Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

தி எக்ஸ்பென்டபிள்ஸ்

தி எக்ஸ்பென்டபிள்ஸ்,
 • தி எக்ஸ்பென்டபிள்ஸ்
 • சில்வெஸ்டர் ஸ்டால்லோன்
 • கீஷெல்
 • இயக்குனர்: சில்வெஸ்டர் ஸ்டால்லோன்
16 ஆக, 2010 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » தி எக்ஸ்பென்டபிள்ஸ்

தினமலர் விமர்சனம்

ராம்போ படத்தில் உலகப்புகழ் பெற்ற சில்வெஸ்டர் ஸ்டால்லோன், அதில் தனி ஒருவராக நின்று எதிரிகளை நாசம் பண்ணுவார். இந்த படத்தில் பார்முலாவை மாற்றி ஒரு சிறு குழுவினரோடு செல்கிறார். படம் முழுவதும் துப்பாக்கிச் சண்டை, ரத்தம், ஆக்ஷன். அவர் குழுவில் இடம்பெறும் ஜேசன் ஸ்டாதெம், ஜெட்லீ போன்ற நடிகர்கள் பிரபல ஆக்ஷன் ஹீரோக்கள். உலகம் முழுவதும் பாப்புலர். இவ்வளவு பெரிய ஆக்ஷன் ஹீரோக்கள் ஒன்றாக சேர்ந்திருப்பது படத்திற்கு முக்கியமான ப்ளஸ் பாயிண்ட். திரைக்கதை அமைப்பு, நடிப்பு, இயக்கம் என்று மூன்று பொறுப்புகளையும் சிறப்பாக செய்திருக்கிறார் சில்வெஸ்‌டர். அறுபது ப்ளஸ் வயது என்பதால் ஸ்டால்லோன் சற்று தளர்ந்து காணப்படுகிறார்.

தென்அமெரிக்காவில் ஒரு கற்பனை நாடு விலெகு. அந்த நாட்டை தன் பிடியில் வைத்திருக்கும் முன்னாள் அமெரிக்க உளவாளி (முன்னாள்சிஐஏ ஏஜன்ட்) மற்றும் கூட்டாளிகளிடம் இருந்து சில்வெஸ்டர் ஸ்டால்லோன் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை. பீச்சுவா போன்ற சிறு கத்திரை கண் இமைக்கும் நேரத்தில் எதிரி மீது குறிபார்த்து வீசி, சத்தமின்றி கொல்லும் ஜேசன் ஸ்‌டேதம் நம்மை வியக்க வைக்கிறார். அவரும், ஸ்டால்லோனும் சிறு விமானத்தில் குறைந்த உயரத்தில் பறந்து சண்டைபோட்டு, பிறகு விமானத்தில் இருந்து பெட்ரோல் சிதறி விட்டு, அதில் சுட்டு கண் இமைக்கும் நேரத்தில் முற்றிலும் எதிர்பாராத விதத்தில் தீயில் நிறைய ராணுவவீரர்கள், அவர்களின் ஆயுதங்கள், வண்டிகளை துவம்சம் செய்வது நல்ல உத்தி. ஒரு நடிகை இந்த அளவுக்கு டார்ச்சருக்கு உள்ளாகியிருப்பாளா? என்ற அளவு கீஷெல் சிரமங்களை தாங்குகிறாள். துணிச்சலாக இருக்கிறது அவரது பாத்திர அமைப்பு.

பெரிய வட்டமான குண்டுகள் இருக்கும் மேகஸின் கொண்ட மெகா சைஸ் இயந்திர துப்பாக்கியை வைத்துக் கொண்டு, ஸ்டால்லோனின் உதவியாளர், ஒவ்வொரு முறை சுடும் போதும் தபுதட்டென்று தியேட்டரே அதிர்கிறது. சர்வாதிகாரியின் படையினரிடம் ஸ்டால்லோன் அகப்பட்டுக் கொண்டு தவிக்கும்போது, சீன நடிகர் ஜெட் லீ தனது வேகமான பாணியில் எதிரிகளை தாக்கி ஸ்டால்லோனுக்கு சப்போர்ட் பண்ணுகிறார். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் மிகப் பிரபலமான ஸ்டார்களாக இருந்தாலும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களாக மாறி, ஈகோ சிறிதுமின்றி பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

மயிர் கூச்செரியும் நிறைய அதிரடி சண்டைக் காட்சிகளுக்கும் நல்ல ஸ்கோப் வாய்ப்பு இருக்கும்படி திரைக்கதை அமைத்திருக்கிறார் ஸ்டால்லோன். நிறைய ரிஸ்க் எடுத்து, சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கும் ஸ்டார்கள், அவர்களை திறம்பட ஒருங்கிணைத்து, இயக்கிய ஸ்டண்ட் டைரக்டர் ஆகியோர், ஆக்ஷன் விரும்பும் ரசிகர்களின் பாராட்டுக்களை நிச்சயம் பெறுவார்கள்.

- எஸ்.ரஜத்வாசகர் கருத்து (16)

rajkumar - salem,இந்தியா
04 செப், 2010 - 10:55 Report Abuse
 rajkumar திஸ் movie re make இன் தமிழ்
Rate this:
விக்னேஷ் - ramnad,இந்தியா
03 செப், 2010 - 08:05 Report Abuse
 விக்னேஷ் படம் புல்லாஹ் மிரட்டல் அடி தான். கலக்கிட்டீங்க........
Rate this:
silambarasan - chennai,இந்தியா
02 செப், 2010 - 02:34 Report Abuse
 silambarasan hates of to silverster stellon really good
Rate this:
K.Mohan - chennai,இந்தியா
30 ஆக, 2010 - 17:02 Report Abuse
 K.Mohan super
Rate this:
Vengateshwaran - Bangalore,இந்தியா
30 ஆக, 2010 - 14:23 Report Abuse
 Vengateshwaran படம் செம்ம யா இருக்கு ....
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in