Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஜேம்ஸ் பாண்ட் (தெலுங்கு)

ஜேம்ஸ் பாண்ட் (தெலுங்கு),Games Bond
  • ஜேம்ஸ் பாண்ட் (தெலுங்கு)
சாய் கிஷோர் இயக்கியுள்ள படம் இது.
25 ஜூலை, 2015 - 11:56 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஜேம்ஸ் பாண்ட் (தெலுங்கு)

நாயகன் - அல்லரி நரேஷ்

நாயகி - சாக்ஷி சௌத்ரி

இயக்குநர் - சாய் கிஷோர்


குறும்பு , போராளி போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷ், டோலிவுட்டில் நகைச்சுவை நாயகனாக பல படங்களில் நடித்துள்ளார். அவரது சமீபத்திய படங்கள் பெரிதாக பேசப்படாத நிலையில், அல்லரி நரேஷ்க்கு வெற்றி தேவைப்படும் இந்த தருணத்தில் இம்முறை நம்பத்தகுந்த கதைக்களம் கொண்ட “ஜேம்ஸ் பாண்ட்” படத்தில் காமெடி கதையுடன் வந்திருக்கிறார்.


“ஜேம்ஸ் பாண்ட்” படத்தில் நானியாக நடித்திருக்கும் நரேஷ் அமைதியான அடக்கமான மென்பொருள் பொறியாளர். அவரும் அவரது குடும்பமும் எல்லா உயர் நடுத்தர வர்க்கம் போல் எந்த பிரச்சனையிலும் தலையிடாமல். தான் உண்டு தங்கள் வேலை உண்டு என்று இருக்கிறார்கள். இப்படி எல்லாம் வழக்கமாக போகும் திரைக்கதையில் திருப்பம் வரவேண்டுமே அதுவும் வருகிறது. நரேஷின் திருமண ரூபத்தில். அவர் மணமுடித்தது ஒரு பெண் தாதாவை. இது மிக தாமதமாகத்தான் தெரியவருகிறது.


சாக்ஷி சொளத்ரியின் கடந்த காலம் தெரியாமல் சிக்கிக் கொண்ட நரேஷ் திக்குமுக்காடுகிறார்.அவரை விட்டுவிட்டு ஓடிவிட நினைக்கிறார். அப்புறம் என்ன நடந்தது? ஓடிப்போனாறா? சாக்ஷி என்ன செய்தார்?? என நகைச்சுவையுடன் மீதி கதையை சொல்லியிருக்கிறார்கள். வழக்கம்போல் நரேஷ் மொத்தமாக படத்தை தாங்குகிறார். அவரின் உடற்மொழியும் நடிப்பும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது. தனக்கு என்ன வருகிறதோ அதை இயல்பாக செய்து ரசிகர்களை கவர்கிறார். சாக்ஷி சற்றே இறுக்கமான கதாபாத்திரத்தில் தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார்.


படத்தில் இடம் பெரும் காமெடி காட்சிகளும் நன்றாகவே வந்திருக்கின்றன. சப்தகிரி , ஜெயபிரகாஷ் ரெட்டி மற்றும் துணை நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக நிறைவேர்றி இருக்கிறார்கள்.வசனங்களும் அளவான பஞ்ச் டயலாக்குகளும் படத்தில் இருப்பது ஆறுதல்.. மேலும் சாக்ஷியின் காதாபாத்திரத்திற்கு பொருந்தும் வகையில் இரண்டு சண்டைக்காட்சிகள் அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.


வழக்கமான யூகிக்க முடிந்த கதைதான் இருந்தும் நம்மை சிரிக்க வைத்து அதை மறக்க வைக்கிறார்கள். படத்தின் நீளம் சற்றே நம் பொறுமையை சோதிக்கிறது கொஞ்சம் குறைத்திருக்கலாம். அதுவும் இரண்டாம் பாதியில் சம்பந்தமே இல்லாமல் வரும் பாடல்களை தவிர்த்திருக்கலாம் இன்னும் படம் நன்றாக இருந்திருக்கும். எல்லோருக்கும் தெரிந்த கிளாமாக்ஸ் புதிதாக சொல்ல ஏதும் இல்லை.


அறிமுக இயக்குனர் சாய், இயல்பான ஒரு கதையை படமாக்கியிருக்கிறார். எடிட்டிங்க் மற்றும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக வந்திருக்கும்.மொத்தமாக அல்லரி நரேஷ் தனக்கு இயல்பாக வருவதை செய்து ரசிகர்களை திருப்திபடுத்தியிருக்கிறார். உற்சாகமான முதல் பாதி சற்றே சுற்றலுடன் இரண்டாம் பாதி என படம் ஒரு ஜனரஞ்சக படமாக இருக்கிறது.


ஜேம்ஸ் பாண்ட் : காமெடி துப்பாக்கி



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in