Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கச்சேரி ஆரம்பம்

கச்சேரி ஆரம்பம்,
01 ஏப், 2010 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கச்சேரி ஆரம்பம்

தினமலர் விமர்சனம்

ஜீவா- பூனம் பஜ்வா நடித்திருக்கும் கச்சேரி ஆரம்பம் படமும், தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான குட்டி படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி கதைதான். அதாகப்பட்டது..., ஹீரோயினை சர்வ வல்லமை படைத்த ஒருவர் வற்புறுத்தி காதலிப்பார். ஹீரோ குறுக்கே புகுந்து அவருக்கு நன்மைகள் செய்வது மாதிரியும், காதல் தூது போவது மாதிரியும் நடித்து ஹீரோயினை கரம் பிடிப்பதே மேற்படி இரண்டு படங்களின் கதையும்!

கதைப்படி, ஜீவா ஊரில் வசதியான வீட்டுப்பிள்ளை. அப்பாவிற்கு அடங்காத பிள்ளை. குடும்பத்தில் ‌கோபித்துக் கொண்டு சிட்டிக்கு வருகிறார். வந்த இடத்தில் பஜாரில் உள்ள வடிவேலு கடையில் வேலை பார்‌த்துக் கொண்டே, தன்னை ஒருமுறை லாரி விபத்தில் இருந்து காபந்து செய்யும் பூனம் பஜ்வாவை காதலிக்கத் தொடங்குகிறார். ஆனால் பூனமோ... சிட்டியின் பெரிய தாதா சக்கரவர்த்தியால் ஏற்கனவே காதலிக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஹவுஸ் அரஸ்ட்டில் வாழ்ந்து வருகிறார். அத்தனை பெரிய ரவுடியை சாதுர்யமாக எதிர்த்து ஜீவா, பூனத்தை கைப்பிடித்தாரா? இல்லையா? என்பது சுவாரஸ்யமான மீதிக்கதை!

வெகுளியாகவும், வெகுண்டெழுந்தும் வித்தியாசமாக நடித்து வெற்றி பெற்றிருக்கிறார் ஜீவா. பூனம் பஜ்வா, ஜேடி சக்கரவர்த்திக்கு பயந்து ஜீவா மீது இருக்கும் காதலை சொல்லாமல் அமைதியாக நடக்கும்போதும் சரி, ஆர்ப்பாட்டமாக பாடல் காட்சிகளில் ஆடும்போதும் சரி... அசத்தல். வில்லன் ஜேடி சக்கரவர்த்தி அமைதியான, அழகான கொடூரம். வடிவேலு வழக்கம்போல கலகல!

காட்சிக்கு காட்சி பழைய படங்களுடன் சம்பந்தப்படுத்தி ஜீவா கொடுக்கும் ஓப்பனிங் நல்ல காமெடி புதுமை. காதல் தண்டபாணி - பூனம் மீது காதல் கொள்வதும், கலாட்டா செய்வதும் சில இடங்களில் கடி, பல இடங்களில் காமெடி!

டி.இமானின் இசையும், பாடல்களும், வைத்தியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும் பலம். க்ளைமாக்ஸில் சக்கரவர்த்தி மனம் திருந்தி ஜீவா - பூனம் பஜ்வா ஜோடியை சேர்த்து வைப்பது தவிர மற்ற அத்தனை வித்தியாசங்களும் விறுவிறுப்பு. திரைவண்ணன் இயக்கத்தில் கச்சேரி ஆரம்பம் - காமெடி பிம்பம்.

-----------------------------------

விகடன் விமர்சனம்

கோடம்பாக்க கொத்து புரோட்டாவை மீண்டும் சூடு பண்ணினால்... கமர்ஷியல் கச்சேரி ஆரம்பம்!

ஊரில் இருந்து சென்னைக்கு கிளம்பி வருகிறார் வேலைவெட்டி இல்லாத ஜீவா. வந்த இடத்தில் தண்ணீர் லாரியில்  இருந்து ஜீவாவைக் காப்பாற்றுகிறார் பூனம் பஜ்வா. உடனே, பூனம் மீது ஜீவாவுக்கு காதல். காதலுக்கு ஏதாவது தடை இருக்க வேண்டுமே? சென்னை தாதா ஜே.டி.சக்ரவர்த்தி பூனம் பஜ்வாவை ஒருதலையாக் காதலிக்கிறார். வில்லனை கைப்புள்ளையாக்கி ஜீவா, பூனம் பஜ்வாவின் கை பிடிப்பது மீதிக்கதை!

பேரரசு ரூட்டில் கூட்டம் கூட்டமாகக் கொடி பிடித்து ஆரவாரமாக வலம்வரும் கூட்டத்தின் புது உறுப்பினர்...

அறிமுக இயக்குனர் திரைவண்ணன். படத்தின் ஆரம்பத்தில் "தமிழ்ப்படம்'' போல கமர்ஷியல் அயிட்டங்களை காலி செய்கிறார்கள். பின்னர் எதை கிண்டலடித்தார்களோ, அதே மசாலாக் கடலில் மூழ்கி முத்தெடுக்கிறார்கள். ""என்ன மாதிரி படம் இது ?''  என்று கண்டுபிடிப்பதற்குள் ஆட்டம்பாட்டத்தோடு படம் முடிந்து விடுகிறது. சுபம்!

காதலோ, மோதலோ கேரக்டருக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறார் ஜீவா. ஆனால், அலுத்துச் சலித்த கதையில் என்ன செய்வது? என்ன பிரயோஜனம் கொழுகொழு  பூனம்பஜ்வா  பார்த்ததுமே பரவசம் தருகிறார். ஆனால், படம் முழுக்கப் பர்ஸைப் பறிகொடுத்த மாதிரியே உம்மென்று வந்து கம்மென்று இருக்கிறார். வில்லன் ஜே.டி.சக்ரவர்த்திக்கு எக்கச்சக்க பில்டப் கொடுத்து அறிமுகப்படுத்தி, சிறிது நேரத்திலேயே அவரை காமெடி பீஸ் ஆக்கி ராவடி பண்ணுகிறார்கள்.

படத்தின் ஒரே பலமும்,  ஆறுதலும் பர்மா பஜார் வியாபாரியாக வரும் வடிவேல். வில்லன்களிடம் மாட்டி அல்லாடும்போது அவரது மாடுலேஷன்... காமெடிக் கச்சேரி. அவரது அடிப்பொடிகளாக வரும் சிஸர் மனோகரும், கிங்காங்கும் கூட்டணி வைத்து காமெடித் தவில்  வாசிக்கிறார்கள்.

புரையேற வைக்கும் காரமான மசாலா கச்சேரி! விகடன் மார்க்  36/100வாசகர் கருத்து (2)

sangeetha - puducherry,இந்தியா
11 ஜூன், 2010 - 15:29 Report Abuse
 sangeetha not bad. songs and lyrics excellent.
Rate this:
karthikeyan - tirupur,இந்தியா
01 ஜூன், 2010 - 13:12 Report Abuse
 karthikeyan I THINK JEEVA CAN GO TO BATHROOM CLEANING
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in