Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஆண்டனி

ஆண்டனி,Antony
  • ஆண்டனி
  • இயக்குனர்: குட்டி குமார்
02 ஜூன், 2018 - 12:05 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஆண்டனி

நடிப்பு - நிஷாந்த், வைஷாலி, லால், ரேகா மற்றும் பலர்
இயக்கம் - குட்டி குமார்
இசை - சிவாத்மிகா
தயாரிப்பு - ஆண்டனி புரொடக்ஷன்ஸ்
வெளியான தேதி - 1 ஜுன் 2018
நேரம் - 1 மணி நேரம் 45 நிமிடம்
ரேட்டிங் - 1/5

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்தியாவில் வெளிவந்துள்ள முதல் 'கிளாஸ்ட்ரோபோபிக்' திரைப்படம். 'கிளாஸ்ட்ரோபோபிக்' என்றால் 'மூடப்பட்ட ஒரு இடத்தில் அதிகபட்ச பயத்துடன் இருப்பது' என்று அர்த்தம்.

இப்படத்தின் நாயகன் நிஷாந்த் அவருடைய காருக்குள், மண்ணால் பூமிக்குள் மூடப்பட்டு சிக்கித் தவிக்கிறார். நிஷாந்த் ஒரு சப் இன்ஸ்பெக்டர், காதலியுடன் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் தான் எப்படி சிக்கிக் கொண்டேன் என்ற நினைவு கூட இல்லாமல் அதிலிருந்து வெளியில் வரத் துடிக்கிறார். அவரால், பூமிக்குள் புதைந்த காருக்குள் இருந்து வெளியில் வர முடிந்த்தால் இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

இந்தக் கதையில் என்ன ஒரு விறுவிறுப்பு இருக்கிறது என்று தெரியவில்லை. சிபிராஜ் நடித்து வெளிவந்த 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தில் அவருடைய மனைவி அருந்ததியை ஒரு சவப்பெட்டிக்குள் அடைத்து வைத்துவிடும் வில்லன் குழு, அதிலிருந்து மனைவி அருந்ததியை எப்படி சிபிராஜ் காப்பாற்றினார் என்பதுதான் அந்தப் படத்தின் கதை.

இந்த 'ஆண்டனி' படத்தில் சப்-இன்ஸ்பெக்டர் நிஷாந்த், காருடன் சிக்கிக் கொள்ள காணாமல் போன மகனை அப்பா, முன்னாள் போலீஸ் அதிகாரி லால் கண்டுபிடிக்க முயல்வதும் என கதை நகர்கிறது.

அடுத்த நிமிடம் உயிரோடு இருப்போமா இருக்க மாட்டோமா என்ற பதைபதைப்பு படத்தின் நாயகன் நிஷாந்திடம் இருக்கிறது, அவரது அப்பா லாலிடம் இருக்கிறது, ஆனால், படத்தைப் பார்க்கும் நமக்கு அந்த பதைபதைப்பு இல்லை. ஒரு குறும்படமாக எடுத்து முடிக்க வேண்டிய படத்தை முழுநீளத் திரைப்படமாகக் கொடுத்திருக்கிறார்கள்.

காருடன் புதைந்து தவிக்கும் நாயகன் நிஷாந்த் போல தியேட்டருக்குள் நுழைந்து நாமும் சிக்கிக் கொண்டுவிட்டோம் என்ற ஒரு உணர்வுதான் ஏற்படுகிறது.

நிஷாந்தின் எதிரிகள் யாராவது அவரைப் பழி வாங்க இப்படி செய்திருப்பார்களோ என்ற கோணத்திலும் சில தடங்களில் கதை பயணிக்கிறது. அதிலும் துளியும் சுவாரசியமில்லை.

ரசிகர்களுக்குப் புரியாத பெயரில் 'கிளாஸ்ட்ரோபோபிக்' படம் என வித்தியாசமாகச் சொல்லிவிட்டு, எந்த விறுவிறுப்பையும் வைக்காமல் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
ஆண்டனி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in