Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மாசி

மாசி,
01 ஏப், 2012 - 16:56 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மாசி

 

தினமலர் விமர்சனம்



வெறும் இன்ஸ்பெக்டராக மட்டுமே இருந்து கொண்டு இண்டர்நேஷனல் டான்-களையும், டன்டனக்கா ஆடச் செய்யும் நேர்மையான போலீஸ் அதிகாரி "மாசி" எனும் ஆக்ஷ்ன் கிங் அர்ஜூன்! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என செயல்படும் அர்ஜூன், அதனால் குடும்பம் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை இழந்தாலும், அதுபற்றி கவலைப்படாமல், நேர்மை ஒன்றை குறிக்கோளாக அதிரடி பண்ணி அக்யூஸ்ட்டுகளை வெளுத்து வாங்குகிறார்.

ஒரு கட்டத்தில் அவரது நேர்மையே அவரது காக்கிசட்டை யூனிபார்முக்கும் உலை வைக்க, அதில் கொதித்தெலும் அர்ஜூன், இண்டர்‌நேஷனல் தாதா நாகா எனும் பிரதிப் ராவத்தின் போலீஸ் கையாள் போன்று நடித்துக் கொண்டே பாலாசிங், "தூள்" சகுந்தலா, பொன்னம்பலம், சந்தானபாரதி, கோட்டா சீனிவாசராவ், பிரதிப்ராவத் என அரை டஜனுக்கும் மேற்பட்ட போலீஸீலும், வெளியிலும் உள்ள வில்லன்களை போட்டுத்தள்ளுவதுடன் ஹேமா, அர்ச்சனா எனும் இரண்டு நாயகிகளுடன் டூயட் பாடுவதும் தான் மாசி படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!

வழக்கமான அர்ஜூன் பட பார்முலா கதைதான் என்றாலும், அதை கலக்கலாக எழுதி, இயக்கி இருக்கும் விதத்தில் கவருகிறார் இயக்குநர் ஜி.கிச்சா!

அர்ஜூன் வழக்கம் போலவே, போலீஸ் அதிகாரியாக நம்பமுடியாத அளவிற்கு புகுந்து விளையாடியிருக்கிறார். நாயகிகள் ஹேமா, அர்ச்சனா தலா இரண்டு டூயட் பாடிப்போவதோடு சரி! ஆக்ஷ்ன் படத்தில் அவர்களுக்கு வேறென்ன வேலை...?!

இண்டர்நேஷனல் வில்லன் தாதவாக பிரதிப்ராவத், பொன்னம்பலம், கோட்டா சீனிவாஸராவ், சந்தானபாரதி, கவுதம், பாலாசிங், "தூள்" சகுந்தலா, மயில்சாமி உள்ளிட்டவர்கள் தங்களை பங்கை சரியாக செய்துள்ளனர்! அதிலும் மயில்சாமி - அர்ஜூன் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் ஹைலைட்! எஸ்.கே.பூபதியின் ஒளிப்பதிவு,  தினாவின் இசை இரண்டும் நச்!

மொத்தத்தில் ஜி.கிச்சாவின் இயக்கத்தில், "மாசி" - "மாஸ்-சி(னிமா)!"



-------------------------------------------------------------------



கல்கி சினி விமர்சனம்




* கோடம்பாக்கத்தின் டமால் டுமீல் கதை. அதாங்க போலீஸும், ரௌடியும் என்கவுண்டரில் சந்திச்சுக்கறாங்க!

* ஆக்ஷன் கிங்(?) அர்ஜுனுக்கு போலீஸ் வேடம் புதிதில்லை. எனினும், முகத்தின் இறுக்கம்; வசனத்தின் நறுக் சுருக்; மூன்றாவது கையாக எப்போதும் கையிலிருக்கும் துப்பாக்கி... வேறுபட்ட அர்ஜுனைக் காண்பிக்கிறது.

* எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ஃபார்முலாவோடு அர்ஜுன் ரெண்டு எதிரிகளையும் போட்டுத் தள்ளுவார் என்பது, சாதாரண ரசிகனுக்குக்கூட தெரிந்த விஷயம்தானே அப்பு... அப்புறம் எங்க இருக்கு கதையில் ட்விஸ்ட்?

* பிரதிப் ராவத், பொன்னம்பலம்... இருவரும் பண்ணுற வில்லத்தன சேஷ்டை ரசிக்கவும்... சிரிக்கவும் வைத்தாலும்... லாஜிக் என்னாச்சு லாஜிக்!?

* பார்த்தவுடனே ரௌடிகளைப் போட்டுத் தள்ளினா அப்புறம், கோர்ட் எதுக்கு; விசாரணை எதுக்கு?

* எடுத்தவுடனே என்கவுன்டர், பார்த்தவுடன் படார்னு அடி என காட்சிக்குக் காட்சி அர்ஜுன் ஆக்ஷன் காட்டுவது இவர்தான் படத்துக்கு வில்லனோ என்று எண்ண வைக்கிறது! நாயகி ஹேமா, அர்ச்சனாவோடு டூயட் பாடுவதால் ஹீரோ என்று கன்பார்ம் செய்கிறார்!

* அசந்தால் பார்வையாளர்களையும் சுட்டு விடுவாரோ என்கிற அளவுக்கு, பின்னணி இசையும் மீறி துப்பாக்கி வெடிக்கும் சத்தம்தான் அதிகம்!

* இசை, பாடல்கள், எடிட்டிங்... எல்லாம் இருக்கு; ஆனா இல்லை!

* மருந்துக்குக் கூட காமெடி இல்லையே ஏன்... ஏன்?

* டி.எஸ்.பி.யை ரௌடிகள் சுட்டு விடுகிறார்களே, அது சாத்தியமா... இயக்குனர் கிச்சா ஸார் தான் சொல்லணும்!



வாசகர் கருத்து (9)

A.Sundharrajan - chinnasalem,இந்தியா
09 ஏப், 2012 - 07:43 Report Abuse
 A.Sundharrajan fantastic movie by ARJUN by fan of arjun ,SUNHarjun
Rate this:
அ.ஜேம்ஸ் - kallakurichi ,இந்தியா
31 மார், 2012 - 12:23 Report Abuse
 அ.ஜேம்ஸ் அற்புதமான படம். ஆங்கில படம் பாசை. அர்ஜுன் சார் ஏமாற்றவில்லை.
Rate this:
கௌதம் - trichy,இந்தியா
26 மார், 2012 - 12:01 Report Abuse
 கௌதம் மாசி என்றும் மாஸ் தான்
Rate this:
kokulan - jaffna,twon,இலங்கை
26 மார், 2012 - 11:35 Report Abuse
 kokulan அர்ஜுன் action king என்று நிருபிக்கும் படம். உலக தரத்திலான அதிரடி படம், எத்தின 6 பேக் கிரோகள் வந்தாலும் ரியல் கிரோ என்பதை நிருபிக்கும் படம்.இது ஒரு அதிரடி ஆக்ஷன் படமா.
Rate this:
Durai - Jurong east,சிங்கப்பூர்
25 மார், 2012 - 19:29 Report Abuse
 Durai அர்ஜுன் என்றாலே எல்லாருக்கும் ஒரு எதிர்பார்பு இருக்கும்,இந்த படத்தில் வழக்கம்போல இருப்பதால் படம் சப்புன்னு போச்சு,கதாநாயகி அழகு,உடை,இளமை ரசிக்கும்படி இருக்கு,மற்றபடி சுமார்தான்
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in