எம் சௌந்தர்ராஜன - பி சுசிலா கண்ணதாசன்
82 மலரே குறிஞ்சி மலரே டாக்டர் சிவா கே ஜே ஏசுதாஸ், எஸ் ஜானகி வாலி
83 காதல் ராஜ்ஜியம் எனது மன்னவன் வந்தானடி டி எம் சௌந்தர்ராஜன் - பி சுசிலா கண்ணதாசன்
84 நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது நாளை நமதே கே ஜே ஏசுதாஸ் - பி சுசிலா வாலி
85 வசந்த கால நதியினிலே வைரமணி நீரலைகள் மூன்று முடிச்சு பி ஜெயசந்திரன் - வாணி ஜெயராம், எம் எஸ் விஸ்வநாதன் கண்ணதாசன்
86 இலக்கணம் மாறுதோ நிழல் நிஜமாகிறது எஸ் பி பாலசுப்ரமணியம் - வாணி ஜெயராம் கண்ணதாசன்
87 நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் அந்தமான் காதலி கே ஜே ஏசுதாஸ் - வாணி ஜெயராம் கண்ணதாசன்
88 கங்கை யமுனை இங்குதான் சங்கமம் இமயம் கே ஜே ஏசுதாஸ் - வாணி ஜெயராம் கண்ணதாசன்
89 பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா நினைத்தாலே இனிக்கும் எஸ் பி பாலசுப்ரமணியம் - வாணி ஜெயராம் கண்ணதாசன்
90 இனிமை நிறைந்த உலகம் இருக்கு நினைத்தாலே இனிக்கும் எஸ் பி பாலசுப்ரமணியம் - எல் ஆர் ஈஸ்வரி் கண்ணதாசன்
91 வீணை சிரிப்பில் ஆசை அணைப்பில் நூல் வேலி எஸ் பி பாலசுப்ரமணியம் - வாணி ஜெயராம் கண்ணதாசன்
92 திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே திரிசூலம் கே ஜே ஏசுதாஸ் - வாணி ஜெயராம் கண்ணதாசன்
93 நீ ஒரு கோடி மலர் பாமா ருக்மணி எஸ் பி பாலசுப்ரமணியம் - எஸ் ஜானகி முத்துலிங்கம்
94 இரவும் பகலும் எனக்கு உன்மேல் கண்ணோட்டம் பில்லா மலேசியா வாசுதேவன் - வாணி ஜெயராம் கண்ணதாசன்
95 அதோ வாரான்டி வாரான்டி வில்லேந்தி ஒருத்தன் பொல்லாதவன் எஸ் பி பாலசுப்ரமணியம் - வாணி ஜெயராம் கண்ணதாசன்
96 சிப்பி இருக்குது முத்தும் இருக்குது வறுமையின் நிறம் சிவப்பு எஸ் பி பாலசுப்ரமணியம் - எஸ் ஜானகி கண்ணதாசன்
97 எண்ணி இருந்தது ஈடேற அந்த 7 நாட்கள் மலேசியா வாசுதேவன் - வாணி ஜெயராம் வைரமுத்து
98 தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த அந்த 7 நாட்கள் பி ஜெயசந்திரன் - எஸ் ஜானகி் கண்ணதாசன்
99 விடிய விடிய சொல்லி தருவேன் போக்கிரி ராஜா எஸ் பி பாலசுப்ரமணியம் - பி சுசிலா கண்ணதாசன்
100 சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா நீதிக்கு தண்டனை கே ஜே ஏசுதாஸ் - ஸ்வர்ணலதா மகாகவி சுப்ரமணியபாரதி

