Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மனித காதல் அல்ல

மனித காதல் அல்ல,Manitha Kadhal Alla
  • மனித காதல் அல்ல
  • நடிகர்: அக்னி
  • நடிகை:தருஷி
அக்னி எனும் புதியவர் இயக்கி இருப்பதுடன் கதாநாயகராகவும் நடித்திருக்கும் திரைப்படம் தான் ‘‘மனித காதல் அல்ல!’’
13 பிப், 2015 - 13:15 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மனித காதல் அல்ல

தினமலர் விமர்சனம்


அக்னி எனும் இளைஞர்., கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி-இயக்கி, இருப்பதுடன் கதாநாயகராகவும் நடித்து வௌிவந்திருக்கும் திரைப்படம் தான் ''மனித காதல் அல்ல!''


கதைப்படி, அறிமுக ஹீரோ அக்னி, கடவுளின் ஏஜென்டுகளில் ஒருவர்! அதாங்க தேவதூதர் மாதிரி விண்ணுலகத்தில் இருந்து மண்ணுலகத்திற்கு வந்து, கடவுளின் கட்டளைப்படி கஷ்டப்படும் குறிப்பிட்ட மானுடப்பிறவியை கஷ்டத்தில் இருந்து கை தூக்கிவிடும் நல் உள்ளம் படைத்தவர். ஒருமுறை வேலை வெட்டி இல்லாமல் விண்ணுலகில் சுற்றிக்கொண்டிருக்கும் அக்னி, கடவுளின் ஆர்டர் இல்லாமலேயே பூலோகத்தில் பெற்றோரை இழந்து அநாதையாகும் பணக்கார வீட்டுப்பெண் தருஷி எனும் நாயகியை கஷ்டத்தில் இருந்தும், அவரை சுற்றியுள்ள ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்ற கருணை உள்ளத்துடன் விண்ணுலகத்தில் இருந்து இறங்கி வருகிறார். வந்த இடத்தில் தருஷி மீது காதலும் கொள்கிறார்.


தன் கட்டளை இல்லாமல் மானுடப்பிறவிக்கு உதவப்போய் நாயகர் அக்னி, இப்படி அந்த பெண் மீது காதலும் கொள்வது கடவுளின் விண்ணுலக சட்டங்களுக்கு எதிராக இருக்கிறது. அதனால் கடவுள் கடுப்பாகிறார்... அதன்பின் அக்னி - தருஷி காதல் என்னாகிறது என்பது தான் ''மனித காதல் அல்ல'' படத்தின் கரு, கதை, களம், காதல், எல்லாம்...!


அறிமுகநாயகர் அக்னி அப்பாவி கடவுள் தூதர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். அறிமுகநாயகி தருஷி, ஹோம்லி - கிளாமர் இரண்டிலும் 'பிப்டி-பிப்டி' ருசி!


நாசர், முத்துக்காளை, கிரேன் மனோகர், தேவிகா உள்ளிட்ட நட்சத்திரபட்டாளமும் விண்ணுக்கும், மண்ணுக்கும் நடித்திருக்கிறார்கள்.


ஷமீரின் இசை, பாரதிராஜாவின் ஔிப்பதிவு, இத்ரீஸின் படத்தொகுப்பு உள்ளிட்டவைகளும் இருக்கிறது. ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் இப்படத்தை எழுதி, இயக்கி, கதாநாயகராகவும் நடித்திருக்கும் அக்னி, நாடகம் மாதிரியும் இல்லாமல், சினிமா மாதிரியும் இல்லாமல், விளையாட்டுத்தனமாக எடுத்திருப்பதால், ''மனித காதல் அல்ல'' - ரசிகர்களின் மனம் கவர்ந்த கதை என்றாலும், ''மனம் கவர்ந்த படம் அல்ல!''



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in