Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கொரியர் பாய் கல்யாண் (தெலுங்கு)

கொரியர் பாய் கல்யாண் (தெலுங்கு),Courier Boy Kalyan
  • கொரியர் பாய் கல்யாண் (தெலுங்கு)
இயக்குநர் கெளதம் மேனன் தயாரித்துள்ள படம் இதுவாகும்.
18 செப், 2015 - 15:05 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கொரியர் பாய் கல்யாண் (தெலுங்கு)

நாயகன் - நிதின்

நாயகி - யாமி கெளதம்

இயக்குநர் - பிரேம் சாய்


டோலிவுட்டில் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து வெளியாகியுள்ள படம் கொரியர் பாய் கல்யாண். தெலுங்கு திரை உலகில் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிற காரணம் இதன் தயாரிப்பாளர் கோலிவுட்டின் ஸ்டைலிஸ்ட் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். ஒரு காலத்தில் சின்னத்திரை தொடர்களில் கொடி கட்டி பறந்த நடிகர் பிரேம் சாய் இப்படத்தின் வாயிலாக வெள்ளித்திரையில் இயக்குநராக நுழைந்துள்ளார். இப்படம் தமிழில் நடிகர் ஜெய் நடிப்பில் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற பெயரில் வெளிவரவுள்ளது.


கொரியர் பாய் கல்யாண் படத்தில் நாயகன் கல்யாண் (நிதின்) நாயகி காவ்யா (யாமி கெளதம்)மீது காதலில் விழுகிறான். அவளின் காதலை பெற ஏதாவது செய்தாக வேண்டும். தினம் அவளை பார்த்தாக வேண்டும் என்பதற்காக கொரியர் பாய் ஆகிறான். தினம் பல பார்சல்களுடன் அவளது அலுவலகம் செல்கிறான். அனுதினமும் நாயகியைப் பார்க்கிறான்.நயாகன் எதிர்பார்த்தது போல் காதலும் இலவச இணைப்பாக பிரச்சனையும் கிடைக்கிறது. பிரச்சனை காதலில் இல்லை. பார்சலில் வழி வருகிறது. ஒரு பிரச்சனைக்குரிய பார்சல் கல்யாண் கைக்கு வருகிறது. அதன் சொந்தக்காரர்கள் யாரென்று பார்த்தால் மிகப் பெரும் டாக்டர்கள்.பார்சலுக்காக ஒரு கூட்டம் கல்யாணைத் துரத்துகிறது. பார்சலில் வந்த பிரச்சனை என்ன? காதல் கைகூடியதா? கல்யாண் உயிர் பிழைத்தானா என்பது தான் இப்படத்தின் விறுவிறுப்பான மீதிக் கதை.


படத்தின் கதையும் பயணிக்கும் களமும் டோலிவுட்டிற்கு சற்றே புதிது. நிதின் கொரியர் பாயாக படத்தையும் அழகாக ரசிகர்களுக்கு டெலிவரி செய்கிறார். யாமி கெளதம் அழகாக மிக அழகாக வருகிறார். படத்தில் நாயகிக்கு பெரும் பங்கு இல்லை என்றாலும் யாமி கெளதம் கவனம் ஈர்க்கிறார். இப்படத்தில் காதலுடன் செல்லும் முன்பாதி, இடைவேளையின் திருப்பத்திற்கு பின்னர் இரண்டாம் பாதியில் வேகம் எடுக்கின்றது.


ஒரேபிரச்சனை என்னவென்றால், படத்தில் தவறான இடத்தில் வரும் பாடல்கள். பாடல்கள் அருமையாக இருக்கிறது. காட்சிப்படுத்திய விதமும் அருமை. எனினும் பாடல்களை தவிர்த்திருந்தால் கொரியர் பாயின் டெலிவெரி வேகம் கூடியிருக்கும். ரொமேண்டிக் காட்சிகள் மிக அழகாக வந்திருப்பது படத்திற்கு பலம். படத்தின் இசை, பாடகர் கார்த்திக். அவரது குரல் போலவே இசையும் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையிலும் மனிதர் ஜெயித்திருக்கிறார்.


அறிமுக இயக்குநர் பிரேம் சாய் வித்தியாசமான கதைக்களத்துடன் வந்தது வரவேற்க வைத்தாலும். கமர்ஷியல் விசயங்களுக்காக பாடல்களை புகுத்தியது படத்தின் குறையாக தெரிகிறது. ஒரு முழு த்ரில்லர் படமாக வரவேண்டிய கொரியர் பாய் கல்யாண் படத்தின் வேகம் பாடல்களின் இடையூரினால் குறைகிறது. மென் தென்றலாய் வருடும் முன்பாதி பரபர இரண்டாம் பாதி என கொரியர் பாய் பார்க்க வைக்கிறான்.


கொரியர் பாய் கல்யாண் - த்ரில்லர் பார்சல்



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in