Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

குடியரசு

குடியரசு,
  • குடியரசு
  • வி‌க்னேஷ்
  • சுகுணா
  • இயக்குனர்: சபீர் உசேன்
26 பிப், 2009 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » குடியரசு

தினமலர் விமர்சனம்

கதைப்படி பிரபல பத்திரிகை ஒன்றின் நிருபரான நாயகன் விக்னேஷ்வரன், மாநில மந்திரி ஒருவர் மீது ஊழல் புகார் ஒன்றை செய்தியாக வெளியிடுகிறார். அதன் எதிரொலி, ஒரே நாளைக்குள் அந்த ஊழல் புகாரை விக்னேஷ்வரன் கோர்ட்டில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். விக்னேஷ்வரன் எப்படி நிரூபிக்கிறார்? குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கிறது என்பது க்ளைமாக்ஸ்! இதுதான் குடியரசு படத்தின் கதை!

விக்னேஷ்வரன் எனும் பெயர் மாற்றத்துடன் வந்துள்ள நடிகர் விக்னேஷின் நடிப்பிலும் மாற்றம் தெரிகிறது. அதோடு சற்றே முன்னேற்றமும் தெரிகிறது. சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு இப்படம் மூலம் வந்திருக்கும் நாயகி சுகுணா! பராவில்லைன்னா!

விக்னேஷ், சுகுணா தவிர செகண்ட் ஹீரோ சுரேஷ் கண்ணன், வில்லன் சத்திய நாராயணா, நீபா, பாண்டு, போலீஸ் அதிகாரியாக படம் முழுக்க வரும் படத்தின் இயக்குனர் சபீ ஹூசைன் என எல்லோரும் தங்கள் பங்கை சரியாக செய்ய முற்பட்டுள்ளனர். அவர்களின் முயற்சி சில இடங்களில் கைத்தட்டல். பல இடங்களில் கடுப்பேற்றல்!

கார்த்திக் ராஜாவின் இசை, யுவன் சங்கர் ராஜாவின் மூத்த சகோதரரின் இசையா இது? இளையராஜாவின் வாரிசு இசையா இது? என்று கேட்கும்படியாக இருப்பது வருத்தம்! சினிமாத்தனமும, செயற்கைத்தனமும் அவ்வளவாக இல்லாமல் இயல்பாக படம் எடுத்திருப்பதற்காக இயக்குனரை பாராட்டலாம்.

குடியரசு : விக்னேஷ்வரனுக்கு முடியரசு... ரசிகர்களுக்கு.?!

--------------------------

கல்கி விமர்சனம்

அமைச்சர் ஒருவர் செய்த ஊழலை அம்பலப்படுத்தும் துடிப்புமிக்க ஒரு பத்திரிக்கையாளர், அந்த அமைச்சர் கொடுக்கும் உபாதைகளை சமாளித்து தன் சாமர்த்தியத்தால் ஊழலை உலகுக்கு எப்படி வெளிச்சம் போட்டு காண்பிக்கிறார் என்பதுதான் கதை.

ப்ளஸ்:
* சமூகப் பிரச்னையைக் கதையாகக் கையிலெடுத்திருக்கும் துணிச்சல்.
* அதற்கு ஏற்றாற்போல கதாபாத்திரத் தேர்வு.
* வேண்டிய மட்டும் ஒதுங்கியே இருக்கும் பின்னணி இசை.
* குத்துப்பாட்டு, ரெட்டை அர்த்த ஜோக் கலக்காத துணிவு.
* துருத்திக்கொண்டு தெரியாத ஹீரோயிஸம்.
* வியக்கவைக்கும் சாமுராய் வாள் சண்டைக் காட்சி...!

மைனஸ்:
* தொங்கலான திரைக்கதை.
* சலிப்பேற்படுத்தும் வசனங்கள்.
* எரிச்சலூட்டும் இசை.
* மனதோடு ஒட்டாத பாடல்கள்.
* கிக்லிபிக்லிதனமான க்ளைமாக்ஸ்.
* திணிக்கப்பட்ட காலேஜ் காட்சிகள்.
* நிழல்கள் ரவியின் பாத்திரத்தில் வானம் தெரியும் அளவுக்கு ஓட்டை..

குடியரசு : ஆகாயக் கோட்டை



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

குடியரசு தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in