Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

எக்ஸ்மென் வுல்வெரீன்-2 (ஹாலிவுட்)

எக்ஸ்மென் வுல்வெரீன்-2 (ஹாலிவுட்),x men wolverine 2
  • எக்ஸ்மென் வுல்வெரீன்-2 (ஹாலிவுட்)
  • நடிகர்: ஹ்யூ ஜாக்மேன்
  • ..
  • இயக்குனர்: ஜேம்ஸ் மேன்கோல்டு
03 ஆக, 2013 - 15:31 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » எக்ஸ்மென் வுல்வெரீன்-2 (ஹாலிவுட்)

தினமலர் விமர்சனம்


இறவா வரம் பெற்ற லோகன், இறக்கும் தருவாயில் இருக்கும் நண்பனைக் காண டோக்கியோ போக... நண்பனின் பேத்தியைக் காக்கும் பொறுப்பு அவன் தலை மேல் விழுவதுதான்... தி வுல்வெரின். ‘புல்லட் ரயில்’ வேகத்தில் ஒரு ஆக்ஷன் படம்.

மனைவி ‌ஜேனை (ஃபேம்கி ஜேன்சன்) சுட்டுக்கொன்றது லோகன் (ஹக் ‌ஜாக்மேன்). அதனால், ஆறாத்துயரத்தில் பனி வெளியில் அலைந்து கொண்டிருக்கிறான். நாகசாகி அணுகுண்டு வீச்சில் உயிர் பிழைத்ததும், தன் நண்பன் ஒருவனைக் காப்பாற்றியதும், கெட்ட கனவாக அடிக்கடி வந்து அவனை அலைக்கழிக்கிறது. இறவா வரம் பெற்ற லோகன், சாவை எதிர்ந‌ோக்கி காத்திருக்கிறான். ஒரு மதுக்கூடத்தில் அவனைத் தேடி வருகிறாள் யூக்கியோ (ரிலா ஃபுகுஷிமா). நாகசாகியில் அவன் காப்பாற்றிய நண்பன் யஷிடா (ஹருஹிகோ யமனவுச்சி), டோக்கியோவில் மரணப்படுக்கையில் கிடக்கிறான். லோகனை அழைத்துப் போகவே யூக்கியோ வந்திருக்கிறாள். டோக்கியோ செல்லும் லோகனிடம் ‘‘உனக்கு சாவு வேண்டும். எனக்கு வாழ்வு வேண்டும். உன் அற்புத சக்தியை, என் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்த கருவியால் எடுத்துக் கொள்கிறேன். உன் ஆசைப்படி நீ இறப்பாய்! நான் சாகாவரம் பெறுவேன்’’ என்கிறான் யஷிடா. இதற்கு உடன்படாத லோகனின் இதயத்தில், ஒரு வைரஸ் கிருமி விதைக்கப்படுகிறது. லோகனின் சக்தி குறைகிறது. மறுநாள் யஷிடா இறக்க, சொத்து முழுவதும் அவன் பேத்தி மரிக்‌கோவுக்கு (டாவோ ஒகமோட்டோ) செல்கிறது. பெரும் சொத்துக்காக மரிக்‌கோ குறி வைக்கப்படுகிறாள். லோகன் வுல்வரினாக மாறி, மரிக்‌கோவை காப்பாற்றுகிறான். சுபம்.

சினம் கண்களில் தெறிக்க, விரல் இடுக்குகளிலிருந்து கத்திகள் புறப்பட, ஹக் ஜாக்மேன் வுல்வெரினாக மாறி அதிரடிக்கும் சண்டைகள் க்ளாஸ். முப்பரிமாணத்தின் உச்சம், காட்சிக்கு காட்சி ‘வாவ்’ சொல்ல வைக்கிறது. அமீர் மோக்ரியின் கேமரா ‌கோணங்கள் கொண்டாடப்பட வேண்டியவை! இயக்குனர் ஜேம்ஸ் மேன்கோல்ட் பாராட்டப்பட வேண்டியவர்.

மொத்தத்தில் ‘தி வுல்வெரின்’ - ’மிரட்டல்’

ரசிகன் குரல்: வரவர இங்கிலீஷ் படத்துல ‘குஜால்’ மேட்டர் குறைஞ்சுட்டே வருது மச்சி!




----------------------------------------------



நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகு‌தியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...

வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்

அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com



தன்னோட பழைய ஞாபகங்கள் எல்லாம் மறந்துட்டா தேவலைன்னு நினைக்குறாரு ஹீரோ. இவருக்கு பல அற்புத சக்திகள் இருக்கு. எது போனாலும் பரவாயில்லைன்னு ஹீரோ தன் உயிரை தன் கிட்டேயே வெச்சிருக்காரு. இவரு ஒரு ரவுடி கேங்கோட மோத நேரிடும்போது எதார்த்தமா அங்கே வந்த பதார்த்தமா ஹீரோயினைப்பார்க்கறாரு. முன் பக்கமா? முதுகுப்பக்கமா? என்று ஒரு முடிவுக்கே வரமுடியாத சைனீஷ் ஃபிகர் தான் அது. ஆனாலும் ஹீரோ விடலையே? விடாம பின்னால போறாரு.

