Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் நற்பணி மன்றம்

எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் நற்பணி மன்றம்,MGR Sivaji Rajini Kamal Narpani mandram
  • எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் நற்பணி மன்றம்
  • பிற நடிகர்கள்: ராபர்ட்,ராம்ஜி,பவர்ஸ்டார்,பிரேம்ஜி
  • பிற நடிகைகள்: வனிதா, ஐஸ்வர்யா
  • இயக்குனர்: , ராபர்ட்
09 மே, 2015 - 15:36 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் நற்பணி மன்றம்

தினமலர் விமர்சனம்


பிரபுதேவா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட நடன இயக்குநர்கள் இயக்குநர் அவதாரம் எடுத்து பெரிய அளவில் ஜெயித்து விட்டதால் நாமும் டைரக்டர் கோதாவில் குதிப்போம்...என டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், அவசரகதியில் டைரக்டர் ஆகியிருக்கும் படம் தான் "எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்" திரைப்படம்!. புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக, ராபர்ட்டிற்கு இதெல்லாம் தேவையா...? என கேட்கவும் வைத்திருக்கிறது இப்படம்!


கதைப்படி., சதாசர்வகாலமும் குடிக்க மட்டும் காசு வைத்திருக்கும் நான்கு ஏழை இளைஞர்கள் இந்த சமூகத்தில் பணக்காரர்களுக்கு கிடைக்கும் அந்தஸ்தும், அங்கீகாரமும் பார்த்து ஒரு போதை இரவில் எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல் என 4 நடிகர்களின் முகம் பதித்த முகமூடிகளை அணிந்து கொண்டு ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம்.களை வரிசையாக கொள்ளை அடித்து ஏழைகளுக்கு மேற்படி பிரபல நடிகர்களின் பெயரிலேயே நற்பணி மன்றங்கள் அமைத்து உதவிட களம் இறங்குகின்றனர். அவர்களின் திட்டம்., திட்டமிட்டபடியே நிறைவேறியதா? சட்டம் அவர்களை குற்றவாளிகளாக கூண்டில் தள்ளுகிறதா..? என்பதுதான் "எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்" படத்தின் முக்காலும் முழுசுமான கதை! இந்த கதையை காமெடியாகவும், புதுமாதிரியாகவும் சொல்கிறேன் பேர்வழி...என ரசிகர்களை இதுவரை யாரும் கடுப்பேற்றாத அளவிற்கு கடித்து குதறிவிடுகிறார் இயக்குநர் ராபர்ட் என்பதுதான் இதில் வருத்தப்படக்கூடிய அளவிலான ஹைலைட்!.


ராபர்ட், சுரேஷ், மனோஜ், கும்கி உள்ளிட்ட நான்குபேர் நாயகர்கள், நடிக்கிறேன் பேர்வழி...என இந்த நால்வரும் பண்ணும் ராவடி பத்தாமல், கண்ணன் அலைஸ் கண்ணம்மா எனும் திருநங்கை லுக்கில் வந்து வெள்ளரிக்கா புகழ் ராம்ஜி வேறு வெறுப்பேற்றுகிறார். கையேந்திபவன் சில்க்காக வரும் சந்திரிகா - செம கிக், ஆனால் அவருக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படாதது குறை!


பிரேம்ஜி, பவர்ஸ்டார் சீனிவாசன், ஜாக்குவார் தங்கம், நிரோஷா, கணேஷ்கர், பாண்டு, ரவிகாந்த், வனிதா, நாவீத், ஐஸ்வர்யா, ஸ்பீடு செல்வம் என ஏகப்பட்டட நட்சத்திரங்கள் நடித்திருந்தும் எல்லோரது உழைப்பும் வீணடிக்கப்பட்டிருக்கிறது.


ஸ்ரீயின் இசையில் இரண்டு பாடல்கள் ஆறுதல்! சரவணனின் ஒளிப்பதிவு ஓ.கே!. நடிகை வனிதாவின் கதை, திரைக்கதை, வசனம் எந்தகாலத்துல இருக்கீங்க மேடம்...?! என கேட்கவைத்தாலும் ஓ.கே. எனும் அளவில் இருக்கிறது. அதை ராபர்ட் படம் முழுக்க "த்தூ,த்தூ..." என சொல்லி நடித்தபடி படமாக்கி இருக்கும் விதமும், ஆர்.ஜி.ஆனந்த் படத்தொகுப்பு செய்திருக்கும் விதமும் கொடுமை!. அடிக்கடி பின்னணியில் ஹைபிச்சில் ஒரு குரல் "எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்" என்று காட்டுக்கத்து கத்தினால் படம் ஓடிவிடுமா.?! என்பதற்கு இயக்குநர் ராபர்ட் தான் பதில் சொல்ல வேண்டும்! சர்ச்சில் பாதிரியார் பவர்ஸ்டார் தலைமையில் நடக்கும் ஆணுக்கும்...ஆணுக்குமான திருமணம், சரக்கு அடித்தபடி சர்ச்சின் கூரையில் நின்று தற்கொலை செய்ய முயலும் வனிதா...உள்ளிட்ட அபத்தங்களையும் தவிர்த்துவிட்டு பார்த்தாலும் "எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்" படத்தை அவர்களது ரசிகர்களே மன்னிக்க மாட்டார்கள்!


மொத்தத்தி்ல், "எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்" - இயக்குநர் ராபர்ட்டை ஒருபோதும் தமிழ் சினிமா ரசிகர்கள் மன்னிக்கமாட்டார்கள்!!.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in