Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ரெசிடன்ட் ஈவில் ஆப்டர் லைப்

ரெசிடன்ட் ஈவில் ஆப்டர் லைப்,Recident evil afterlife
  • ரெசிடன்ட் ஈவில் ஆப்டர் லைப்
  • ..
  • மில்லா ஜோவோவிச், அலி லார்ட்டெர்
  • இயக்குனர்: பால் ஆண்டர்சன்
15 செப், 2010 - 11:03 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ரெசிடன்ட் ஈவில் ஆப்டர் லைப்

தினமலர் விமர்சனம்


ரெசிடன்ட் ஈவில் முதல் பாகம் 2002 வெளிவந்தது. அடுத்து ரெசிடன்ட் ஈவில் அபோகலிப்ஸ், ரெசிடன்ட் ஈவில் எக்ஸ்டிங்ஷன் ஆகியவற்றை தொடர்ந்து இப்போது நான்காம் பாகமாக தொடர்ச்சியாக ரெசிடன்ட் ஈவில் ஆப்டர் லைப் 2010 வந்திருக்கிறது. இந்தொடரின் முந்தைய பாகங்கள் பார்த்தவர்களுக்கும், ரெசிடன்ட் ஈவில் கம்ப்யூட்டர் கேம்ஸ் பற்றி அறிந்தவர்களுக்கும் இந்த படத்தை ரசித்துப் பார்க்கலாம். இந்த படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்ட் இது 3டி.,யில் வெளிவந்திருப்பதுதான்.

படம் முழுவதும் ஏராளமான சாகசங்கள், துப்பாக்கி சண்டைகள் என்று பலவித‌ ஸ்டண்ட் காட்சிகளில் சாதிக்கிறார் மில்லா ஜோவிச். ஹாலிவுட் படங்களில் இப்போதெல்லாம் பயங்கரமான, ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் நடிகைகள்தான் வெளுத்துக் கட்டுகிறார்கள். எவ்வளவு நாட்கள் இந்த ட்ரெண்ட் தொடருமோ?

மிகப்பெரிய அழிவைக் கண்ட உலகில் எஞ்சியிருக்கும் மனிதர்களை ஜாம்பிகளிடம் இருந்து காக்கும் முக்கியமான பொறுப்பு மில்லாவுக்கு அளிக்கப்படுகிறது. ஜாம்பிகள் இறந்து போன, ஆனால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்ட பயங்கர வடிவம் கொண்ட மனிதர்கள் இந்த பணியில் மில்லாவுக்கு அலிகார்ட்டர் உள்பட ஒரு சிறு குழு உதவுகிறது.

3 டி எபெக்ட்டில் படம் முழுவதும் நம்மை மிரள வைக்கிறது இந்தப்படம். துப்பாக்கிச் சண்டைகளின்போது நம்மை நோக்கி வரும் குண்டுகள், அதிபயங்கர ஆயுதங்களுடன் ஜாம்பிகள் மில்லா குழுவை தாக்கும் சண்டை காட்சிகள் மிகவும் உயர்ந்த ஜாம்பி பத்து அடிக்கு மேலும் நீண்ட கோடாலி போன்ற பயங்கர ஆயுதத்தால் தாக்கும் காட்சிகள் என்று படம் முழுவதும் அதிரடி சண்டைக்காட்சிகள். உயர்ந்த ஒரு கம்பத்தின் மேல் மிகுந்த சிரமப்பட்டு தான் ஓட்டி வரும் விமானத்தை மில்லா இறக்கி நிறுத்துவதும், கட்டிடத்தின் மேல் மதில் சுவரை உடைத்துக் கொண்டு, வெளியே சென்று விமானம் நிற்பதும் த்ரில்லிங் காட்சிகள். துப்பாக்கி இன்றி, கிக் பாக்ஸிங் டைப்பிலும் மில்லா நிறைய சண்டை போடுகிறார். மண்டையில் தட்டாலும் மீண்டும் பல நாக்குகளுடன் பயங்கர உருவமாக எழுகின்ற ஜாம்பிகளின் தலைவன், பல்முகங்கள் கொண்ட ஆக்ரோஷமான நாயகள்- இவர்களை மில்லா எதிர்கொண்டு வீழ்த்துவது படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறுகின்றன.

சோனி பிக்சர்ஸின் தயாரிப்பான இந்த படத்திற்கு திரைக்கதை காட்சி அமைப்புக்கு மூப்பது மாதங்கள் பிடித்தனவாம். 3 டி எபெக்ட்களை பிரமாண்டமான முறையில் உருவாக்கிய தொழில்நுட்ப இயக்குனர்கள் ஸ்டண்ட் டைரக்டர்கள், பின்னணி இசை அமைத்தவர்களை மில்லாவுக்கு இணையாக பாராட்டலாம்.

- எஸ்.ரஜத்



வாசகர் கருத்து (10)

28 அக், 2010 - 15:26 Report Abuse
 ப.செந்தில் கணேஷ் சிங்கப்பூர் தினமலர் விமர்சனத்தை நம்பி படம் பார்க்க போறேன் .
Rate this:
அப்துல் ரஹீம் - Tamil Nadu:Madurai,இந்தியா
18 அக், 2010 - 14:59 Report Abuse
 அப்துல் ரஹீம் நான் இந்த game நெறைய தடவ விளையாடி இருக்கேன். அதனால் இந்த படத்தயே கண்டிப்பாக பார்பேன்
Rate this:
abi - madurai,இந்தியா
29 செப், 2010 - 13:09 Report Abuse
 abi சூப்பர் விமர்சனம், கண்டிப்பாக இந்த படத்தை பார்பேன் உங்கள் விமர்சனத்திற்காக...... உங்கள் அபி
Rate this:
V.Jagadeesh - Tiruppur,இந்தியா
24 செப், 2010 - 09:26 Report Abuse
 V.Jagadeesh ஹாய் வெரி குட் .......சௌந்தரநாயகி ஜகதீஷ்
Rate this:
parameshwaren - Rajapalayam,இந்தியா
21 செப், 2010 - 11:57 Report Abuse
 parameshwaren Action super.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in