Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

காதலன் காதலி

காதலன் காதலி,
  • காதலன் காதலி
  • ஜெய் ஆகாஷ்
  • டெய்ஸி
  • இயக்குனர்: ஜெய் ஆகாஷ்
22 நவ, 2011 - 16:02 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » காதலன் காதலி

தினமலர் விமர்சனம்



தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடிக்க போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் ஜெய் ஆகாஷ், நடத்தியிருக்கும் காதல் போராட்டம் தான் "காதலன் காதலி".

கதைப்படி திருப்பதி என்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஜெய் ஆகாஷ். அவருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் நிதி சுப்பையாவிற்குமிடையே உயிருக்கு உயிரான காதல்! நிதி சுப்பையாவின் ஒரு சில நடவடிக்கைகளைப் பார்த்து அம்மணிக்கும், அவரது முதலாளிக்குமிடையில் கள்ளத்தொடர்பு என சந்தேகிக்கும் ஜெய், அதை நேரடியாக கேட்க, நிதிக்கும்-ஜெய்க்குமிடையேயான காதல் மோதலில் முடிகிறது. அதன் விளைவு தன் படிப்பை நண்பர்கள் உதவியுடன் சென்னை வந்து தொடரும் ஜெய்க்கு காதல், கத்திரிக்காய் என்றாலே பாகற்காயாய் கசக்கிறது. கல்லூரியில் யாராவது யாரையாவது காதலித்தார் என்று தெரிந்தால் அவர்களை அடித்து பிரிக்கும் ஜெய், மீது டெய்சி போபனாவிற்கு காதல் வருகிறது. அந்த காதல் கைகூடியதா, இல்லையா...? நிதி சுப்பையா மெய்யாலுமே ஜெய்யுடனான காதலில் துரோகம் செய்தாரா..? இல்லையா...? என்பது காதலன் காதலி படத்தின் யூகிக்க முடியாத மீதிக்கதை!

கல்லூரி மாணவர், ப்ளஸ் குத்துச்சண்டை வீரர் என ‌ஹெவிரோலில் நடித்தும், இயக்கியும் இருக்கும் ஜெய் ஆகாஷூக்கு இப்படத்தில் அவரது இயக்கத்தைவிட நடிப்பு பெட்டர். இவை இரண்டையும்விட நிதி சுப்பையா, டெய்சி போபனா இருவருடனும் கனவிலும், நிஜத்திலும் அடிக்கடி போடும் டூயட்கள் பெட்டர்! டெய்சி, நிதி இருவரும் கிளாமரே கதி என ஒரேயடியாக கவர்ச்சியை நம்பி இருப்பதால் நடிப்பு மிஸ்ஸிங். சுஹானி, ராகுல்தேவ், சுகுமார் என நிறைய பேர் படத்தில் இருக்கிறார்கள். நந்தன்ராஜின் இசை, ஜாக்கிஜானின் ஒளிப்பதிவு எல்லாம் இருக்கிறது.

தன்னை சந்தேகித்து விலகும் காதலுனுக்கு, தன் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என புரிய வைத்து, இறந்து தன் இருதயத்தையும் பரிசாக தரும் காதலி எனும் புதிய "தாட்"டை "நச்" சென்று படமாக்கியிருந்தால், ஜெய் ஆகாஷ், ஜெயித்திருப்பார்! ஜொலித்திருப்பார்! "காதலன் காதலி" ஜெய் ஆகாஷூக்கு "தோல்வி தராத தோழி!"



வாசகர் கருத்து (1)

Pradeep kumar - Tirunelveli tamil nadu,இந்தியா
18 டிச, 2011 - 20:47 Report Abuse
 Pradeep kumar The film is super. Jai akash acting created a marvelous history in the field of tamil film. I wish all the best for jai akash to act in the coming film. He is a great talent and hardworker.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in