Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

நேனு சைலஜா (தெலுங்கு)

நேனு சைலஜா (தெலுங்கு),Nenu Sailaja
  • நேனு சைலஜா (தெலுங்கு)
  • இயக்குனர்:
02 ஜன, 2016 - 14:39 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நேனு சைலஜா (தெலுங்கு)

ஹீரோ - ராம்

ஹீரோயின் - கீர்த்தி சுரேஷ்

இயக்குனர் - கிஷோர் திருமலா


2016 தெலுங்கு தேசத்தில் நேனு சைலஜா எனும் காதல் கதையுடன் தொடங்குகிறது. நேனு சைலஜா திரைப்படம் இளம் கதாநாயகன் ராம் மற்றும் கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது.


இருவரின் சிறு வயது கதாபாத்திர சித்திரிப்புடன் தொடங்கும் படம், அந்த காட்சிகளால் பெரிதும் பயன் இல்லை என்றாலும், அதன் வழியாக ஷைலஜா(கீர்த்தி சுரேஷ்)வின் கதாபாத்திர குணபாவங்கள் விவரிக்கப்படுகிறது. மத்தபடி இந்த முன்கதை சுருக்கத்திற்கு பெரிதாக படத்தில் வேலை இல்லை. சரி கதைக்கு வருவோம், நாயகன் ஹரி(ராம்) ஒரு யதார்த்த இளைஞன் அவனது தேவை எல்லாம் மிகச்சிறியது யாரையேனும் மனதிற்கு பிடித்தவராக பார்த்து காதலிக்க வேண்டும். இவன் நினைத்தால் மட்டும் போது.


ஹரிக்கு அதிர்ஷ்டமேயில்லை என்று சொல்லலாம், இவன் துரத்தி துரத்தி காதல் செய்யும் அனைவரும் இவனை காரணமே இல்லாமல் வெறுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் காதலே வேண்டாம் என்று சுற்றி திரிகிறான். இப்போதும் விதி விளையாடுகிறது ஷைலஜாவை இவன் வாழ்வில் அறிமுகப்படுத்துகிறது. ஒரு வருடம் பழகுகிறார்கள். இப்படியே மகிழ்ச்சியாக நாட்கள் செல்ல ஒரு நாள் ஹரி தனது காதலை சொல்கிறான் ஏனோ ஷைலஜா அதை ஏற்க மறுக்கிறாள்.


மனம் வெறுத்து போன ஹரி, இனிமேல் காதலும் வேண்டாம் எதுவும் வேண்டாம் என முடிவெடுக்கிறான். அப்பொழுது தான் அவனுக்கு ஒரு சிறு தகவல் கிடைக்கிறது. அதில் முறிந்த காதலுக்கான காரணம் இருக்கிறது.பின்னர் என்ன செய்தான்? காதல் கைகூடியதா? என்பதே மீத்திக்கதை.


ராம் தனது கதாபாத்திரத்தில் மிகச்சரியாக பொருந்துகிறார். அதுவும் அவர் காதலில் விழும் போதும் காதல் அவரை வீழ்த்தும் போதும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மலையாள தேசத்து நாயகி கீர்த்தி சுரேஷ் அழகாக வருகிறார், அவரது கதாபாத்திரமும் வலுவாக இருக்கிறது. அவர் படத்திற்கு பலம் என்றே சொல்லலாம்.


சில பல சுவாரஸ்யமான காட்சிகளுடன் நகரும் முன் பாதியுடன் ஒப்பிடும் போது இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாகத்தான் செல்கிறது.அனேக இடங்களில் அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்க முடிகிறது, அதை கொஞ்சம் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.அடுத்ததாக தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்கு பெரும் பலம் ,எந்த பாடலும் வலிய திணிக்க வைக்கப்பட்டது போல் இல்லை. எல்லாம் காட்சிகளோடு பொருந்திப் போகிறது. அதை காட்சிப் படுத்திய விதமும் ரசிக்க வைக்கிறது.


இயக்குனர் கிஷோர் திருமலா தன் பங்கை சரியாக செய்திருக்கிறார், எடுத்துக்கொண்ட கதையை அழகாக சொல்லியதுடன் எந்த காட்சிகளும் வலிய திணிக்கப்பட்டது போல் இல்லாமல் இருந்தது படத்தை ரசிக்க வைக்கிறது.வழக்கமான காதல் கதை தான் என்பதை மறந்து நீங்கள் தியேட்டருக்கு சென்றால் இப்படம் உங்களை மகிழ்விக்கும்.


நேனு சைலஜா - காதலும் காதல் மட்டும்



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in