சோலோ

எம் எஸ் விஸ்வநாதனின் இசைக் கோர்வையில் மலர்ந்த சில முத்தான தனிப்பாடல்கள்

S.No. பாடல் படம் பாடகர் எழுத்தாளர்
1 எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன் பணம் என் எஸ் கிருஷ்ணன் கண்ணதாசன்
2 லா சொக்கா போட்ட நவாபு குலேபகாவலி ஜிக்கி தஞ்சை என் ராமையாதாஸ்
3 உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம் பாசவலை சி எஸ் ஜெயராமன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
4 உனக்காக எல்லாம் உனக்காக புதையல் ஜே பி சந்திரபாபு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
5 செந்தமிழ் தேன்மொழியாள் மாலையிட்ட மங்கை டி ஆர் மகாலிங்கம் கண்ணதாசன்
6 சின்னஞ்சிறு கண்மலர் பதிபக்தி பி சுசிலா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
7 தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் பாகப்பிரிவினை பி சுசிலா கண்ணதாசன்
8 அச்சதம என்பது மடமையடா மன்னாதி மன்னன் டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
9 மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் பாக்கியலக்ஷ்மி பி சுசிலா கண்ணதாசன்
10 உடலுக்கு உயிர் காவல் மணப்பந்தல் பி பி ஸ்ரீனிவாஸ் கண்ணதாசன்
11 ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் பாலும் பழமும் பி சுசிலா கண்ணதாசன்
12 காலங்களில் அவள் வசந்தம் பாவமன்னிப்பு பி பி ஸ்ரீனிவாஸ் கண்ணதாசன்
13 அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான் பாவமன்னிப்பு பி சுசிலா கண்ணதாசன்
14 தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே ஆலயமணி எஸ் ஜானகி கண்ணதாசன்
15 ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே காத்திருந்த கண்கள் சீர்காழி எஸ் கோவிந்தராஜன் கண்ணதாசன்
16 சொன்னது நீதானா சொல் சொல் என் உயிரே நெஞ்சில் ஓர் ஆலயம் பி சுசிலா கண்ணதாசன்
17 பாவாடை தாவணியில் பார்த்த உருவமா நிச்சய தாம்பூலம் டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
18 ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி பாசம் எஸ் ஜானகி கண்ணதாசன்
19 நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போலீஸ்காரன் மகள் பி பி ஸ்ரீனிவாஸ் கண்ணதாசன்
20 மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா சுமைதாங்கி பி பி ஸ்ரீனிவாஸ் கண்ணதாசன்
21 நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா ஆனந்த ஜோதி பி சுசிலா கண்ணதாசன்
22 பூவரையும் பூங்கொடியே இதயத்தில் நீ பி பி ஸ்ரீனிவாஸ் வாலி
23 பக்கத்து வீட்டு பருவ மச்சான் கற்பகம் பி சுசிலா வாலி
24 தேவன் கோயில் மணி ஓசை மணி ஓசை சீர்காழி எஸ் கோவிந்தராஜன் கண்ணதாசன்
25 நெஞ்சம் மறப்பதில்லை நெஞ்சம் மறப்பதில்லை பி சுசிலா கண்ணதாசன்
26 பார் மகளே பார் பார் மகளே பார் பார் மகளே பார் டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
27 ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை பணத்தோட்டம் பி சுசிலா கண்ணதாசன்
28 ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ஆண்டவன் கட்டளை டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
29 மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் தெய்வத்தாய் டி எம் சௌந்தர்ராஜன் வாலி
30 ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ கை கொடுத்த தெயவம் டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
