Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கிக் 2 (தெலுங்கு)

கிக் 2 (தெலுங்கு),Kick 2
  • கிக் 2 (தெலுங்கு)
  • இயக்குனர்:
22 ஆக, 2015 - 15:54 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கிக் 2 (தெலுங்கு)

நாயகன் - ரவி தேஜா

நாயகி - ராகுல் ப்ரீத்தி சிங்

இயக்குநர் - சுரேந்தர் ரெட்டி


டோலிவுட்டின் மாஸ்மகாராஜா என ரசிகர்கள் கொண்டாடும் ரவி தேஜாவின் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற கிக் படத்தின் இரண்டாம் பாகமாக கிக் 2 படம் உருவாகி வெளிவந்துள்ளது. இப்படத்தில் ரவி தேஜாவிற்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார்.


முந்தைய பாகத்தில் ராபின் ஹீட் கதாபாத்திரத்தின் சாயலில் அமைக்கப்பட்டிருந்த ரவி தேஜாவின் கதாபாத்திரம், இரண்டாம் பாகத்தில் ராபின் என்கிற பெயருடன் ராபின் ஹூட்டின் வாரிசு போல் அமைக்கப்பட்டிருக்கிறது. ராபின் (ரவி தேஜா) ஒரு மருத்துவர். இந்தியாவில் உள்ள அவரது நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை தீர்ப்பதற்காக லண்டனில் இருந்து இந்தியா வருகிறார். அப்போது தான் அவரது நிலம், அபகரிக்கப்பட்டது தெரிகிறது.


இதன் இடையில், படத்தில் கதாசிரியராக வரும் நாயகி சைத்ராவை(ராகுல் பீரித் சிங்) ராபின் பார்க்கிறார் ஒரு தயாரிப்பாளருக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். ராபினைச் சந்திக்கும் சைத்ரா, ராபினின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, அவன் மேல் காதல் வயப்படுகிறாள். இதே நேரம், பீகாரில் ஒரு கடைக்கோடி கிராமமான விலாஸ்பூர் மக்கள், சாலமன் சிங்க் (ரவி ) அடாவடிகளால் அவதிப்படுகிறார்கள். தங்களை மீட்டு காப்பாற்ற யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்து நிற்கிறார்கள்.


இடையில் இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவன், ரபின் ஹூட் ஒரு ரவுடியை தன் சொந்த பிரச்சனைக்காக அடிப்பதை பார்க்கிறான். ராபினால் தங்களை காப்பாற்ற முடியும் என நினைக்கிறார்கள் கிராம மக்கள். ராபினை எப்படி தங்கள் கிராமத்துக்கு அழைத்து வந்தார்கள்?? சாலமன் அடக்கப்பட்டான ?? கிராம மக்கள் நிம்மதி அடைந்தார்களா? என்பதை வெள்ளித்திரையில் காண்க.


முந்தைய படம் போல் இதிலும் ஒற்றை ஆளாக படத்தை தன் தோளில் சுமக்கிறார் ரவி தேஜா. ராகுல் பிரீத்தி சிங் அழகால் வசீகரிக்கிறார். நன்றாக ஆடுகிறார். கிராமத்து காட்சிகளிலும் சொல்லி கொடுத்தை அழகாக செய்திருக்கிறார். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி, நீல கலர் லென்ஸ் உடன் தனது ஆஸ்தான வில்லனையே இதிலும் நடிக்க வைத்திருக்கிறார் .


இசையமைப்பாளர் தமன் தன் வேலையை மிகப் பொருத்தமாக செய்திருக்கிறார். முதல் பாதியில் வரும் டூயட் பாடல்கள் நன்றாக இருக்கின்றன. பின்னணி இசையிலும் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார் தமன். வழக்கம்போல் படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் இருக்கத்தான் செய்கிறன. இது போன்ற ஆக்ஷன் படங்களுக்கு செல்லும் போது மூளையை களட்டி வைத்துவிட்டு தான் போக வேண்டும் போல. எது எப்படி இருந்தாலும் படத்தின் வேகம் நம்மை அதையெல்லாம் மறக்கடிக்கிறது.படத்தின் ஒளிப்பதிவை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.


சுரேந்தர் ரெட்டி ஒரு கம்ர்ஸியல் படத்தை கொடுக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். பழக்கப்பட்ட கதை, திடுக் திருப்பங்கள் இல்லாத திரைக்கதை, என சில இடங்களில் பலவீனமாகிறது கிக்-2. கதை சொல்லலிலும் புது யுக்தியை கையாண்டிருக்கலாம், முந்தய படங்களை பார்த்தால் கிக் -2 வில் காமெடியும் சரியாக வரவில்லை.படத்தின் மிகச் சிறந்த காட்சிகள் என்றாள் கிளைமேக்ஸிற்கு முன் வரும் விலாஸ்பூர் ரயில் நிலைய காட்சிகள் தான். மொத்தமாக பார்த்தால் டெக்னிக்கலாக தரமான படம், இரண்டாம் பாதி திரைக்கதையை இன்னும் சரி செய்திருந்தால். கிக் -2 முதலாவதை மிஞ்சியிருக்கும்.


கிக்-2 - ரசிக்கலாம் ஒரு முறை



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in