Advertisement

சிறப்புச்செய்திகள்

விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - ப்ரியமுடன்

06 டிச, 2020 - 07:26 IST
எழுத்தின் அளவு:
Marakkamudiyuma---Priyamudan

படம் : ப்ரியமுடன்
வெளியான ஆண்டு : 1998
நடிகர்கள் : விஜய், கவுசல்யா, நாசர்
இயக்கம் : வின்சென்ட் செல்வா
தயாரிப்பு : லட்சுமி மூவி மேக்கர்ஸ்

'எல்லா படத்திலும், ஒரே மாதிரி தான் இருப்பார்' என, விஜயை விமர்சனம் செய்வர். இதற்கிடையில், 'சைக்கலாஜிக்கல் த்ரில்லர்' படத்தில் நடித்து, வேறொரு பரிணாமத்தைக் காட்டினார், விஜய். அந்த படம், ப்ரியமுடன்.

சந்தர்ப்ப சூழ்நிலையில், தன் நண்பனின் பெயரில் அறிமுகமாகி, கவுசல்யாவை காதலிப்பார் விஜய். இந்த உண்மை வெளியே தெரிந்தால், காதல் கனவாகிவிடும் என்பதால், அது தொடர்பாக சில கொலைகளை செய்வார். போலீசார், குற்றவாளியை தேட, விஜயும், அவரின் காதலும் என்னவானது என்பது தான், படத்தின் க்ளைமேக்ஸ்!

இப்படத்திற்கு பின், 'ப்ரியமுடன் விஜய்' என, ஆட்டோகிராப் போட துவங்கினார். அந்த அளவிற்கு, இப்படத்தை நேசித்தார், விஜய். பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை படங்கள் வழியாக, மென்மையான ஹீரோ என்ற அடையாளத்தை, விஜய் பெற்றிருந்தார். அந்நேரத்தில், வில்லத்தனம் செய்யும் ஹீரோவாக, ப்ரியமுடன் படத்தில் நடித்தார்.

'உன் கூட வாழத் தான் முடியல... உன் மடியிலாவது செத்துப் போறனே...' என்ற, க்ளைமேக்ஸ் டயலாக், கதாபாத்திரத்தின் தன்மையை எடுத்துக் காட்டியது. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, மீனாவை அணுகினர். கால்ஷீட் பிரச்னை காரணமாக, கவுசல்யா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

திரைப்பட கல்லுாரி மாணவரான, வின்சென்ட் செல்வாவிற்கும், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனுக்கும், இது தான் முதல் படம். தேவாவின் இசையில், 'ஒயிட்டு லகான் கோழி, பாரதிக்கு கண்ணம்மா, பூஜா வா, மவுரியா மவுரியா...' பாடல்கள், நல்ல வரவேற்பைப் பெற்றன.

நல்ல விமர்சனத்தையும், வசூலையும் பெற்ற இப்படம் கன்னடம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் சிங்கள மொழிகளில், 'ரீமேக்' செய்யப்பட்டுள்ளது. ப்ரியமுடன் வித்தியாசம் காட்டினார், விஜய்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - அவள் வருவாளாமறக்க முடியுமா? - அவள் வருவாளா மறக்க முடியுமா? - காதல் மன்னன் மறக்க முடியுமா? - காதல் மன்னன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in