Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

அரிது அரிது

அரிது அரிது,Aridhu Aridhu
  • அரிது அரிது
  • ஹரிஸ்
  • உத்தாரா
  • இயக்குனர்: மதிவாணன்
25 டிச, 2010 - 22:34 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » அரிது அரிது


தினமலர் விமர்சனம்



பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் எனும் தகுதியுடன் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் கே.ஆர்.மதிவாணன் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களையும் எழுதி, இயக்கி இருக்கும் திரைப்படம் தான் அரிது அரிது.

உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தீவிரவாதத்தை வேர் அறுக்க வலியுறுத்தி வெளிவந்திருக்கும் படம்!

ஹீரோ ஹரிஸ் கல்யாணின் டாக்டர் அப்பா ஹரி ராஜூக்கு சுத்தமாக சத்தம் பிடிக்காது. அதனால் பக்கத்து வீட்டு பருவமங்கையில் தொடங்கி தன் பாரியாள்(மனைவி) வரை சகலரையும் சப்தமில்லாமல் தீர்த்து கட்டுகிறார். இவரது கொடூர கொலைகளுக்கு இரண்டே சாட்சிகள்! ஒன்று மனசாட்சி, மற்றொன்று அவரது மகனே சாட்சி! எனும் நிலையில் மனசாட்சியை குழிதோண்டி புதைத்துவிட்டு மகனின் மூளை நரம்புகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து அவனது ஞாபகசக்தியை தீர்த்து கட்டுகிறார். அதனால் ஞாபகங்கள் மட்டுமல்ல, அவனது அழகிய கரங்களும் செயல் இழுந்து ‌போகிறது. இதை அக்கம்பக்கத்தினர் மூலம் அரசல் புரசலாக தெரிந்து கொண்ட மனித உரிமை கமிஷன், டாக்டர் அப்பாவை விசாரணைக்கு அழைத்து போகிறது. சரியான சாட்சி இல்லாததால் போன வேகத்தில் திரும்பி வரும் டாக்டர், இனியும் இந்தியாவில் இருந்தால் சரிபட்டு வராது என்று ஆசை(!) மகனுடன் ஆஸ்திரேலியாவுக்கு பயணமாகிறார். அங்கு போய் இறங்கியதுமே மகனை தொலைத்து விடும் டாக்டர் ஹரி, மகனை தேடி அலைந்து மனநிலை பாதிக்கப்படுகிறார். மற்றொரு பக்கம் காணமல்போன் ஹீரோ ஹரீஸ் ஆஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான ஹீரோயின் உத்ரா வசம் கிடைக்க, அவன் மூலம் வேறு உலகத்தை (ரசிகர்களுக்கும் கவர்ச்சி உலகத்தை காண்பித்தபடி தான்...) பார்க்கும் உத்ரா, அவனை காதலிக்கத் தொடங்குகிறாள். வீட்டிலோ எதிர்ப்பு.

இந்நிலையில் ஹீரோவை தன் சுயநலத்திற்காக மனித வெடிகுண்டாக்க முயற்சிக்கிறான் ஒரு தீவிரவாதி! அவனது எண்ணம் ஈடேறியதா? உத்ராவின் காதல் என்ன ஆனது...? ஹரிஸ் கல்யாணின் அப்பா ஹரிராஜ் என்ன ஆனார் என்பது உள்பட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாக விடை சொல்கிறது அரிது அரிது படத்தின் மீதிக்கதை! அதை இன்னும் சற்றே விறுவிறுப்பாகவும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது நம் கருத்து!!

சிந்து சமவெளி படத்தில் நாயகராக அறிமுகமான ஹரிஸ் கல்யாண், முன் ஞாபகங்கள், மறந்ததன் ரகங்கள் செயல் இழந்த பாத்திரத்தில் பார்ப்பவர்களுக்கு பச்சாதாபம் ஏற்படும் வகையில் பளிச் என நடித்திருக்கிறார். கண்டிப்பாக ஹரிஸின் நடிப்பிற்காக அரிது அரிது உலகளவில் பேசப்படும் படமாகும்!

கதாநாயகி உத்ரா கனடா நாட்டினை சார்ந்த மிஸ் இந்தியாவாம். படத்தில் இவரது ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமும், நடிப்பும் தான் பெரிய ப்ளஸ். வாவ், ஆஸ்திரேலியா அழகு காட்சிகளை மீறி அம்மணியின் அழகு மிளிர்கிறதென்றால் அது பொய்யல்ல!

வள்ளி படத்தில் பல வருடங்களுக்கு முன் ஹீரோவாக நடித்த ஹரிராஜ், இப்படத்தில் வில்லனாக அதுவும் ஹீரோ ஹரிஸின் அப்பாவாக சைக்கோ டாக்டராக நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் மகனையே செயல் இழக்க செய்யும் அப்பாக்களும் இருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை! இவரை மாதிரியே தன் குடும்ப பின்னணியை உருக உருக சொல்லி தனக்கு பதில் ஹரிஸ் கல்யாணை மனித வெடிகுண்டாக்கும் வில்லன் அப்துல் அஹீமும் வித்தியாசம்!

எஸ்.தமன் இசையில் ஏழுபாடல்களுக்காகவும், அருள்செல்வனின் ஒளிப்பதிவில் பிரமாண்டமாக படமாக்கி இருக்கும் விதத்திற்காகவும் அரிது அரிது படத்தை ஒன்றுக்கு இரண்டு முறைகூட பார்க்கலாம்!

"இன்றைய அவசரயுகத்தில் சிரிப்பதே பயிற்சி என்றாகிவிட்டது" எனும் முதல் டயாக்கிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும் இயக்குநர் கே.ஆர்.மதிவாணன், அதை திரைக்கதை இயக்கத்திலும் இன்னும் திறம்பட காட்டி இருந்தார் என்றால் அரிது அரிது இன்னும் பெரிது பெரிதாக பேசப்பட்டிருக்கும்.



வாசகர் கருத்து (2)

balaji - kuwait,இந்தியா
21 ஜன, 2011 - 00:22 Report Abuse
 balaji புதிய முயற்சி
Rate this:
bojan - hot,இந்தியா
26 டிச, 2010 - 09:20 Report Abuse
 bojan மதிவணனுக்கு ஒரு சலூட் படம் சூப்பர் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in