Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சவாரி

சவாரி,Sawaari
  • சவாரி
  • இயக்குனர்:
21 மார், 2016 - 14:27 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சவாரி

தினமலர் விமர்சனம்


நடிகர்கள் : பெனிடோ பிராங்க்ளின், கார்த்திக் யோகி, சனம் ஷெட்டி

இயக்கம் : குகன் சென்னியப்பன்


புது முகங்களுடன் சனம் ஷெட்டி, கார்த்திக் டிஎம்கே, முனிஷ்காந்த், கவிதாலயா கிருஷ்னன், ஜனன், ஹரிஸ் உள்ளிட்ட பழகிய முகங்களும் நடிக்க, "எண்டர்டெயின்மெண்ட் பிரதர்ஸ்" எனும் புதிய பட நிறுவனம் தயாரிக்க, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டிருக்கும் திரைப்படம் தான் "சவாரி.


சென்னை -நெல்லூர் மலைப்பாதையில் காரில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்டு ஏறி, அடுத்தடுத்து கொலைகளை நடத்துகிறான் ஒரு சைக்கோ கொலையாளி. அவனை பிடிக்கத் திட்டமிடும் ஒரு போலீஸ் உயர் அதிகாரியும், சந்தர்ப்பவசத்தால் அவன் பிரயாணிக்கும் காரிலேயே பிரயாணிக்கிறார். அந்த காரோ, பழைய மாடல் காண்டசா கார், ராசி கார் சென்டிமெண்ட் உடைய ஒரு அரக்க புத்தியுடைய எம்எல்ஏ.,வுக்கு சொந்தமானது. டிங்க ரிங், பெயிண்டிங்... எல்லாம் முடிந்து சென்னை ஒர்க்ஷாப்பில் இருந்து ஒரு ஆக்டிங் டிரைவர் ஓட்ட, ஆந்திரா செல்லும் அந்த கார் குறித்த நேரத்தில் எம்எல்ஏ., வசம் சேர்பிக்கப்பட வேண்டும், இல்லையெனில் அந்த ஆக்டிங் டிரைவர் அவ்ளோதான்! எனும் நிலையில், அதில் தன் கார் பழுதானதால் துப்பாக்கி முனையில் லிப்ட் கேட்டு ஏறிய போலீஸ் அதிகாரியும், தன் துர்பாக்கிய நிலையைச் சொல்லி ஏறிய சைக்கோ கொலையாளியும், ஆக்டிங் டிரைவருக்கும், அந்த காருக்கும் தரும் டார்ச்சரும், இறுதியில் சைக்கோ கொலையாளி வென்றானா? போலீஸ் உயர் அதிகாரி அவனை கொன்றாரா..? என்பதும் தான் சவாரி படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.


இந்த கதையை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், த்ரில்லாகவும் சொல்ல முடியுமோ?, அத்தனைக்கு அத்தனை த்ரில்லராக சொல்லி ரசிகனையும் அந்த காண்டசாவில் சவாரி செய்ய விட்டிருப்பதில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் குகன் சென்னியப்பன்.


போலீஸ் அதிகாரி சலோமனாக வரும் பெனிடோ பிராங்க்ளின், ஆக்டிங் டிரைவர் ரவியாக வரும் கார்த்திக் யோகி உள்ளிட்ட இரு புதுமுக நாயகர்களும் சின்ன, சின்ன விஷயங்களில் கூட சிறப்பாக போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். அதிலும் ரவி அபாரம்.


இவர்களை மாதிரியே, மதி - மதிவாணன், சைக்கோ ஆர்கேவி-கார்த்திக் டிஎம்கே, கணேஷ் - பாண்டியன் , கார்-மாடல் ஷாப் உரிமையாளர் _கவிதாலயா கிருஷ்ணன், கமிஷ்னர்-கஜராஜ், எம்.எல்.ஏ.பொன்மலை, அவரது பிஏ ஈஸ்டர், டிரைவர் ரவியின் அண்ணன் - ஹரிஷ், எம்.எல்.ஏ.,வின் ஆட்கள் முனிஷ்காந்த், கார்த்திக் ஆர்.எஸ்., இன்ஸ் ஜனன், சைக்ரியா டிஸ்ட்- பிரதீப் , ஆர்.ஜே-.பரத் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.


ஜெனியாக சனம் ஷெட்டி இப்படத்திற்கும், கதாநாயகி வேண்டுமே... என வந்து போகிறார். பாவம்!


விஷால் சந்திரசேகரின் இசை, செழியனின் ஒளிப்பதிவு, கிஷோர்.டிஇ.யின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும், குகன் சென்னியப்பனின் இயக்கத்தில் சமீபத்தில் சித்தார்த் நடித்து வெளிவந்த ஜில் ஜங் ஜக் பட சாயல் அப்பட்டமாய் தெரிவது பலவீனம்...!


நம் தமிழ் படங்களில் உலகப் பட சாயல், தழுவல், இது மாதிரி உருவல்.... இருந்தால் இருந்து விட்டு போகட்டும்... அது நம்மூருக்கு ஒவ்வாத, நம்ப முடியாத தழுவல், உருவலாக, ஜில் ஜங் ஜக் மாதிரி இல்லாது, "சவாரி" மாதிரி சமாளித்திருந்தால் சரி... என்னும் வகையில் ஆறுதல் அளிக்கிறது!


சவாரி - அப்படி, இப்படி... ஒரு வழியாக தேறி, ரசிகர்களை சமாளி(த்திருக்கிறது...)!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
சவாரி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in