ஹீரோ, ஹீரோயினை லவ் பண்ற மேட்டர் ஹீரோயினோட அப்பாவுக்கு தெரிஞ்சுடுது. ஹீரோவை பார்க்க தடை விதிக்கிறார். அடியாளுங்களை வெச்சு மிரட்டறாரு. ஹீரோவைக்கொல்ல ஆள் நியமிக்கறார். ஹீரோ எப்படி ஜெயிக்கறார் என்பதே கதை.

இந்த பழைய கதையை அப்டியே சொன்னா சுவராஸ்யம் கம்மின்னு ஒரு கிளைக்கதையும் இருக்கு. இவரோட சாகாவரத்தை ஆடித்தள்ளுபடி எக்சேஞ்ச் ஆஃபர் மாதிரி தனக்கு மாத்திக்குடுன்னு கேட்கும் ஒரு டொக்கு தாத்தா. அதுக்கு டக் பேத்தி. எதிர்காலத்தை தன்னோட கனவு மூலமா கண்டு பிடிக்கும் உமா சங்கருக்கு பேத்தி இன்னொரு சைனீஸ் ஃபிகர். அப்டியே இவங்களைச்சுத்தி சுத்தி கதை.

ஹீரோ ஹியூ ஜாக்மேன், வாரணம் 1000 சூர்யா மாதிரி, 555 பரத் மாதிரி 6 பேக், 8 பேக் பாடியோட எப்பவும் கமல் மாதிரி பாடியை காட்டிட்டே விரைப்பா வர்றாரு. இவருக்கு 2ஜோடி (லபோதிபோ லபோதிபோ). ஆக்‌ஷன் காட்சிகளில் அப்ளாஷை அள்ளிக்கறார். இவருக்குன்னு ஒரு ஆடியன்ஸ் கைதட்ட ரெடியா இருக்காங்க. ஹீரோயின் பேரை கவனமா படிங்க. தவறான உச்சரிப்பால் பப்ளிக்ல கெட்ட பேரு வாங்கிக்காதீங்க TAO OKAMOTO . 



இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள்

1. படத்துல மொத்தமா சாரி ஒல்லியா 12 பொண்ணுங்க. எல்லாமே விதவிதமான பெயிண்ட் டப்பா மாதிரி புல் மேக்கப்போட வந்தாலும் ரசிக்கும்படி இருக்குங்க (நாம எந்தக்காலத்துல யாரை ரசிக்காம விட்டிருக்கொம்?)

2. ஓப்பனிங்க் ஷாட்டில் துரத்தும் பிரம்மாண்டமான வெடித்த மலைப்பகுதியை விட்டு விலகி ஓடும் ஹீரோவின் ஓட்டம் அபாரம். கம்ப்யூட்டர் கிராஃபிகஸ் கலக்கல்.

3. சாகா வரம் பெறத்துடிக்கும் தாத்தா அந்த முள்படுக்கைல எந்திரிக்கும்போது செம. ஆர்ட் டைரக்‌ஷன் அபாரம்.

4. படத்தின் 20வது நிமிடத்தில் வரும் அந்த 18 நிமிட சேசிங்க் காட்சி அற்புதம். வெல்டன் ஸ்டண்ட் மாஸ்டர்.

5. செந்தூரப்பூவேவை எல்லாம் தூக்கி சாப்பிடும் ஒரு ரயில் ஃபைட் இருக்கு. அபாரமான வேகத்தில் செல்லும் புல்லட் ட்ரெயினில் நடக்கும் காட்சி அதி அற்புதம் (இதே தமிழ்ப்படம்னா ரயில் ஃபைட் நடக்கும்போது மட்டும் மெதுவா அன்னக்கொடி மாதிரி சாரி அன்னப்பறவை மாதிரி போகும்)

6. வில்லி ஒரு காட்சியில் பேனாவில் தன் நாக்கை நீட்டி விஷத்தை அதில் தடவி பேனாவால் அடியாளை கொல்லும் காட்சி மிரட்டல் (இதே நான் இந்த சீனை எடுத்திருந்தா டைரக்டா அடியாளுக்கு லிப் கிஸ் கொடுத்து அப்டியே நாக்கால் விஷத்தை செலுத்திடற மாதிரி எடுத்திருப்பேன், சீனுக்கு சீன், திகிலுக்கு திகில், டூ இன் ஒன்)

7. இந்தப்படம் 3டியில் இன்னும் செமயா இருக்குன்னு சொல்லிக்கறாங்க. நான் சாதா டியில் தான் பார்த்தேன். 100 மில்லியன் டாலர்கள் செலவாம், அடேங்கப்பா (புரொடியூசருக்கு தெரியாம டைரக்டர் எத்தனை அடிச்சாரோ?)