31 உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது கர்ணன் சீர்காழி எஸ் கோவிந்தராஜன் கண்ணதாசன்
32 கண்ணுக்கு குலமேது கர்ணன் பி சுசிலா கண்ணதாசன்
33 என்னுயிர்த் தோழி கேளொரு சேதி கர்ணன் பி சுசிலா கண்ணதாசன்
34 கண்கள் எங்கே கர்ணன் பி சுசிலா கண்ணதாசன்
35 அம்மம்மா கேளடி தோழி கருப்பு பணம் எல் ஆர் ஈஸ்வரி கண்ணதாசன்
36 ஆடவரெல்லாம் ஆடவரலாம் கருப்பு பணம் எல் ஆர் ஈஸ்வரி கண்ணதாசன்
37 கேள்வி பிறந்தது அன்று பச்சை விளக்கு டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
38 என்னை எடுத்து தன்னை கொடுத்து படகோட்டி பி சுசிலா வாலி
39 தரைமேல் பிறக்க வைத்தான் படகோட்டி டி எம் சௌந்தர்ராஜன் வாலி
40 நான் ஒரு குழந்தை படகோட்டி டி எம் சௌந்தர்ராஜன் வாலி
41 உன்னை ஒன்று கேட்பேன் புதிய பறவை பி சுசிலா கண்ணதாசன்
42 பார்த்த ஞாபகம் இல்லையோ புதிய பறவை பி சுசிலா கண்ணதாசன்
43 எங்கே நிம்மதி புதிய பறவை டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
44 கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் ஆனந்தி டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
45 நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் எங்க வீட்டு பிள்ளை டி எம் சௌந்தர்ராஜன் வாலி
46 காதல் நிலவே கண்மனி ராதா ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் பி பி ஸ்ரீனிவாஸ் கண்ணதாசன்
47 இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும் ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் பி சுசிலா கண்ணதாசன்
48 அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் ஆயிரத்தில் ஒருவன் டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
49 ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ஆயிரத்தில் ஒருவன் டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
50 உன்னை நான் சந்தித்தேன் ஆயிரத்தில் ஒருவன் பி சுசிலா வாலி
Advertisement
51 என்னை மறந்ததேன் தென்றலே கலங்கரை விளக்கம் பி சுசிலா பஞ்சு அருணாச்சலம்
52 காற்று வாங்க போனேன் கலங்கரை விளக்கம் டி எம் சௌந்தர்ராஜன் வாலி
53 ஓஹோ ஹோ ஓடும் எண்ணங்களே நீலவானம் பி சுசிலா கண்ணதாசன்
54 யார் அந்த நிலவு சாந்தி டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
55 உன்னைத்தான் நானறிவேன் வாழ்க்கைப்படகு பி சுசிலா கண்ணதாசன்
56 சின்ன சின்ன கண்ணனுக்கு வாழ்க்கைப்படகு பி பி ஸ்ரீனிவாஸ் கண்ணதாசன்
57 கண்ணன் என்னும் மன்னன் பேரை வெண்ணிற ஆடை பி சுசிலா கண்ணதாசன்
58 அம்மம்மா காற்று வந்து வெண்ணிற ஆடை பி சுசிலா கண்ணதாசன்
59 என்ன என்ன வார்த்தைகளோ வெண்ணிற ஆடை பி சுசிலா கண்ணதாசன்
60 லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் அன்பே வா பி சுசிலா வாலி
61 அன்பே வா அன்பே வா அன்பே வா டி எம் சௌந்தர்ராஜன் வாலி
62 மௌனமே பார்வையால் ஒரு பாட்டு கொடிமலர் பி பி ஸ்ரீனிவாஸ் கண்ணதாசன்
63 செல்லக் கிளியே மெல்லப் பேசு பெற்றால்தான் பிள்ளையா டி எம் சௌந்தர்ராஜன் வாலி
64 நிலவே என்னிடம் நெறுங்காதே ராமு பி பி ஸ்ரீனிவாஸ் கண்ணதாசன்
65 மாதவி பொன்மயிலாள் இரு மலர்கள் டி எம் சௌந்தர்ராஜன் வாலி
66 தேடினேன் வந்தது ஊட்டி வரை உறவு பி சுசிலா கண்ணதாசன்
67 கேட்டவரெல்லாம் பாடலாம் தங்கை டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
