Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

பையா

பையா,
16 ஏப், 2010 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பையா

தினமலர் விமர்சனம்

ஹாலிவுட் பட பாணியில் ஒரு பிஸியான ஹை வே, சில பெட்ரோல் பங்க்கள், சில மோட்டல்கள், ஐந்தாறு காஸ்ட்லி ‌கார்கள், படம் முழுக்க சேஸிங்... ஏழெட்டு கேரக்டர்கள், சில ரிச் பைட்கள்... என பையா படு ஸ்டைலாக இருக்கிறது. அதனால் ஹிட்சர், ஹை வே உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் காப்பியோ? எனும் சந்தேகத்தையும் கிளப்பி விடுவது காமெடி!

கதைப்படி வேலை தேடி பெங்களூருவில் தோழன் - தோழிகளுடன் காஸ்ட்லியான கார், பங்களாடன் வசதியாக தங்கியிருக்கும் பொறியியல் பட்டதாரி சிவா. அதாங்க கார்த்தி. அவர் வேலைதேடி அப்ளிகேஷன் கொடுத்து சிபாரிசுடன் அலையும் இரண்டொரு சந்தர்ப்பங்களில் சாருலதாவை (இதுதான் தமன்னாவின் பாத்திர பெயர்) எதிர்பாராமல் சந்திக்க., காதலித்தால் இவளை காதலிக்கணும்... இல்லை இவளை காதலித்தவன் காலை தொட்டுக் கும்பிடணும் எனும் பாலிஸியுடன் சாருவுடன் ட்ரீமிலும், டூயட்டிலும் வாழ ஆரம்பிக்கிறார். இந்நிலையில் வெளியூரில் இருந்து வரும் நண்பனை பிக்-அப்பண்ண காருடன் ரயில்வே ஸ்டேஷன் போகிறார் கார்த்தி. என்ன ஆச்சர்யம்? தமன்னாவும் அவருடன் வரும் ஆனும் ரயிலை மிஸ் பண்ணிட்டோம், அவசரமாக சென்னை போகணும். வர முடியுமா? எனக் கேட்டு கார்த்தியை கார் டிரைவர் ஆக்க..., ரயிலில் வந்திறங்கும் நண்பனையும், அவரது குடும்பத்தையும் அம்போ என விட்டு விட்டு, தமன்னா அண்ட் கோவினருடன் காரிலேயே சென்னை புறப்படுகிறார். அப்புறம்... அப்புறமென்ன..? பட்ரோல் பங்கில் கூட வந்தவரை கழற்றி விட்டு, கார்த்தியிடம் கதை, கதையாக சொல்லும் தமன்னா, வண்டியை மும்பைக்கு விடச் சொல்கிறார். கார்த்தியும் சொன்ன‌தை கேட்கும் கிளிப்பிள்ளை மாதிரி மும்பைக்கு வண்டியை விரட்ட, ஒரு பக்கம் இந்த பயணத்தில் தமன்னா தன் சோக கதை முழுவதையும் சொல்ல, இன்னொரு பக்கம் வில்லன் கோஷ்டி இவர்களை துரத்துகிறது. தமன்னாவை துரத்துபவர்கள், பிளாஷ்பேக் பகை ஒன்றால் கார்த்தியை துரத்துபவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இருவரையும் விரட்ட, இருவரும் அவர்களிடம் இருந்து தப்பி பிழைத்தார்களா? இருவருக்குள்ளும் காதல் கண்ணாமூச்சி காட்டியதா, இல்லையா? இருவருக்கும் இத்தனை பெரிய விரோதிகள் ஏற்படக் காரணம் என்ன? உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு ஆபத்தான வளைவுகளுடன் அழகாக பதில் சொல்கிறது பையா படத்தின் மீதிக்கதை.

சிவாவாக கார்த்தி ஆயிரத்தில் ஒருவனைக் காட்டிலும் அழகாகவும், பருத்தி வீரனைக் காட்டிலும் சுமாராகவும் நடித்து சபாஷ வாங்கி விடுகிறார். நாயகி சாருலதாவா தமன்னா ‌பொம்மை போல் பளிச் என வந்து தன் மென்மையான நடிப்பாலும், துடிப்பான பெண்மையாலும் வழக்கம்போல நம்மை கவருகிறார்.

