Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கொல கொலயா முந்திரிக்கா

கொல கொலயா முந்திரிக்கா,
 • கொல கொலயா முந்திரிக்கா
 • கார்த்திக் குமார்
 • ஷிகா
 • இயக்குனர்: மதுமிதா
30 மே, 2010 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கொல கொலயா முந்திரிக்கா

தினமலர் விமர்சனம்

ஜமீன் வீட்டில் இருக்கும் நான்கு சேர்களில் ஒன்றில் வைரம் உள்ளது. நாலும் நாலு இடங்களில் பிரிந்து கிடக்க, எதில் வைரம் இருக்கிறது? சேர்கள் எங்கே இருக்கின்றன? என தேடிச் செல்லும் அரத பழசான ஆள் மாறாட்ட கதைதான் கொல கொலயா முந்திரிக்கா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழிந்து நடக்கும் இந்த வைர சேர் சேசிங்கில், திருடன் கிருஷ், திருடி வேணி ஆகியோருடன் ஜமீன் பரம்பரையில் மிச்சமிருக்கும் ஆனந்தராஜூம் சேர்ந்து கொள்ள, அனல் பறக்கும் சிரிப்பு காட்சிகளுடன் எந்தவித லாஜிக்கும் இல்லாமல் நகர்கிறது படம்.

கிரேஸி மோகனின் சிரிப்பு வசனங்கள் சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கின்றன. க்ளைமாக்ஸில் கிரேஸி வரும் கோர்ட் காட்சியில் ஆர்டர்... ஆர்டர்... என டேபிளில் இருந்த தனது செவிட்டு மிஷினை உடைத்து விட்டு, ஒரு உத்தேசமாக கேஸை கையாளும் காட்சி விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் நகை அபேஸ் பண்ணும் முதல் காட்சியில் இருந்தே ஸ்கோர் செய்ய ஆரம்பித்து விடுகிறார். பிரமாண்ட காரில் வந்திறங்கும் அவர், அடுத்த காட்சியில் நாயகி ஷிகாவுடன் ஓட்டை சைக்கிளில் போவது குலுங்க வைக்கும் சிரிப்பு.  ஷிகாவும், கார்த்திக்கும் 50 : 50 பங்குக்கு ஒப்புக் கொள்ளாமல் தனித்தனியாக நாற்காலியை களவாட முயல்வதும், அங்கே நடக்கும் சுவாரஸ்யம். பின்னர் காதலாகி கசிந்துருகுவதும், ‌டூயட் பாடுவதும் பக்கா கமர்ஷியல் ரூட். லாஜிக் மீறல்கள் பல இருந்தாலும் சிரிக்க வைக்கும் எண்ணத்துடன் படமெடுத்திருக்கும் பெண் இயக்குனர் மதுமிதாவை பாராட்டலாம்.

வழக்கமாக அமெரிக்க மாப்பிள்ளையாய் வரும் கார்த்திக் குமாருக்கு இதில் கதாநாயகன் வேஷம். மனுஷனுக்கு நடிக்க பெரிய வாய்பில்லாவிட்டாலும், வந்த வரை முயற்சித்திருக்கிறார். ஆனால் என்னவோ மனதில் ஒட்டவில்லை. புதுமுகம் ஷிகா நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார். அசட்டு போலீஸ் ஜெய்ராமின் 'விட்டு பிடிக்கிற' ஸ்டைல் விழுந்து சிரிக்கிற அளவு செமத்தியான ஃபார்ம்! வில்லனாகவே பார்த்து பழக்கப்பட்ட ஆனந்தராஜி அசத்தலான காமெடியும் மனதில் கிச்சுகிச்சு மூட்டுகிறது. பெண் இயக்குனர் மதுமிதாவின் இயக்கம்

செல்வகணேஷின் இசை பெரியளவுக்கு செவியின்பத்தை தரவில்லை என்றாலும், ஒரு வரம்... பாடல் நிம்மதி. வேணுவின் ஒளிப்பதிவு ஓகே.

கொல கொலயா முந்திரிக்கா : வாடி வதங்காத கத்தரிக்கா

-----------------------------
குமுதம் விமர்சனம்

நாற்காலிக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும்  வைரத்தை நாயகனும், நாயகியும் தேடிக் கண்டுபிடிக்கும் ""நவாப் நாற்காலி'' காலத்துக் கதை.

அதில் நகைச்சுவை எனும் முந்திரியைத் தூவி சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள்.

படத்தின் நிஜ ஹீரோ கிரேசிமோகன்தான். அவருடைய கதை வசனத்தை மட்டுமே முழுசாக நம்பியிருக்கிறார் இயக்குனர் மதுமிதா.

நாயகன் கார்த்திக் குமாருக்கும் நாயகி ஷீகாவுக்கும் சிரிக்கத் தெரிந்த அளவு நடிக்கத் தெரியவில்லை.
இந்த குறையை நீக்கி ஓரளவு படத்தை விறுவிறுப்பாக்குவது ஜெயராமும், ஆனந்த்ராஜூம்தான். அதிலும் இன்ஸ்பெக்டர் ஜெயராமிடம் வில்லன் ஆனந்த்ராஜ் சிக்கிக் கொள்ளும் ஒவ்வொரு முறையும் தியேட்டர் அதிர்கிறது.

படத்தின் ஒரே திருப்பம் இடைவேளையின் போது அதிரடியாய் கதையில் என்ட்ரியாகும்  சரத்குமார். அவரும் கடைசிக் காட்சியில் வைரத்துக்கு வாரிசு, நாயகிதான் என்று சாட்சி சொல்வதோடு நின்றுவிட, கொல

கொல கொலயா முந்திரிக்கா : முத்துன கத்திரிக்காயாய் முழிக்கிறது! குமுதம் ரேட்டிங் - சுமார்.வாசகர் கருத்து (10)

Hazil - Chennai,இந்தியா
19 ஜூன், 2010 - 18:40 Report Abuse
 Hazil Better Luck Next Time
Rate this:
kavidasan - andhiyur,இந்தியா
15 ஜூன், 2010 - 23:09 Report Abuse
 kavidasan சான்ஸ் ஏ இல்ல.... செதுக்கிருக்காங்க... வாரே வா.... உட்காந்து யோசிப்பாங்களோ....
Rate this:
Kanni - Bay7,இந்தியா
14 ஜூன், 2010 - 15:25 Report Abuse
 Kanni லைப் ல பார்த்த வொர்ஸ்ட் மூவி இது தான். டோடல் வேஸ்ட். க்ரேசி மோகன், சரத் குமார், ஜெயராம், பாண்டியராஜன், ராதா ரவி, ஆனந்த ராஜ் . . இது போன்ற நல்ல நடிகர்கள ஒழுங்கா பயன்படுத்த தெரியல. காமெடி ன்ற பேர் ல செம மொக்கை. பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம். :-)
Rate this:
சந்துரு - chennai,இந்தியா
10 ஜூன், 2010 - 23:09 Report Abuse
 சந்துரு Good film. Comedy & songs are good. Good selection of actors. Good effort from Madhumitha madam. She will become big director.
Rate this:
மொஹ்சின் - brunei,இந்தியா
07 ஜூன், 2010 - 07:52 Report Abuse
 மொஹ்சின் நல்ல காமெடி படம் மெசின் வாழ்கையில் இந்த மாதிரி நகைச்சுவை படம் தான் கோசம் மனதிற்க்கு ஆறுதல்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in