Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - ஈ

09 மார், 2021 - 12:39 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma-:-E

படம் : ஈ
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : ஜீவா, நயன்தாரா, கருணாஸ், பசுபதி, ஆசிஷ் வித்யார்த்தி
இயக்கம் : எஸ்.பி.ஜனநாதன்
தயாரிப்பு : சூப்பர்குட் பிலிம்ஸ்

மக்களுக்கும், அரசுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது, கலைஞனின் கடமை. மூன்றாம் உலகப்போர், வெடிகுண்டு, அணுகுண்டு ஆயுதங்களால் நடக்காது; 'பயோ-கெமிக்கல்' ஆயுதத்தால் தான் நடக்கும் என, அறிஞர்கள் கூறுவர். எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய முதல் படம், இயற்கை. இது, தேசிய விருது பெற்றது. பிற இயக்குனர் போல காதல், 'ஆக் ஷன்' என களமிறங்காமல், சமூகத்திற்கு தேவையான, 'பயோ-கெமிக்கல்' கொடூரம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார், எஸ்.பி.ஜனநாதன்.

இதுவரை தமிழ் சினிமா பார்க்காத கதைக்களம், கம்யூ., சித்தாந்தம், விறுவிறுப்பான திரைக்கதை என, வேறு லெவல் படத்தைக் கொடுத்திருந்தார், இயக்குனர். 'கிராபிக்ஸ்' காட்சிகளில், கூடுதல் சிரத்தைக் காட்டியிருக்கலாம்.

டாக்டரான ஆசிஷ் வித்யார்த்தி, கெமிக்கல் ஆயுதங்களைத் தயாரித்து, அதை, ஏழை மக்கள் மீது செலுத்தி பரிசோதித்து, 'கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கு விற்கிறார். ஆசிஷ் செய்யும் கொடூரம் பற்றி அறிந்த, போராளியான பசுபதி, அவரைக் கொல்ல முயற்சிக்கிறார். இதற்கு இடையில், சின்ன சின்ன திருட்டில் ஈடுபடும் ஜீவா குறுக்கிடுகிறார். தான் கையிலெடுத்த போராட்டத்தை, ஜீவாவின் கையில் ஒப்படைத்து, இறக்கிறார், பசுபதி. இதையடுத்து, ஜீவா என்ன செய்தார் என்பது தான், கிளைமேக்ஸ்!

ஜீவாவின் லோக்கல் ரவுடி கதாபாத்திரமும், பசுபதியின் போராளி கதாபாத்திரமும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தன. ஏழை மக்களை, புதிய மருந்துகளைச் சோதித்துப் பார்க்கப் பயன்படுத்தும் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் சதியைப் பற்றி பேசியது, ஈ. இது விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? இம்சை அரசன் 23ம் புலிகேசிமறக்க முடியுமா? இம்சை அரசன் 23ம் ... மறக்க முடியுமா? - சம்திங் சம்திங் (உனக்கும் எனக்கும்) மறக்க முடியுமா? - சம்திங் சம்திங் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
01 டிச, 2021 - 17:11 Report Abuse
எதிர்க்குரல் உ பில அறுபது பச்சிளம் குழந்தைகள் ஒரே நேரத்தில் மாண்டது கூட இதை போன்ற ஒரு தவறான மருத்துவ ஆராய்ச்சிதான் காரணம் யாரும் கேள்வி கேட்காமல் இருக்கவே இஸ்லாமிய மருத்துவரை கைது செய்து அனைவரையும் மத பாகுபாடு ஆராய்ச்சியில் தள்ளி விட்டு பிரச்சினையயை ஊத்தி மூடி விட்டார்கள். இது வரை அதெப்படி அன்று பிறந்த அத்தனை குழந்தைகளுக்கும் ஆக்சிஜென் தேவை ஏன் என்ன காரணத்தால் தேவை ஏற்பட்டது என்று எந்த அறிவாளியும் கேள்வி கேட்கவே இல்லை. இருக்கவே இருக்கு கங்கண அது எதாவது உளறினாள் என்றால் போதும் மக்களை மழுங்கடித்து விட முடிக்கும் உபி மோடி அரசுகள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in