மும்பை வில்லன் மிலிந்த் சோமன், காமெடியன் ஜெகன், கார்த்தியின் காஸ்ட்லீ தோழி - ‌தோழர்கள் சோனியா தீப்தி, உமர், சித்தார்த், ஆஸிஸ் உள்ளிட்டவர்கள் அவர்களது பங்கை அழகாக செய்துள்ளனர். சீனில் வராமல் போனிலேயே கில்லியாக தெலுங்கு பேசும் வில்லி, மகளுக்கே கொடூரம் இழைக்கத் துடிக்கும் அப்பா, ஓடிப்போனவள் மகள் என தமன்னாவை மும்பையின் வசதியான வர்த்தக குடும்பம் என பணக்காரர்களின் பயமான வாழ்க்கையை படம் பிடித்துக் காட்ட முயன்றிருக்கும் டைரக்டர் லிங்குசாமியின் பங்கும், பாங்கும் பிரமாதம். அதேநேரம் சண்டைக்காட்சிகள் லிங்குவின் முந்தைய படமான பீமாவையும், சேஸிங் காட்சிகள் சண்டைக்கோழி, கில்லி படங்களையும், படக்காட்சிகள் ரன் படத்தையும் ஞாபகப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில், துளி துளி..., அடடா மழைடா, என் காதல் சொல்ல... உள்ளிட்ட மூன்று பாடல்கள் என்றால் மீதி மூன்றும் ஹிட் என்பதும் உண்மை! பையா கார்த்தி பல இடங்களில் கண்டேன் காதலை பரத்தையும், பையா படம் ஹிட்சர், ஹை வே ஹாலிவுட் த்ரில்லர் சேஸிங் படங்களையும் ஞாபகப்படுத்துவதை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அந்தப் படங்களை பார்க்காதவர்களுக்கு பையா பொய்யா, மெய்யா... எனும் பிரமிப்பையும், பிரமாண்டத்தையும் நிச்சயம் தரும்.

‌பையா : ஏ, பி., சென்டர்களின் வசூலய்யா!

---------------------

கல்கி விமர்சனம்

எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்துப் பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு, காரைச் சுற்றிப் பின்னப்பட்ட  காதல் கதை கொஞ்சம் புதுசுதான். ஒரு கறுப்புக் கலர் லேன்சர் காரில் கார்த்தி, தமன்னா... இவர்களை இரண்டு போலோரோ கார்களில் துரத்தும் குண்டு குண்டான வில்லன்கள். முதல்பாதி ஐ.பி.எல். மேட்ச். இரண்டாம் பாதி டெஸ்ட் கிரிக்கெட்டின் டொக் டொக்...

* அழுத்தமான கேரக்டரில் பார்த்துப் பழக்கப்பட்ட கார்த்தியை, ஜீன்ஸ், டீ ஷர்ட்டோடு அழகாகப் பார்க்கலாம். சண்டைக் காட்சிகளில் லிங்குசாமி பட ஹீரோக்களுக்கே உரித்தான ஆக்ரோஷம்.

* தகதக தங்க தமன்னா. பாடல் காட்சிகளில் பளிங்குபோல் தெரிகிறார். மத்தபடி நெம்பர் ஒன் இடத்தைத் தக்க வைக்க டூ பீஸ்.

* நெடுஞ்சாலையில் பயணிக்கும் லேன்சர் கார் கண்ணாடியையும் தாண்டி, கூலிங் க்ளாஸ் போடுகிறது மதியின் கேமரா.

* படத்தை ஓர் அடி தூக்கி நிறுத்துகிறது யுவனின் இசை.

நா.முத்துக்குமாரின் வரியில் ""அடடா'' பாடல் கொளுத்தும் வெயிலையும் தாண்டி தியேட்டருக்குள் சோவென மழை பெய்தது போல உணர்வு.

* ஹீரோ, ஹீரோயினைப் பார்த்ததும் காதல் வருவதெல்லாம் அரதப்பழசான  அப்பத்தாக் காலத்துப் புளிச்சுப் போன திரைக்கதை.

* கதாநாயகியைக் கும்பல் கண்டுபிடிக்க வரும் தாதா கும்பல், நான்வெஜ் சாப்பிடுவதிலேயே குறியாக இருக்கிறது.

* படத்தின் ஆரம்பித்திலேயே மும்பைக்குப் புறப்படும் கார் பயணம், இடைவேளையிலாவது போய்ச்சேருமா எனப் பார்த்தால் ம்... ஹூம். இரண்டாம் பாதியிலும் இழுவை மிட்டாய்தான்!

