Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

குற்றப் பிரிவு

குற்றப் பிரிவு,
28 மே, 2010 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » குற்றப் பிரிவு

தினமலர் விமர்சனம்

போலீஸ் துறையில் நடக்கும் உள்குத்து சமாச்சாரங்களையும், அத்துறையில் நல்லவர் வேடத்தில் இருக்கும் கறுப்பு ஆடுகளையும், தோலுரித்துக் காட்ட முற்பட்டிருக்கும் படம்தான் குற்றப்பிரிவு.

நீதியும், நேர்மையும் நிரம்பிய காவல்துறை அதிகாரி ஸ்ரீகாந்த்துக்கும், தன்னை நேர்மையான அதிகாரிபோல் காட்டிக் கொண்டு பயங்கரவாதிகள் மற்றும் படுபயங்கரமானவர்களுக்கு உதவும் பிருத்விராஜூக்கும் இடையில் நடக்கும் யுத்தம்தான் குற்றப்பிரிவு. இந்த யுத்தத்தில் நீதியும், நேர்மையும் நிரம்பிய அதிகாரி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றாரா? நேர்மை துளியும் இல்லாத பிருத்விராஜ் வெற்றி பெற்றாரா? என்பதுடன் ஸ்ரீகாந்த் மீது கமாலினி முகர்ஜி, சஞ்சனா இருவருக்கும் ஏற்படும் காதலை கலந்து கட்டி மீதிக்கதையை சொல்லி குற்றப்பிரிவு படத்தை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படைத்திருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த், ஆக்ஷக் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் படம் எனும் சிறப்புடன், அவருக்கு போலீஸ் யூனிபார்மையும் கொடுத்து எதிர்படும் எல்லோரையும் கையில் துப்பாக்கியுடன் புரட்டி எடுக்கவும் வைத்திருக்கும் படம். ஸ்ரீயின் பாத்திரமும், அவருக்கு போலீஸ் சீருடையும் நன்றாகவே ‌பொருந்துகிறது. ரோஜாக்கூட்டம், பூ படங்களின் நாயகர் ஸ்ரீகாந்த் தானா இது? எனுக் கேட்டு ஆச்சர்யப்படும் அளவிற்கு அசத்தியிருக்கிறார் மனிதர். வாவ்!

வில்லானிக் ஹீரோவாக பிருத்விராஜ் காவல்துறையின் கருப்பு ஆடுகளுக்கு எடுத்துக்காட்டாக, எடுப்பாக நடித்திருக்கிறார். கமாலினிமுகர்ஜி, சஞ்சனா இரண்டு நாயகிகளில் கமாலினி கொஞ்ச நேரமே வந்தாலும் நெஞ்சை அள்ளுகிறார். சஞ்சனா வஞ்சனை இல்லாமல் உடம்பை காட்டி வந்து போகிறார். ரசிகர்கள் நொந்து போகாதிருந்தால் சரி!

பரணி கே. தரனின் ஒளிப்பதிவும், விஷ்வாவின் இசையும், செல்வாவின் சண்டைப் பயிற்சியும் படத்திற்கு பெரிய பலம். காவல்துறை பற்றி ஏதேதோ கருத்துக்கள் சொல்ல வந்து அதை முழுதாக வெளிப்படுத்த முடியாமல் இயக்குனர் மன்மோகன் சில இடங்களில் கோட்டை விட்டிருந்தாலும், பல இடங்களில் ஓட்டை விழாத திரைக்கதை மூலம் படத்தை தூக்கி நிறுத்த முற்பட்டிருக்கிறார்.

குற்றப்பிரிவு : தமிழ் திரைப்படங்களில் தோல்விப்பிரிவிலும் சேராது! வெற்றிப்பிரிவுக்கும் போகாத மத்திய பிரிவு!வாசகர் கருத்து (9)

niranjan - trichy,இந்தியா
01 ஜூலை, 2010 - 16:28 Report Abuse
 niranjan srikanth நல்லா நடிசுருக்கார் ஆன பிரிதிவிராஜ் தான் ஒரு மாதிரியாக இருக்கார்................
Rate this:
மரிய ஜெகன் ராஜ் - Mumbai,இந்தியா
11 ஜூன், 2010 - 15:09 Report Abuse
 மரிய ஜெகன் ராஜ் பேசாம ப்ரிதிவிராஜை ஹீரோவா போட்டுருக்கலாம். ஸ்ரீகாந்த் நடிப்புல ஒரு ஆக்டிவே இல்ல
Rate this:
meyyappan - pudukkottai,இந்தியா
11 ஜூன், 2010 - 14:13 Report Abuse
 meyyappan ஹாய் ஸ்ரீகாந்த், யு ஹேவ் டன் எ கிரேட் ஜாப்.
Rate this:
maveena - Bangalore,இந்தியா
09 ஜூன், 2010 - 12:34 Report Abuse
 maveena கீப் இட் அப் ஸ்ரீகாந்த்
Rate this:
செந்தில் குமார் - Hyderabad,இந்தியா
07 ஜூன், 2010 - 09:28 Report Abuse
 செந்தில் குமார் Its a very good movie. Except a very few minor issues, this movie is excellent one. Srikanth has done a wonderful acting as a police officer. He is fit and perfect in this movie. No punch dialogues. Only action. These days, we would like to fast-forward the fight sequence because of unbelieveable stunts by a lean guy (rather unfit guy) fights/wins against hundreds of rowdies. But in this movie, the action sequences are great and you cannot skip any scene. All have done a wonderful performance. If it has been released with more advertisements (like non-stop nonsense ads in Sun TV) this would have been a very successful movie.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in