Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மச்சக்காளை

மச்சக்காளை,
29 ஜூன், 2009 - 00:00 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » மச்சக்காளை

தெலுங்கில் ஜெயம் உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய தேஜாவின் இயக்கத்தில் உருவான "லட்சுமி கல்யாணம்' படம் மச்சக்காளையாக தமிழ் பேசவிருக்கிறது. "மச்சக்காளை' படத்தில் புதுமுகம் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இரண்டு ஊர்காரர்களுக்கு இடையே நிலவும் தீராத பகையை அடிப்படையாக கொண்டது படத்தின் கதை.
.
இரண்டு ஊர்களுக்கும் பொதுவான கோயில் கூட மூடப்பட்டிருக்கும் நிலையில் ஒரு ஊரில் பிறந்த ராமு (கல்யாண்) அடுத்த ஊரை சேர்ந்த லட்சுமியை (காஜல் அகர்வால்) காதலிக்க ஒரு கட்டத்தில், ஊர் பகையை தீர்ப்பதற்காக லட்சுமியை வேறொருவருக்கு மணம் முடித்துத் தர தீர்மானிக்கப்படுகிறது. வில்லனின் இந்த சதியை நாயகன் முறியடிப்பதுதான் படத்தின் கதை. சமீர் ஒளிப்பதிவு செய்ய மணிசர்மா இசையமைத்துள்ளார். மாடர்ன் மீடியா சார்பில் தாஹேர் தயாரிக்கிறார்.

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in