Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

நாள் நட்சத்திரம்

நாள் நட்சத்திரம்,
  • நாள் நட்சத்திரம்
  • சஞ்ஜெய்
  • கிருஷ்ண ஸ்ரீ
  • இயக்குனர்: சக்தி சி.என்.ஆர்.
22 ஏப், 2009 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நாள் நட்சத்திரம்


தினமலர் விமர்சனம்


விரும்பிய பெண் கிடைத்தால் விரும்ப தகாத செயல்களில் ஈடுபடும் ஆசாமிகளும் நல்ல குடும்பஸ்தன் ஆவான் எனும் கருத்தை சொல்லி வெளிவந்திருக்கும் படம்தான் நாள் நட்சத்திரம்!

கதைப்படி ஐந்தாறு பேர் கொண்ட அடாவடி கும்பலின் தலைவன் புதுமுகம் சஞ்ஜெய்.எஸ்.,க்கு அந்த ஊர் பெரிய மனிதரின் பெண் கிருஷ்ணய்யர் கிருஷ்ணஸ்ரீ (இவரும் புதுசுதான்) மீது அப்படி ஒரு அளவில்லா காதல். ஆனால் கலெக்டர் ஆகும் லட்சியத்துடன் உள்ளூர் பள்ளியில் படிக்கும் கிருஷ்ணஸ்ரீக்கு சஞ்ஜெய் என்றாலே கசக்கிறது. விடுவாரா சஞ்ஜெய்? பொம்பளை வேஷம் போடுகிறார். உச்சகட்டமாக கோயிலில் கண்ணை மூடி சாமி கும்பிடும் கதாநாயகி கிருஷ்ணஸ்ரீ கழுத்தில் அவசரத் தாலி கட்டி அவரை மனைவியாக அடைகிறார். அய்யோ... பாவம்..! அப்புறம்...? ஊர் ஒதுக்கி வைக்கிறது. ஹீரோ சஞ்‌ஜெய்யை மட்டுமல்ல... உடந்தையாக இருந்ததாக சொல்லி ஹீரோயின் கிருஷ்ணஸ்ரீயையும்தான். இருவரும் திருமணம் ஆனாலும் இருமணமாக சென்னைக்கு கிளம்பி வந்து என்ன செய்தார்கள்? எப்படி இணைந்தார்கள் என்பதே மீதிக்கதை!

ஹீரோவாக புதுமுகம் சஞ்செய்.எஸ், கதாநாயகராக நடிப்பதற்காக எந்த பயிற்சியும், முயற்சியும் முறையே பெறாமல் நடித்திருப்பது ஆரம்பக் காட்சியிலேயே முகம் சுளிக்க வைத்து விடுகிறது. நடிக்க வேண்டும் என்ற ஆசை உடையவர் அதற்கான உடற்பயிற்சிகளையும் ஒழுங்காக கடைபிடித்திருந்தால் தேறி இருப்பார்.

ஹீரோயின் கிருஷ்ணஸ்ரீயும் ஹீ‌ரோவிற்கு ஏற்ற தேர்வு! சோர்வு!! இந்த இருவரின் குறைகளையும் மனோரமா, டெல்லிகணேஷ், கொட்டாச்சி, குள்ளமணி உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்கள் நன்றாக நடித்து நிறை செய்திருப்பது ஆறுதல்! கே.ஜி.மாதவனின் ஒளிப்பதிவு ஓ.கே.! ராஜ்பவனின் இசையில் மல்லி மல்லி, கலக்கு கலக்கு... உள்ளிட்ட பாடல்கள் படத்திற்கு பலம்.

கிராமத்து காதலை கிராமிய மணம் கமழ நாள் நட்சத்திரம் படம் மூலம் சொல்ல முயற்சித்து நல்ல நட்சத்திரங்களை தேர்வு செய்யாமல் கோட்டை விட்டிருக்கிறார் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என பல பொறுப்புகளை ஏற்றிருக்கும் புதியவர் சக்தி சி.என்.ஆர்.

நாள் நட்சத்திரம் : துருவ நட்சத்திரமும் அல்ல, வால் நட்சத்திரமும் அல்ல.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in