68 முத்து நகையே உன்னை நானறிவேன் என் தம்பி டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
69 எங்கே நான் வாழ்ந்தாலும் கல்லும் கனியாகும் டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
70 தை மாத மேகம் அது தரையில் ஆடுது குழந்தைக்காக பி சுசிலா கண்ணதாசன்
71 ராமன் எத்தனை ராமனடி லக்ஷ்மி கல்யாணம் பி சுசிலா கண்ணதாசன்
72 நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா உயர்ந்த மனிதன் பி சுசிலா வாலி
73 கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா தெய்வமகன் டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
74 கடவுள் ஒரு நாள் உலகை காண சாந்தி நிலையம் பி சுசிலா கண்ணதாசன்
75 பட்டத்து ராணி பார்க்கும் பார்வை சிவந்த மண் எல் ஆர் ஈஸ்வரி கண்ணதாசன்
76 நான் உன்னை அழைக்கவில்லை எங்கிருந்தோ வந்தாள் டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
77 ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு காவியத்தலைவி பி சுசிலா கண்ணதாசன்
78 அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு ராமன் எத்தனை ராமனடி டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
79 உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் அவளுக்கென்று ஓர் மனம் எஸ் ஜானகி கண்ணதாசன்
80 இதோ எந்தன் தெய்வம் முன்னாலே பாபு டி எம் சௌந்தர்ராஜன் வாலி
81 வசந்தத்தில் ஓர் நாள் மூன்று தெய்வங்கள் பி சுசிலா கண்ணதாசன்
82 சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு சவாலே சமாளி பி சுசிலா கண்ணதாசன்
83 இசை கேட்டால் புவி அசைந்தாடும் தவப்புதல்வன் டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
84 பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது சூரியகாந்தி டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
85 அவள் ஒரு நவரச நாடகம் உலகம் சுற்றும் வாலிபன் எஸ் பி பாலசுப்ரமணியம் கண்ணதாசன்
86 நிலவு ஒரு பெண்ணாகி உலகம் சுற்றும் வாலிபன் டி எம் சௌந்தர்ராஜன் வாலி
87 தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு அவள் ஒரு தொடர்கதை கே ஜே ஏசுதாஸ் கண்ணதாசன்
88 மல்லிகை என் மன்னன் மயங்கும் தீர்க்க சுமங்கலி வாணி ஜெயராம் வாலி
89 பாடும்போது நான் தென்றல் காற்று நேற்று இன்று நாளை எஸ் பி பாலசுப்ரமணியம் புலமைபித்தன்
90 அதிசய ராகம் ஆனந்த ராகம் அபூர்வ ராகங்கள் கே ஜே ஏசுதாஸ் கண்ணதாசன்
91 மல்லிகை முல்லை பூப்பந்தல் அன்பே ஆருயிரே வாணி ஜெயராம் வாலி
92 ஆட்டுவித்தார் யாரொருவர் அவன்தான் மனிதன் டி எம் சௌந்தர்ராஜன் கண்ணதாசன்
93 நாதமெனும் கோவிலிலே மன்மத லீலை வாணி ஜெயராம் கண்ணதாசன்
94 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் மன்மத லீலை கே ஜே ஏசுதாஸ் கண்ணதாசன்
95 கம்பன் ஏமாந்தான் நிழல் நிஜமாகிறது எஸ் பி பாலசுப்ரமணியம் கண்ணதாசன்
96 பொங்கும் கடலோசை மீனவ நண்பன் வாணி ஜெயராம் வாலி
97 அங்கும் இங்கும் அவர்கள் எஸ் பி பாலசுப்ரமணியம் கண்ணதாசன்
98 வான் நிலா நிலா அல்ல பட்டினப்பிரவேசம் எஸ் பி பாலசுப்ரமணியம் கண்ணதாசன்
99 எங்கேயும் எப்போதும் சங்கீதம் சங்தோஷம் நினைத்தாலே இனிக்கும் எஸ் பி பாலசுப்ரமணியம் கண்ணதாசன்
100 ராகங்கள் பதினாறு உறுவான வரலாறு தில்லு முல்லு எஸ் பி பாலசுப்ரமணியம் கண்ணதாசன்

