Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

என்.‌ஹெச்.10 (ஹிந்தி்)

என்.‌ஹெச்.10 (ஹிந்தி்),NH 10
  • என்.‌ஹெச்.10 (ஹிந்தி்)
  • நீல் பூபாளம்
  • அனுஷ்கா சர்மா
  • இயக்குனர்: நவ்தீப் சிங்
13 மார், 2015 - 14:57 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » என்.‌ஹெச்.10 (ஹிந்தி்)

அனுஷ்கா சர்மா, நீல் பூபாளம், தர்சன் குமார்

டைரக்டர் : நவ்தீப் சிங்

தயாரி்ப்பாளர் : விக்கிரமாதித்யா மோத்வானே, அனுராக் காஷ்யப், விகாஷ் பால், அனுஷ்கா சர்மா, சுனில் லுல்லா, கிருஷிகா லுல்லா

இசை : அனிர்பன் சக்ரவர்த்தி, சஞ்சீவ்-தர்ஷன், அயுஷ் ஸ்ரெஸ்தா, சவேரா மேத்தா, ஷமிரா கோபிகர்


அனுஷ்கா சர்மா, தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள படம் என்.ஹெச்.10. ஒரு இளைய தம்பதி குறித்த கதை. பெரும் கோடீஸ்வர தம்பதியான மீரா (அனுஷ்கா) மற்றும் அர்ஜூன் (நீல் பூபாளம்), வார விடுமுறையை கழிக்க மலை வாசஸ்தலத்திற்கு காரில் சென்று கொண்டிருக்கின்றனர். படம் நல்லா இருக்கா? இல்லையா என்பது குறித்து இனி காண்போம்..


குர்கானில் பணியாற்றி வரும் ஐ.டி.தொழில்நுட்ப ஊழியர்களான மீரா (அனுஷ்கா) மற்றும் அர்ஜூன் (நீல் பூபாளம்), பெங்களூருவை சேர்ந்தவர்கள். ஒருநாள் மீரா, வேலையை முடித்துவிட்டு திரும்பி வரும்போது, மர்மகும்பலால் கொடூரமாக தாக்கப்படுகிறாள். மீராவிற்கு மனநிறைவு மற்றும் சிகிச்சை அளிக்கும் பொருட்டு, ஒரு ரிசார்ட்டிற்கு அர்ஜூன் அழைத்து செல்கிறார். காரில் சென்று கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. விடுமுறைக்காக ரிசார்ட் சென்ற சம்பவம், அவர்களுக்கு திகிலூட்டும் சம்பவமாக மாறியது. அதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டனர். குழந்தை கடத்தல் கும்பல், ஹோட்டலில் பெண் குழந்தையை கடத்த முயலும் போது, அர்ஜூன் அக்குழந்தையை காப்பாற்றுகிறார். இந்த நிகழ்வே, அர்ஜூனின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.


நவ்தீப் சிங், மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தை தந்திருக்கிறார். படத்தின் கதை சிறப்பாக இருந்தபோதிலும், வலுவற்ற திரைக்கதையால், பின்பாதி தடுமாற்றம் காண்கிறது. படத்தின் காட்சிகள், யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டு இருப்பதால், படம் பார்ப்பவர்களை வசீகரிக்கவில்லை. படத்திற்கு பெரும் பலமாக பின்னணி இசை உள்ளது. படம் பார்ப்பவர்களுக்கு த்ரில் ஏற்படுத்தும் பணியை ஒளிப்பதிவாளர் செவ்வனே மேற்கொண்டுள்ளார். கலை மற்றும் எடிட்டிங் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.


அனுஷ்கா சர்மாவின் நடிப்பு அருமையாக உள்ளது. படத்தில் தனது தேர்ந்த நடிப்பை, அனுஷ்கா சர்மா வெளிப்படுத்தியுள்ளார். நீல் பூபாளமும், அனுஷ்காவும், போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கி்ன்றனர். படத்தில் குறைந்த நேரமே வந்தாலும், தீப்தி நாவலின் கேரக்டர் குறிப்பிடத்தக்கவகையில் உள்ளது.


விடுமுறையை கழி்க்க தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது, இப்படம் உங்களது நினைவிற்கு நிச்சயம் வரும்...


ரேட்டிங் : 3/5



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in