Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கேடுஹடு (தெலுங்கு)

கேடுஹடு (தெலுங்கு),Ketugadu (Telugu)
  • கேடுஹடு (தெலுங்கு)
இயக்குநர் கிட்டு நல்லூரி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் இது.
21 செப், 2015 - 13:06 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கேடுஹடு (தெலுங்கு)

நாயகன்- தேஜுஸ்

நாயகி - சாந்தினி சௌத்ரி

இயக்குநர் - கிட்டு நல்லூரி


டோலிவுட்டில் வெளியான உலவசாரு பிரியாணி என்ற வெற்றி படத்தின் கூட்டணியான தேஜுஸ் மற்றும் சாந்தினி சௌத்ரி இணைந்து நடித்திருக்கும் படம் கேடுஹடு. ஒரு தொழிலதிபரின் சகோதிரி அகிராவை(சாந்தினி சௌத்ரி) இருவர் கடத்த முயற்சிக்கிறார்கள். தொழிலதிபர்(அஜய்) ஒருவர் தனிப்பட்ட லாபத்திற்காக அகிராவை கடத்த நினைக்க.. மற்றொரு பக்கம் அகிராவின் காதலன் சந்துவே(தேஜுஸ்) அவளை கடத்த நினைக்கிறான். கார்களை திருடி அதன் மூலம் தன் வாழ்க்கை நடத்தும் ஏமாற்று பேர்வழியான சந்துவிற்கு தனது காதலியைக் கடத்த தனிப்பட்ட லாபம் ஏதும் இல்லை. சந்துவிடம் அகிராவைக் கடத்த சொன்னது அகிராவின் அண்ணன்.(பிரகாஷ்). ஏன் அகிராவை கடத்த முயற்சிக்கிறார்கள்? யார் கடத்தினார்கள்? அகிரா மீட்க்கப்பட்டாரா? என்பதை தியேட்டரில் தான் பார்த்தாக வேண்டும்.


இளம் நாயகன் தேஜஸ் ஏற்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். சாந்தினி தன் அழகால் ரசிகர்களின் ஆதரவை பெறுகிறார்.இப்படத்தில் வரும் காமெடி காட்சிகள் திரையரங்குகளில் சிரிப்பலைகளை ஏற்படுத்துகின்றன. கிளைமேக்ஸுக்கு முந்தைய காட்சிகள் தான் படத்தை தாங்கி பிடிக்கின்றன.. அங்கே படத்தின் பல முடிச்சுகள் அவிழ்ந்து படத்தின் வேகம் இன்னும் கூடுகிறது.


பழக்கப்பட கதை படத்திற்கு பாதகமான விசயமாகிறது. அதுவும் தேவையே இல்லாமல் இடையில் வரும் பாடல்கள் படத்தின் வேகத்தை தடை செய்கிறது. காட்சிகளின் வேகத்தை கட்டுப்படுத்தும் பாடல்களை தவிர்த்திருக்கலாம்.. தேவையில்லாத காட்சிகளால் முன்பாதி வேகம் குறைவதை தடுத்திருந்தால் படத்தின் வேகம் ஒட்டமெடுதிருக்கும். கிளைமேக்ஸில் புதிது புதிதாக கதாபாத்திர அறிமுகம் குழப்பத்தையே உண்டாக்குகிறது. ஒளிப்பாதிவாளர் எம்.பி.ஜோஷி படத்திற்கு பக்க பலம். இயக்குநர் கிட்டு நல்லூரி பழக்கப்பட்ட கதையை அழகாக சொல்லி ரசிக்க வைக்கிறார். அதுவும் முக்கிய இடங்களில் அவரது கதை சொல்லல் ஈர்க்கிறது. ஒரு கடத்தல் சில காமெடி மற்றும் சண்டைகள் என அளவான கலவையாக கேடுஹடு படம் காட்சிப்படுதப்படுள்ளது.


மொத்தத்தில், ''கேடுஹடு - பழக்கப்பட்ட கடத்தல் களம்!''



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in