Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஒன் நைட் ஸ்டேண்ட் (ஹிந்தி)

ஒன் நைட் ஸ்டேண்ட் (ஹிந்தி),One Night Stand
  • ஒன் நைட் ஸ்டேண்ட் (ஹிந்தி)
  • இயக்குனர்:
06 மே, 2016 - 18:32 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஒன் நைட் ஸ்டேண்ட் (ஹிந்தி)

நடிகர்கள் : சன்னி லியோன், தனுஜ் விர்வானி, நைரா பானர்ஜி

இயக்கம் : ஜாஸ்மின் டி-சோசா


'மஸ்திஜாதே' படத்திற்கு பிறகு சன்னி லியோன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ''ஒன் நைட் ஸ்டேண்ட்''. இப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...


கதைப்படி, திருமணமான அர்வில் எனும் தனுஜ் விர்வானி, செலினா எனும் சன்னி லியோனை, பாங்காக்கில் உள்ள பப் ஒன்றில் சந்திக்கிறார். பார்த்த மாத்திரத்திலேயே இருவருக்கும் ஒருவித ஈர்ப்பு தொற்றிக்கொள்கிறது. இருவரும் ஒரே அறையில் தங்குகிறார்கள். அதன்பின்னர் என்ன நடக்கும்... அதான், அந்த விஷயங்கள் எல்லாம் அரங்கேறுகிறது. பின்னர் இருவரும் ஒன்றுமே நடக்காதது போன்று அவரவரின் சொந்த ஊருக்கு திரும்புகிறார்கள். புனே விமான நிலையத்தில் அர்விலின் மனைவியான சிம்ரன் எனும் நைரா பானர்ஜி வரவேற்கிறார். அர்வில்-சிம்ரனின் இல்லற வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருக்கையில், மீண்டும் தனுஜ், சன்னிலியோன் சந்திக்கும் சூழல் அமைகிறது. அதன்பின்னர் இருவரது வாழ்க்கையிலும் எந்தமாதிரி புயல் வீசியது என்பது தான் படத்தின் மீதிக்கதை.


சன்னி லியோன் தான் நடித்த முந்தைய படங்களை விட கவர்ச்சியை குறைத்து(கொஞ்சம் தான்) நடிப்பில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். ஆனால் அந்த நடிப்பு முழுமையாக எடுபடவில்லை. தனுஜ் விர்வானி முந்தைய படங்களை காட்டிலும் நடிப்பில் சற்று தேறியிருக்கிறார். இவர்கள் இருவரைக்காட்டிலும் நைரா பானர்ஜியின் நடிப்பு ஈர்க்கிறது.


சந்தீப்பின் பாடல்கள் இசையும், பின்னணி இசையும் பலமாக இருந்தபோதிலும், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பக்கபலமாக இல்லாததும், எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு பேரின் வாழ்க்கையை ஓர் இரவு எப்படியெல்லாம் மாற்றிப்போடுகிறது எனும் கதையில் இருக்கும் ஆழம், திரைக்கதையில் இல்லாதது இயக்குநர் ஜாஸ்மின் டி-சோசாவிற்கும், படத்திற்கும் பெரிய பலவீனம்.


சன்னி லியோனின் தீவிர ரசிகர்கள் மட்டும் வேண்டுமானால் 'ஒன் நைட் ஸ்டேண்ட்' படத்தை ஒருமுறை பார்க்கலாம். அவர்களும் சன்னி லியோனின் கவர்ச்சியை எதிர்பார்த்து போனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும்.


மொத்தத்தில், 'ஒன் நைட் ஸ்டேண்ட் - நத்திங்'



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in