8. ஹீரோ தன் உடம்பில் வயிற்றுப்பகுதியில் இருக்கும் பூச்சியை எடுக்கும் சீன் இன்னும் நல்லா எடுத்திருக்கலாம் என்றாலும் பதை பதைப்பை ஏற்படுத்த தவறவில்லை.  


இயக்குநரிடம் சில கேள்விகள் 

1. எதிர்காலத்தை தன் கனவு மூலமா உணரும் தன்மை அல்லது சக்தி கொண்ட அந்த பவுடர் டப்பா தலை ஃபிகரு, ஹீரோவை ஒரு மார்க்கமா அடிக்கடி பார்க்குது. ஹீரோ தன்னை லவ்வறாரா? இல்லையா?னு புரியாம பம்முது. ஏன் எதிர்காலத்துல அவன் தனக்கா? இல்லையா?ன்னு பார்க்கலை?

2. ஹீரோ அந்த ட்ரீம் கேர்ளை 100% நம்பறாரு. இதுதான் சாக்குன்னு அந்த பவுடர் டப்பா ஏன் ரீல் விடலை? இந்த மாதிரி இந்த மாதிரி நான் தான் வருங்கால சம்சாரம் அப்டினு? இந்தான் சாக்குன்னு மேட்டரை முடிச்சிருக்கலாமே?

3.  ஹீரோவுக்கு உடம்பெல்லாம் அம்பு துளைக்க தடுமாறி வர்ற சீன் நல்லாருக்கு. ஆனா லாஜிக்கலா ஒரு குழப்பம். அவருக்கு அபூர்வ சக்தி இருந்தா அவருக்கு எதுவும் ஆகாது. சக்தி இல்லைன்னா ஆள் ஒரே அம்பில் பணால். ரெண்டும் கெட்டானா  மைனாரிட்டி ஆட்சி மாதிரி மைனாரிட்டி பவர் வர்றது வந்துட்டு வந்துட்டு, விட்டு விட்டு போக அது என்ன தமிழ் நாட்டு மின்சார வாரிய கண்ட்ரோல்ல இருக்கும் கரண்ட்டா? இந்த சீனை மகாபாரதத்துல இருந்து சுட்டுட்டாரு போல

4. தாத்தா வில்லனுக்கு அறிவே இல்லையா? தன் பேத்தி மூலமா உயிர் சக்தியை ஹீரோ கிட்டே கேட்காம டைரக்டா தானே கேட்கறாரே? ஒரு பொண்ணு கேட்டா எந்த ஆம்பளை முடியாதுன்னு மறுக்க முடியும்? 


மனம் கவர்ந்த வசனங்கள்

1.திறமைங்கறது எல்லாருக்கும் அமைஞ்சிடறதில்லை.அதனால அது அமைஞ்சவங்க அதை வளர்த்திக்கனும்.

2. நீ ஒரு டாக்டரா? ம்ம்ம். வெட்னரி டாக்டர் ஆகப்போறேன்.

3. சாகா வரம் வர்றது ஒருத்தனுக்கு சாகற கடைசி நொடில கூடக்கிடைக்கலாம். காத்திருக்கனும், பொறுத்திருக்கனும். சபாஷ் டயலாக்.

4. நவீன அறிவியலை வளர்த்துவதில் எந்த அளவு தீவிரமா இருந்தாலும் நம்ம பாரம்பரியத்தை விட்டுத்தரக்கூடாது.

5. எவன் ஒருவனுக்கு தினமும் கெட்ட கனவு வருதோ அவன் வருத்தத்துல இருக்கான்னு அர்த்தம்.

6. போர் வீரனின் கடமை எது தெரியுமா? மரியாதைக்குரிய மரணம்.

7. மேரேஜ் நிச்சயம் ஆன ஒருத்தன் இந்த ஊர்ல மத்த பொண்ணுங்களோட கில்மா பண்ணக்கூடாதுன்னு சட்டம் இருக்கு தெரியுமில்ல? நான் ஒரு மினிஸ்டர் (எல்லா ஊர்லயும் இதே கதைதானா?

8. இதை ரெசசிவ் ஜீன்ஸ்னு சொல்வாங்க. கண், புருவம், இமை, சில நடத்தைகள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கும். 

சி.பி.கமெண்ட் - படம் போர் அடிக்காம 2 மணி நேரம் போகுது. ஆனா ரொம்ப சுவராஸ்யமான காட்சிகள் மொத்தமே 20 நிமிஷம் தான். அதனால டி.வி.,ல பார்ப்பதே சாலச்சிறந்தது.



வாசகர் கருத்து (1)

30 ஜூலை, 2013 - 18:50 Report Abuse
ஆர்.சுப்பிரமனியம் முன் பக்கமா? முதுகுப்பக்கமா? என்று ஒரு முடிவுக்கே வரமுடியாத, கமண்ட் எண்டா இதுதான்யா கமண்ட் சூப்பர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in