Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

அடி கப்பியாரே கூட்டமணி (மலையாளம்)

அடி கப்பியாரே கூட்டமணி (மலையாளம்),Adi kapyare kootamani
  • அடி கப்பியாரே கூட்டமணி (மலையாளம்)
  • இயக்குனர்:
29 டிச, 2015 - 14:13 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » அடி கப்பியாரே கூட்டமணி (மலையாளம்)

நடிகர்கள்: தயன் சீனிவாசன், நமீதா பிரமோத், அஜூ வர்கீஸ், நீரஜ் மாதவ், முகேஷ், ஜான் விஜய் மற்றும் பலர்

இயக்குனர்: ஜான் வர்கீஸ்


கதை ரொம்பவே சிம்பிள் தான். நகரத்தின் மையப்பகுதியில் ஒரு பாய்ஸ் ஹாஸ்டல். அதன் ஸ்ட்ரிக்ட் வார்டன் முகேஷ். மாலை 6.30 மணிக்கெல்லாம் கேட்டை இழுத்து சாத்திவிடுவார். அங்கே தங்கி படிக்கும் தயன் சீனிவாசன் (இவர் வினீத் சீனிவாசன் தம்பி), அஜூ வர்கீஸ், நீரஜ் மாதவ் மற்றும் வினீத் மோகன் நால்வரும் நண்பர்கள்.


இந்த ஹாஸ்டலுக்குள் தன்னை எப்படியாவது அழைத்துச்சென்று மீண்டும் வெளியே கொண்டு வந்து விடுமாறு தயன் சீனிவாசனிடம் உதவி கேட்கும் நமீதா பிரமோத், அந்த உதவிக்காக பணமும் கொடுக்கிறார். அவர் எதற்காக பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் நுழைகிறார் என்பது காமெடி ட்விஸ்ட். தயனும் ஹாஸ்டலில் உள்ள பின்வழியாக அவரை உள்ளே அழைத்து செல்கிறார். நமீதா வந்த வேலையும் பத்து நிமிடத்தில் முடிகிறது. இப்போது வெளியே கிளம்பலாம் என திரும்பி வந்தால் வந்த வழியை அடைத்துக்கொண்டு சில ரவுடிகள் மது அருந்திக்கொண்டு இருக்கிறார்கள்.


இவர்கள் இருக்கும்போது வெளியேற முடியாது என்பதால் நமீதாவை தனது அறையில் தங்க வைத்து இரவில் வெளியேறலாம் என்கிறார் தயன். ஆனால் சூழ்நிலை நமீதாவை அங்கிருந்து வெளியேற விடாமல் மூன்று நாட்களாக அங்கேயே தங்க வைக்கிறது. நண்பர்களுக்கு கூட தெரியாமல் இதை செய்தாலும், ஒருகட்டத்தில் அவர்களுக்கும் உண்மை தெரிய வருகிறது.


இந்த சூழலில் அங்கே இருக்கும் மற்ற மாணவர்கள், வார்டன் யார் கண்ணிலும் படாமல் நமீதாவை ஹாஸ்டலில் இருந்து வெளியேற்ற இந்த நால்வரும் எடுக்கும் முயற்சியும் அதை தொடர்ந்து நடக்கும் ரணகள காமெடியும் தான் முழுப்படம்.


தயன் சீனிவாசன், ஹீரோவாக நடிக்க ஏற்ற தகுந்த கதியை செலக்ட் செய்திருக்கிறார். அவருக்கு பக்கபலமாக காமெடியில் கைகொடுத்திருக்கிறார்கள் அஜூ வர்கீஸும், நீரஜ் மாதவும். போதாததற்கு வார்டனாக வரும் முகேஷும் அவரது அசிஸ்டன்ட் ஆக வரும் பிஜூ குட்டனும் சேர்ந்து காமெடியில் கலக்கி எடுத்திருகிறார்கள்.. புன்னகை இளவரசி நமீதா பிரமோத் வரும் காட்சிகளில் எல்லாம் நம் கண்களை வேறுபக்கம் அகற்ற விடாமல் மாயஜாலம் செய்கிறார்.


ஒரு பாய்ஸ் ஹாஸ்டலில் ஒரு இளம்பெண் மூன்று நாட்கள் இருந்தால் என்கிற சுவாரஸ்யமான கற்பனையை எல்லையில்லாத காமெடியை கொண்டு அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். 90 சதவீத படம் ஹாஸ்டலில், அதிலும் இரவு நேரத்தில் தான் நடக்கிறது என்றாலும் அலுப்பு தட்டாமல் நகர்த்துகிறது திரைக்கதை.


ஒரு சின்ன ஹீரோ, ஒரு ஸ்மைலிங் ஹீரோயின், இரண்டு காமெடியன்கள், ஒரு பாய்ஸ் ஹாஸ்டல் இவற்றை வைத்து லோ பட்ஜெட்டில் ஒரு நான்ஸ்டாப் காமெடி படத்தை கொடுக்க முடியும் என நிரூபித்துள்ள படம் தான் இந்த 'அடி கப்பியாரே கூட்டமணி'..


வெல்டன் டைரக்டர் ஜான் வர்கீஸ்..!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in