------------------------------

குமுதம் விமர்சனம்

ஹைய்யோ, இவளுக்காக உயிரை கூட தரலாம் என ஒரே பார்வையில் என சொல்ல வைக்கிற ஒரு பெண். உயிரெல்லாம் கொடுக்க வேணாம். அவளோட ஊரைச் சுத்து என அவனையும் அவள் பின்னாலேயே வில்லங்கத்தையும் அனுப்பி வைக்கும் விதி, வாழ்வுக்கும், சாவுக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டு சாதிக்கிறவன்தான் பையா.

அழுக்குச் சட்டையையும், பாமரப் பேச்சையும் கவனமாகத் தூர வைத்துவிட்டு அழகான ஐடி இளைஞனாக வந்து நிற்கிறார் கார்த்தி. ரோட்டில் அத்தனை வண்டியையும் பின்னால் காக்க வைத்துவிட்டு, சண்டை போடுகிற இரண்டு பேருக்கு கார்த்தி சிம்பிளாக பொளேர் விட்டு ரூட்டை க்ளியர் பண்ணுவது அழுத்தமான ஆக்ஷன்.

குடும்பத்தில் பிரச்னை, அறிமுகம் இல்லாதவனோடு பயணம் முதலில் தவிப்பு, அப்புறம் ரொமான்ஸ்... இந்த கேரக்டருக்கு தமன்னாவை விட்டால் வேறு யார்? அடியாட்களுக்கு பயந்து காருக்குள் பம்மும்போதும், எனக்கும் டிரைவிங் தெரியும்டானு டாப் கியரில் பாய்ந்து வந்து அலற வைக்கும்போதும் பொண்ணு நின்னு விளையாடிருக்கு.
தமன்னாவின் எதிரிகள் மீது மட்டுமே நம் கவனத்தை உருவாக்கி விட்டு, கார்த்தியை குறிவைத்து திடீரென ஒரு பிரச்னையை அவிழ்த்து விடுவது இயக்குநர் லிங்குசாமிக்கே உரிய ஸ்கிரிப்ட் வித்தை. கார்கள் புழுதியைக் கிளப்பும் துரத்தல் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் மதியின் அசுர உழைப்பு தெரிகிறது.

ரியல் பையா நம்ம யுவன்தான். அட,. நம்ம ஏரியானு துள்ளிக் குதிச்சு ட்யூன் போட்டுருப்பார் போல.

பெங்களூரிலிருந்து மும்பைக்கு  வரும் தமன்னாவை முன்பின் பார்த்திராத பாட்டி குடும்பம் ஒரே நொடியில் கொண்டாடுவதும், அடுத்த நிமிஷமே துõக்கி எறிவதும் லிங்குவின் விறுவிறு டாக்ஸி பஞ்சர் ஆகிப்போய் நிற்கிற இடம் பரபரப்பான பஸ் ஸ்டாப்ல ஹீரோயினைப் பார்க்குறது. அவனை வெறித்தனமா ஃபாலோ பண்றது, ரவுடிகள் ஹீரோகிட்ட ஒருமுறை மாத்து வாங்கினாலும் சளைக்காம மறுபடியும் மறுபடியும் வந்து அடி வாங்குவதுனு பல காட்சிகள்ல ரன் சிண்ட்ரோம்.

அடிதடியை விட அழகான பயணத்தால் பையா ஜெயிக்கிறான்.

பையா :  பாதுகாப்பான பயணம். குமுதம் ரேட்டிங் : ஓகே.வாசகர் கருத்து (20)

கே.gopal - manapparai,இந்தியா
31 அக், 2010 - 07:51 Report Abuse
 கே.gopal திஸ் மியூசிக் இஸ் குட்
Rate this:
P.ESWARAN - Erode,இந்தியா
28 செப், 2010 - 12:03 Report Abuse
 P.ESWARAN I am expect this story.thank to director and cinima guluvinar also acters. I am very happy and friend
Rate this:
aravind - rameshwaram,இந்தியா
19 ஜூலை, 2010 - 13:11 Report Abuse
 aravind இ லவ் தம்மன்னா
Rate this:
s.kumar - karamadai,இந்தியா
05 ஜூலை, 2010 - 15:50 Report Abuse
 s.kumar suparo super tamanna
Rate this:
அருண் - nellai,இந்தியா
04 ஜூலை, 2010 - 14:25 Report Abuse
 அருண் நான் இன்னும் படம் பார்க்க வில்லை ஹா ஹா ஹா
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

பையா தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in