ராகங்கள்

எம் எஸ் விஸ்வநாதன் இசை வார்ப்பில் ராகங்களின் அடிப்படையில் மலர்ந்த பல வண்ணப் பாடல்களில் சில

1. ஆபேரி

கண்கள் எங்கே - கர்ணன்
ராகங்கள் 16 - தில்லு முல்லு
பூமாலையில் ஓர் மல்லிகை - ஊட்டி வரை உறவு

2. ஆபோகி

தங்கரதம் வந்தது வீதியிலே - கலைக்கோயில்

3. ஆனந்த பைரவி

மலர்ந்தும் மலராத - பாசமலர்

4. சிந்து பைரவி

பேசுவது கிளியா - பணத்தோட்டம்

ஆறு மனமே ஆறு - ஆண்டவன் கட்டளை

உனக்கென்ன மேலே நின்றாய் - சிம்லா ஸ்பெஷல்

5. சுப பந்துவராளி

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் - அபூர்வ ராகங்கள்

உன்னை நான் சந்தித்தேன் - ஆயிரத்தில் ஒருவன்

6. நடபைரவி

நினைக்கத் தெரிந்த மனமே - ஆனந்த ஜோதி

7. சந்திரகௌன்ஸ்

மாலைப் பொழுதின் மயக்கத்திலே - பாக்கியலக்ஷ்மி

8. மாண்டு

நெஞ்சம் மறப்பதில்லை - நெஞ்சம் மறப்பதில்லை

9. கமாஸ்

மனம் கனிவான அந்த கன்னியை கண்டால் - இது சத்தியம்

10. பாகேஸ்ரீ

நாளாம் நாளாம் திருநாளாம் - காதலிக்க நேரமில்லை

நிலவே என்னிடம் நெருங்காதே - ராமு

11. சக்கரவாகம்

உள்ளத்தில் நல்ல உள்ளம் - கர்ணன்

12. ஹமீர் கல்யாணி

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ - சந்திரோதயம்

என் உயிர்த் தோழி கோளொரு சேதி - கர்ணன்

Advertisement

13. ஈஷமனோகரி

அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை - நெஞ்சம் மறப்பதில்லை

14. காபி

செந்தமிழ் தேன் மொழியாள் - மாலையிட்ட மங்கை

15. லதாங்கி

ஆடாத மனமும் உண்டோ - மன்னாதி மன்னன்

16. ஜோன்புரி

சொன்னது நீதானா - நெஞ்சில் ஓர் ஆலயம்

17.த்விஜவந்தி

காதல் சிறகை காற்றினில் - பாலும் பழமும்

18. பீம்ப்ளாஸ்

பூஜைக்கு வந்த மலரே வா - பாதகாணிக்கை

19. தேஷ்

நானொரு குழந்தை நீயொரு குழந்தை - படகோட்டி

20. திலங்

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் - பஞ்சவர்ணக்கிளி

மல்லிகை முல்லை பூப்பந்தல் - அன்பே ஆருயிரே

21. சங்கராபரணம்

கண்ணன் என்னும் மன்னன் பேரை - வெண்ணிற ஆடை

அன்று வந்ததும் அதே நிலா - பெரிய இடத்துப் பெண்

22. தர்பாரி கானடா

பொன்னென்பேன் சிறு பூவென்பேன் - போலீஸ்காரன் மகள்

வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் - மூன்று தெய்வங்கள்

23. மஹதி

அதிசய ராகம் ஆனந்த ராகம் - அபூர்வ ராகங்கள்

24. கல்யாணி

இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப்புதல்வன்

25. வாஸந்தி

அன்பு நடமாடும் கலைக்கூடமே - அவன்தான் மனிதன்

26.சாருகேசி

மலரே கறிஞ்சி மலரே - டாக்டர் சிவா

27.பிருந்தாவனி

முத்து நகையே உன்னை நானறிவேன் - என் தம்பி

28.கரகரப்ரியா

மாதவி கொன் மயிலாள் - இரு மலர்கள்

29.பஹாடி

நித்தம் நித்தம் என் - கூட்டுப்புழுக்கள்

30. சுத்தசாவேரி

தென்றலில் ஆடும் கூந்தலை - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

31. ஹம்ஸத்வனி

பால் பொங்கும் பருவம் - மனிதனும் தெய்வமாகலாம்

32. ஸ்ரீரஞ்சனி

நாதமெனும் கோவிலிலே - மன்மத லீலை

33. வலசி

பொங்கும் கடலோசை - மீனவ நண்பன்

பொட்டு வைத்த முகமோ - சுமதி என் சுந்தரி

34. ஹரி காம்போதி

அவள் ஒரு நவரச நாடகம் - உலகம் சுற்றும் வாலிபன்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா - நீதிக்கு தண்டனை

35. மோகனம்

பாடும்போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை

கம்பன் ஏமாந்தான் - நிழல் நிஜமாகிறது

36. பிருந்தாவன சாரங்கா

இலக்கணம் மாறுதோ - நிழல் நிஜமாகிறது

37. சாமா

மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே - நூல் வேலி

38. அமிர்தவர்ஷினி

சிவகாமி ஆடவந்தாள் - பாட்டும் பரதமும்

39. சிவரஞ்சனி

அதோ வாரான்டி வாரான்டி - பொல்லாதவன்

40. சாரங்கா

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் - சிரித்து வாழ வேண்டும்

41. கீரவாணி

சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் - சொல்லத்தான் நினைக்கிறேன்

42. செஞ்சுருட்டி

சொல்லடா வாய் திறந்து அம்மா என்று - நீலவானம்

43. தர்மவதி

அம்மானை அழகு மிகு - அவன் ஒரு சரித்திரம்

காதல் காதல் என்று பேச கண்ணன் - உத்தரவின்றி உள்ளே வா

44. கௌரிமனோகரி

கௌரிமனோகரியைக் கண்டேன் - மழலைப்பட்டாளம்

45. ஹிந்தோளம்

மனமே முருகனின் மயில் வாகனம் - மோட்டார் சுந்தரம் பிள்ளை

46. ஜோக்

தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த - அந்த 7 நாட்கள்

47. கல்யாண வசந்தம்

காஞ்சி பட்டுடுத்தி - வயசுப் பொண்ணு

48.யமுனா கல்யாணி

தை மாத மேகம் அது தரையில் ஆடுது - குழந்தைக்காக

49.யதுகுல காம்போதி

காசிக்கு போகும் சன்னியாசி - சந்திரோதயம்

50.காம்போதி

விழியே கதை எழுது - உரிமைக்குரல்