Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஜஸ்பா

ஜஸ்பா,Jazbaa
  • ஜஸ்பா
பிரபல இயக்குநர் சஞ்சய் குப்தா இயக்கியுள்ள படம் இது.
10 அக், 2015 - 14:19 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஜஸ்பா

தினமலர் விமர்சனம்


நடிகர்கள் : ஐஸ்வர்யா ராய், இர்பான் கான்

இயக்குநர் : சஞ்சய் குப்தா


உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஐந்தாண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரியாகியிருக்கும் படம், அதிலும் ஐஸ்வர்யா ஆக்ஷ்ன் ரோல் எல்லாம் செய்துள்ள படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் படம் ஜஸ்பா. இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா...?, மீண்டும் ரசிகர்கள் மனதில் ஐஸ்வர்யா ராய் இடம் பிடித்தாரா..? என இனி பார்ப்போம்...!


ஐஸ்வர்யா ராய், அனுராதா வர்மா எனும் வக்கீல் கதபாத்திரத்தில் வருகிறார். அவருக்கும் ஒரு மகள். அந்த மகளை கடத்தல்காரர்கள் கடத்திவிடுகின்றனர். மகளை விட வேண்டும் என்றால், பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை தன்னுடைய வாதத்தால் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கடத்தப்பட்ட தனது மகளை ஐஸ்வர்யா மீட்டாரா...? இல்லை தனது வாதத்தால் குற்றவாளிக்கு விடுதலை செய்ய வைத்தாரா...? எனும் கேள்விக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவு விடையளிக்கிறது ஜஸ்பா படத்தின் மீதிக்கதை. ஐஸ்வர்யா ராயுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி யோகன் எனும் இர்பானும் உதவிக்கு வருகிறார், படத்தில் அவரது பங்கு என்ன என்பதையும் ஜஸ்பா படம் விவரிக்கிறது.


ஒரு குழந்தை பெற்ற பின்னர் கூட இன்னமும் அதே அழகு குறையாமல் இருக்கிறார் ஐஸ்வர்யா. இதுவரை தான் நடித்திராத ஒரு வித்தியாசமான ரோலில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா. ஆனால் முதல் 30 நிமிடங்களில் ஐஸ்வர்யாவின் நடிப்பு யாரையும் கவரவில்லை, அதன்பின்னர் நடிப்பில் தூள் கிளப்புகிறார் ஐஸ்வர்யா.


இர்பான் கான், சொல்வே வேண்டாம், தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை பக்காவாக செய்து ரசிகர்களை ஈர்க்கிறார்.


கொரியன் படமான செவன் டேஸ் படத்தின் ரீ-மேக் தான் இந்த ஜஸ்பா. அதை நம்மூர் ரசிகர்களுக்கு ஏற்றபடி கொஞ்சம் மாற்றி கொடுத்திருக்கிறார் இயக்குநர் சஞ்சய் குப்தா. படத்தின் முதல்பாதி மெதுவாக நகருகிறது, இடைவேளைக்கு பின்னர் அப்படியொரு வேகம் படத்தில், ஆனால் திரைக்கதையில் இருக்கும் தொய்வு ரசிகர்களை சலிப்படைய செய்ய விடுகிறது. படத்திற்கு ப்ளஸே இசையும், வசன உச்சரிப்பும் தான்.


'ஜஸ்பா' ஐஸ்வர்யா ராய் படம் தான், ஆனால் ஐஸ்வர்யா ராய் போன்று அழகாக இல்லை. ஐந்து வருடத்திற்கு பிறகு ஐஸ்வர்யா, ரீ-என்ட்ரியாகியிருப்பதால் என்னவோ படம் முழுக்க அவர் தான் காணப்படுகிறார். அதனாலேயே ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படுகிறது. ஆனாலும் ஐஸ்வர்யா ராய்க்காக படத்தை ஒருமுறை பார்க்கலாம்.


மொத்தத்தில், ''ஜஸ்பா - ஐஸ்ட் பாஸ் பா''




ரேட்டிங் - 2/5



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in